அறிமுகம்.
சிறிது நாட்களுக்கு முன்னர் எமது நாட்டில் பெரிதாகப் பேசப்பட்ட ஒரு பிரச்சினை. நாட்டில் இரசாயன உரவகைகளுக்கு (பசளை) மற்றும் கிருமிநாசினிகளுக்கு அல்லது பூச்சிநாசினிகளுக்குப் பதிலாக சேதன அல்லது கரிம அல்லது இரசாயனமற்ற உர மற்றும் கிருமிநாசினிகளையே இனி வரும் காலங்களில் விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ குறிப்பிட்டிருந்தார். அவர் வெளிப்படையாக தனது பொருளாதார ஆலோசகர்களின் ஆலோசனையின் பேரில், நாட்டிற்கு இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை இறக்குமதி செய்வதை இலங்கை நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டமை ஒரு பாரிய பேசுபொருளாக இருந்தது. அது மக்களிடையே சாதகமாகவும் மறுபுறம் பாதகமாகவும் பரிந்துரைத்துப் பட்டி தொட்டியெல்லாம் பரவி ஒரு குழப்பத்தையே ஏற்படுத்தியது. அதைத்தான் நான் தலைப்பில் நச்சுத்தன்மையான உரங்களையும் கிருமிநாசினிகளையும் பாவிப்பது உண்மையில் ஆரோக்கியம் கிடையாது. இருப்பினும் அவற்றை உடன் நிறுத்துவது விவசாயத்துறைக்கு ஆரோக்கியம் இல்லை என்பதனையே இக்கட்டுரை ஆராய்கின்றது.