ADS 468x60

28 October 2021

பா.ம தேசியப்பட்டியல் தேவைதானா?

 நாம் நாளாந்த அரசியல் விமர்சனங்களை அவதானிக்கவேண்டியுள்ளது இன்று. புதிய அபிவிருத்தியில், அரசாங்கத்தின் பங்காளியான கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக பாராளுமன்றத்திற்கு அனுப்பப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று தேர்தல் மறுசீரமைப்புக்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவிடம் பரிந்துரைத்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் இறையாண்மையைப் பாதுகாக்கும் நோக்கில், மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கையில் 5% இனரை குறைக்க வேண்டும் என சொல்லியுள்ளனர்.

தற்போது, இலங்கையின் பாராளுமன்றம் 29 தேசியப்பட்டியல் எம்.பி.க்களைக் கொண்டுள்ளது, அவர்கள் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் கட்சிகளால் அவர்களது வாக்குகளின் பங்கைப் பொறுத்து நியமிக்கப்படுகிறார்கள், மேலும் அவர்கள் மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கையில் 12.8%ஆவர்.

03 October 2021

இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்! - தலைமைத்துவம்.

எங்கு பார்த்தாலும் தலைவர்கள், அதனால் நமது தேசம் தலைவர்களால் நிரம்பி வழிகிற ஒன்று. ஆள் ஆளுக்குக் கட்சிகள், அவரவர்க்கான சங்கங்கள், அங்கங்கே சமூக, இலக்கிய ஆன்மிக அமைப்புகள் என்று தொடங்கி தம்மைத் தலைவராக அறிவித்துக் கொள்கிறவர்களால் தெரு நிரம்பிக் கிடக்கிறது. இந்தத் தலைமைகளுக்கு தேசியத் தலைவர், மாநிலத் தலைவர், நிர்வாகத் தலைவர், செயல்தலைவர், கவுரவத்தலைவர் என்ற வகைப்பாடுகள் வேறு. இவர்களில் எவராகத்தாம் இல்லையென்றாலும் குடும்பத்தலைவர் என்றாவது ஒவ்வொருவரும் இங்கே தலைவர்தான்.

எல்லோருக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கும், ஆனால் பொதுவாக 'தலைவா' என்றழைத்துவிட்டால் போதும் யாருக்கும் சற்று மயக்கம் வந்துவிடுகிறது. தலைமை என்பது ஒரு மந்திரச்சொல். தலைமை ஒருவருக்கு எப்படிக் கிடைக்கிறது என்று பார்த்தால், திறனுக்கேற்பப் பெறுகிற தலைமை, திணிக்கப்படுகிற தலைமை, ஸ்வீகரிக்கப்படுகிற தலைமை, தாமே அறிவித்துக்கொள்கிற தலைமை என்று வகைப்பாட்டில் வரும். தலைமை யாருக்கும் கிடைக்கும். அதைத் தக்கவைத்துக் கொள்வது ஒரு திறன் என்று பொதுவாகச் சொன்னாலும் தலைமை ஒரு பண்பாக மட்டுமே புரிந்துகொள்ளப்பட வேண்டும்.