ADS 468x60

12 December 2022

போதைப்பொருள் வலையில் சிறியமீன்களை மட்டுமல்லாது சுறாக்களை பிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது நமது நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. பிரித்தானியர்களுக்குப் பிறகு நாட்டை ஆண்டவர்களே இதற்குக் காரணம். இவர்கள் மக்கள் மூன்று வேளையும் சாப்பிட முடியாத பொருளாதாரத்தை உருவாக்கியவர்கள். இதன் விளைவாக, ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் நம் நாட்டிற்கு பரிசாக கிடைத்துள்ளனர். இந்நிலை மேலும் வளர்ச்சியடைந்தால் நாளை நமது நாடு மேலும் வீழ்ச்சியடையும். இப்போதும் நாட்டை ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் நாட்டை வீழ்ச்சியடைந்த நிலையில் இருந்து காப்பாற்ற அறிவார்ந்த மற்றும் விழிப்புணர்வுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

நம் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பேரழிவை விட மோசமான பேரழிவுகள் தற்போது நம் நாட்டில் உருவாகி வருகின்றன. இது போதைப்பொருளின் அச்சுறுத்தலைத் தவிர வேறில்லை. நீண்டகாலமாக வளர்ந்து வரும் இந்த அச்சுறுத்தலில் இருந்து நாட்டை விடுவிப்பதற்கான முறையான வேலைத்திட்டம் இப்போதும் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது வருந்தத்தக்கது. இதனால், பாடசாலைக்; குழந்தைகளை இரையாக்கும் அளவுக்கு போதை அரக்கன் வளர்ந்துள்ளான்.

இந்த நிலையை குறைத்து மதிப்பிட முடியாது. போதைப்பொருள் பாவனையால் பல்வேறு உடல் மற்றும் மன நோய்கள் ஏற்படுவது மிக அதிகம். போதைப்பொருள் பாவனைக்குப் பிறகு ஏற்படும் மனநலக் கோளாறுகளால் குழந்தைகள் தற்கொலை செய்துகொள்ளக்கூடத் தூண்டப்படலாம். இன்று எமது நாடு எதிர்நோக்கும் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், நாளைய ஆரோக்கியமான பிள்ளைகள் நாட்டிற்குத் தேவை. 

பொருளாதாரக் பின்னடைவினால்; ஒரு குழு சத்துணவின்றி தவிக்க, இன்னொரு குழு போதைப்பொருளுக்கு அடிமையாகி நாளை நம் நாடு ஒரு சில நோயாளிகளுடன் மட்டுமே மிஞ்சும் ஒரு ஆபத்தான நிலை இப்போதுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையும் இருளடிக்கும் இந்தக் கொடூரமான சாபத்திலிருந்து நம் குழந்தைகளைக் காப்பாற்ற இப்போதும் ஒரு முறையான வேலைத்திட்டம் தேவை. அதற்கு, பழைய தலைமுறையினரின் பொறுப்பை புறக்கணிக்கக் கூடாது. வீட்டிலிருந்து, பாடசாலையிலும், குழந்தைகள் சமூகத்துடன் தொடர்பு கொள்ளும் ஒவ்வொரு இடத்திலும் குழந்தைகளுடன் பழகுபவர்களைக் கண்காணிக்க வேண்டியது பெற்றோரின் கடமை. மேலும், குழந்தைகளின் அசாதாரண நடத்தை முறைகளைக் கண்டவுடன் உடனடியாக தேவையான நடவடிக்கைகளை எடுப்பது பெற்றோரின் பொறுப்பாகும்.

போதைப்பொருளின் அச்சுறுத்தலில் இருந்து விடுபடுவதற்கு பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மட்டுமன்றி சமயச் சமூகமும் ஆற்றக்கூடிய பணி மகத்தானது. இந்தக் குழுக்கள் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் தீமைகள் குறித்து குழந்தைகளுக்கு எடுத்துரைக்க நடவடிக்கை எடுத்தால், இந்நிலையைக் கட்டுப்படுத்த முடியும்.

போதைப்பொருளின் அச்சுறுத்தலில் இருந்து நம் நாட்டின் குழந்தைகள் மட்டுமல்லாது இளைஞர்கள் மற்றும் பெரியவர்களையும் காப்பாற்ற ஒரு முறையான திட்டம் தேவை. நம் நாடு ஒரு தீவு. அப்படியானால் கடல் வழியாக போதைப்பொருள் நம் நாட்டுக்கு வரலாம். அல்லது விமானம் மூலம் கிடைக்கப்பெறலாம்.

இந்த இடங்களில் எல்லாம் பாதுகாப்பு சோதனைச் சாவடிகள் உள்ளன. ஆனால் நம் நாட்டுக்கு போதைப் பொருள் கடத்தல் தடையின்றி தொடர்கிறது. எனவே, போதைப்பொருளின் பின்னால் உள்ள ஆபத்தான கரங்களை அடையாளம் காணாமல், போதைப்பொருள் அரக்கனிடமிருந்து நம் நாட்டைக் காப்பாற்ற முடியாது. 

குறிப்பாக போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பாதாள உலக உறவுகளை இடைநிறுத்திக் கொள்ளாமல், போதைப்பொருளின் அச்சுறுத்தலில் இருந்து எமது நாட்டை காப்பாற்ற முடியாது. இந்த மோசடியின் பின்னணியில் சில அரசியல் தலைமைகளும், பாதாள உலகத்திற்கு உதவும் சில அதிகாரிகளும் உள்ளனர் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. எனவே, போதைப்பொருளின் அச்சுறுத்தலில் இருந்து நம் நாட்டைக் காப்பாற்ற ஒரு விரிவான அறிவியல் மனிதாபிமான பணியைத் தொடங்க வேண்டும். போதைப்பொருள் வலையில் சிறியமீன்களைப்; பிடிப்பதை விட போதைப்பொருள் வர்த்தகத்தின் பின்னணியில் உள்ள சுறாக்களை பிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


0 comments:

Post a Comment