ADS 468x60

23 August 2020

சமுர்த்தி வறுமைய இல்லாது செய்துள்ளதா?

வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி பணிக்குழு கடந்த வாரத்தில்; பசில் ராஜபக்ஷ அவர்களை தலைமைதாங்க, நாட்டில் சமூக முன்னேற்றம் மற்றும் அதன் நலத்திட்டங்களின் தாக்கத்தைக் கண்டறிய சிறந்த தரவு சேகரிப்புக்கு அழைப்பு விடுத்தார்.

இது ஒரு நீண்ட கால தாமதமான நடவடிக்கையாகும், இதற்காக அரசியல் கலக்காத தூய்மையான தகவல்களை திரட்டுவதன் மூலமே இதன் உண்மைத்தன்மைகளை அறியக்கூடியதாக இருக்கும்.

1994 ஆம் ஆண்டில், வறுமையை ஒழிப்பதற்கான ஒரு தேசிய மூலோபாயமாக அன்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை அரசாங்கத்தால் சமுர்தி (செழிப்பு) திட்டம் தொடங்கப்பட்டது, மேலும் சமுர்தி அமைச்சும் பிரத்தியேகமாக நிறுவப்பட்டது. தற்போதைய அரசாங்கமும் இதேபோல் திட்டத்தின் இலட்சியங்கள் மற்றும் குறிக்கோள்களுக்கு உறுதியளித்துள்ளதுடன், அதன் ஆரம்ப அனுபவங்களின் அடிப்படையில் அணுகுமுறையை மேலும் தீவிரப்படுத்தவும் மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.


இந்த திட்டம் இலங்கையின் மொத்த மக்கள்தொகையில் பத்தில் ஒரு பங்கை உள்ளடக்கியது (சுமார் 2 மில்லியன் ஏழைக் குடும்பங்கள);. இதற்கு முழுக்க முழுக்க இலங்கை அரசு நிதியுதவி அளித்துவருகின்றது.

இத்திட்டத்தின் குறிக்கோள்கள்
உற்பத்தி செயல்பாட்டில் ஏழைகளின் பங்களிப்பை உறுதி செய்வதன் மூலம் வறுமைக் குறைப்புதான் சமுர்தி திட்டத்தின் முக்கிய நோக்கம்;. ஏழைகளின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதே மூலோபாயத்தில் உள்ளார்ந்த எதிர்பார்ப்பாகும்;.

திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் பின்வருமாறு:

வருமான மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல்;
இளைஞர்கள், பெண்கள் மற்றும் பிற பின்தங்கிய பிரிவுகளை சிறு குழுக்களாக ஒழுங்கமைத்தல் மற்றும் அடிமட்ட மட்டத்தில் முடிவெடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் மேம்பாட்டு செயல்முறைகளில் பங்கேற்க அவர்களை ஊக்குவித்தல்;
நபர்கள் தங்கள் மறைந்திருக்கும் திறமைகளை வளர்த்துக் கொள்ள உதவுதல் மற்றும் உற்பத்தி வேலைவாய்ப்பு மூலம் அவர்களின் சொத்து தளங்களை வலுப்படுத்துதல்;
கிராமப்புற மட்டத்தில் கூடுதல் ஊதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க உற்பத்தி சொத்துக்களை நிறுவுதல் மற்றும் பராமரித்தல்

இவ்வாறான ஒரு நலத்திட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் 600,000 பேர்களால் சமூர்த்தியை விரிவுபடுத்த அரசு நடவடிக்கை எடுத்தது. சமுர்தி நாட்டின் மிகப்பெரிய சமூக நலத் திட்டமாகும், இது 2017 ஆம் ஆண்டில் 43 பில்லியன் துக்கீட்டில் அதன் பயனாளர்களாக ஏற்கனவே 1.4 மில்லியன் குடும்பங்களை அதன் பட்டியலில் வைத்திருந்தது. அனைத்து அரசியல் பிரச்சாரங்களிலும் வறுமை ஒழிப்பு ஒரு முக்கிய செய்தியாக இருந்தாலும், சமுர்தி திட்டம் எவ்வாறு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பதில் எம்மத்தியில் தெளிவு இல்லை.

பல ஆய்வாளர்கள், மற்றும் அரசியல்வாதிகள் கூட, இந்த திட்டத்திற்கான தேர்வு செயல்முறை அதன் நோக்கத்தினை விட குறைவாகவே உள்ளது என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர், வறுமைக் கோட்டிற்குக் கீழே இல்லாத பல குடும்பங்கள் சமுர்தி நிதியைப் பெற போட்டியிடுகின்றனர்.  இலங்கையில் வறுமையில் உள்ள குடும்பங்களில் அதிக சதவீதம் இருப்பதால், இவ்வாறான செயற்திட்டத்தினை அமுலாக்குவது கவர்ச்சிகரமானதாகவே உள்ளது.

மிகப் பின்தங்கிய ஏழைக் குடும்பங்களும் வழக்கமான வங்கிகளிடமிருந்து கடன்களைப் பெறுவது கடினம் என்பதனால் சமூர்த்தி வங்கிகளினூடாக அவற்றை இலகுவாகப் பெற்றுக்கொள்ள உதவுகிறது. அவர்களின் நிதி சேமிப்புக்கள் மோசமாக இருப்பதால், சமுர்தி பெறுநர்கள் சமுர்தி வங்கியை நோக்கி திரும்புவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது, இது அவர்களுக்கு குறைந்தளவான வட்டி விகிதத்தில் மூலதனத்தை வழங்கும், இதனால் அவர்கள் அதிக வட்க்கு கடன்பெறும் அவதி நிலையில் இருந்து விடுபடும் நிலையை உருவாக்கும்.

ஒரு நாட்டில் சமூக நலனை விரிவாக்குவது நல்லது, குறிப்பாக கொவிட்-19 இனால் பாதிக்கப்பட் குடும்பங்களுக்கு இது அவசியமானதாகும். இருப்பினும், சமுர்தி பெறுநர்களை நாம் அதிகரிப்பதில் உள்ள சிக்கல் என்னவென்றால், அவர்களுக்கான வருடாந்த நிதி ஒதுக்கீடுகளும் விகிதாசாரமாக உயர்த்தப்படாவிட்டால், அரசாங்கத்தின் நிதி இருப்பு குறைந்துவிடும். இவை கூடுதலாக, நிதி கசிவினையும் அதிகரிக்கக்கூடும், இது ஏற்கனவே கடினமான இருக்கும் அரசாங்கத்தின் பொது நிதி நிலைமையை வெகுவாகப் பாதிக்கும்.

உலக வங்கி, 2016 ஆம் ஆண்டின் தரப்படுத்தல் செயலாக்கத்தின்போது, சமுர்தி வறுமைக் குறைப்பில் சிறிய மற்றும் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது என்பதைக் கண்டறிந்தது. 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களென அடையாளம் காணப்பட்ட 20 வீதமானவர்களிடையே இந்த சமுர்த்தி உதவியானது 1.7 வீதமானவர்க்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு சென்றடைந்துள்ளது. 

கூடுதலாக, திறன் அபிவிருத்தி, மேற்கு மாகாணத்திற்கு வெளியே வேலைகள் பெற்றுக்கொள்ளுவது, சந்தை வாய்ப்புக்களை அடைந்துகொள்ளுதல்;, தொழில் முனைவோர் ஊக்குவிப்பு மற்றும் வறுமை எதிர்ப்பு கொள்கைகளுடன் இணைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப பரிமாற்றம் போன்ற பல துறைகள் உள்ளன. பெண்கள் வறுமையால் அதிக விகிதாசாரமாக பாதிக்கப்படுவதால் இவை பாலின வேறுபாடு இல்லாது இருக்க வேண்டியதும் அவசியம்.

இந்தத் தரவின் அடிப்படையில், சமுர்த்தி ஒரு வறுமை ஒழிப்புக்கு உதவும் திட்டமா அல்லது ஒரு தொழில்முனைவோர் அதனை பெறுவதற்கான வழிவகையா என்பதை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது இப்போது. அது ஒரு வறுமைத்தணிப்புத் திட்டம் எனில், சமுர்தி திட்டம் புதிய மறையில் சீர்திருத்தப்பட வேண்டும். 

அதாவது உண்மையான வறுமையில் வாடும்; குடும்பங்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு அவர்களை அந்த நிலையில் இருந்து மீட்பதற்கான ஒரு திட்டமாக இவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும், அவ்வாறு நடைமுறைப்படுத்தும் போது இப்போது சமுர்த்தி பெறுபவர்களது அளவு குறைக்கப்படலாம் அதனால் உண்மையில் வறியவர்கள் அதிக நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு அதிகரிக்கும், அதனால் இத்திட்டம் உறுதியான தாக்கத்தை ஏற்படுத்தும். 

இவ்வாறு செயலாற்றின், இந்த குடும்பங்களில் எத்தனை பேர் வறுமையிலிருந்து வெளிவருகிறார்கள் என்பதைக் சரியாக்க் கண்டறியவும், சமுர்தியை சுகாதார, கல்வி, வீட்டுவசதி மற்றும் பிற திட்டங்களுடன் இணைக்கவும், மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு முறையாக உதவுவதை உறுதிசெய்யவும் அரசாங்கம் தொடர்ந்து தரவுகளை சேகரிக்க வேண்டும். இலங்கையில் தற்போது இரண்டு மில்லியன் சமுர்தி பெறுநர்கள் உள்ளனர்.

மறுபுறம், சமுர்தி ஒரு தொழில்முனைவோர் அல்லது தொழிலை உருவாக்கும் திட்டம் என்று அரசாங்கம் தீர்மானித்தால், அது சமுர்தி வங்கி மற்றும் பிராந்திய மேம்பாட்டு வங்கியை சீர்திருத்த வேண்டும் மற்றும் அதை தொடர்புடைய திட்டங்களுடன் இணைக்க வேண்டும். நன்கு வரையறுக்கப்பட்ட இலக்குகளுடன் இத்திட்டத்தினை தெளிவான கொள்கைகளைக் கொண்டிருக்கத் தவறியது கடந்த அரசாங்கங்களின் வினைத்திறனற்ற செயல்முறையைக் காட்டுகின்றது. 

காலத்துக்குக் காலம் அரசாங்கம் முழுவதும் துண்டு துண்டாக செயலாற்றுவதும் ஒருபோதும் சமுகத்துக்கு நன்மைகளை பெற்றுத்தரப்போவதில்லை. ஆனால் 2020 இல் அமைக்கப்பட்டுள்ள புதிய அரசி ஒரு பலம் வாய்ந்த அரசாக உள்ளமை இதற்கான சாதகத்தன்மையைக் கோடிட்டுக் காட்டும் அதே வேளை, அரசியல்வாதிகள் வெளிப்படையான, திறமையான மற்றும் அடையக்கூடிய கொள்கைகள் இல்லாமல் வறுமை ஒழிப்பு என்ற போர்வையில் பொது நிதியை தவறாக வழிநடத்தி வீணாக்கக்கூடாது என்பது எமது எதிர்பார்ப்பு. புதிதாக மலர்ந்திருக்கும் இந்த அரசாங்கம் இவற்றை செவ்வனே சீரமைத்து முழுமைபெறவைக்கும் என எதிர்பார்க்கின்றோம்.

0 comments:

Post a Comment