ADS 468x60

20 February 2023

'கல்விக்கொரு விளக்கு' புதிய பாதைக்கு ஒளிகொடுத்த மாணிக்கம் மகேந்திரன்

'கல்விக்கொரு விளக்கு' எனும் தொனிப்பொருளில் தேத்தாத்தீவு சிவகலை வித்தியாலயத்தில் தெரிவுசெய்யப்பட்ட 50 மாணவர்களுக்கான கற்றல் ஆற்றலை மற்றும் ஆர்வத்தினை மேம்படுத்துவதனை நோக்கமாகக்கொண்டு கல்வி ஊக்குவிப்பு கற்றல் உபகரணங்கள்; வழங்கும் திட்டம் 18.02.2023 அன்று பாடசாலை அதிபர் திருமதி சுதாகர் சகுந்தலாதேவியின் தலைமையில் இனிதே ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த திட்டம் கனடாவில் வசிக்கும் தேத்தாத்தீவைப் பிறப்பிடமாகக்கொண்ட சமுக ஆர்வலர், தமிழ் பற்றாளர், சதா இந்த மண்ணை மனதார நேசிக்கும் மாணிக்கம் மகேந்திரன் அவர்களிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த உதவித்திட்டம் ஆரம்பித்து வழங்கி வைக்கப்பட்டது. 

இந்த நிகழ்வில்; கிராமத்தினையும் இந்த பிரதேசத்தினையும் நேசிக்கும் தொண்டுள்ளம் கொண்ட கலாநிதி திருமதி சுரேஸ் ஜெயப்பிரபா, கலாநிதி கணேஸ் சுரேஸ், திருமதி அமலநாதன் உட்பட பல ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள், ஆலய தலைவர்கள், நலன்விரும்பிகள், பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு இந்தத்திட்டத்தினை சிறப்பித்ததுடன் அதனை நன்றியுணர்வோடு பாராட்டினர்.


'இந்த ஊரைவிட்டுப் பிரிந்து வேறு தேசத்தில் வாழ்ந்தாலும் உறவுகளின் கல்வியில் கண்ணாக இருப்பவர் திரு மகேந்திரன் அவர்கள், அவர்களுக்கு வார்த்தையில் நன்றிகூறிவிட முடியாது, இக்கிராமத்தை இன்னும் ஒருபடி கட்டியெழுப்ப உங்களைப்போன்ற உதவும் கரங்களை நாம் மனமார இந்த தேத்தாத்தீவு மக்கள் சார்பிலும் மற்றும் பாடசாலை சமுகம் சார்பிலும் பாராட்டவும் நன்றி தெரிவிக்கவும் கடமைப்பட்டுள்ளோம்' என பாடசாலையின் அதிபர் இந்த நிகழ்வின் தலைமையுரையில் தெரிவித்தார்.

'கடந்த காலங்களைப்போலல்லாது, இந்த காலம் பொருளாதார, சமுக மற்றும் வாழ்வாதார ரீதியில் மிக நெருக்கடியான காலம் என்பது நம் எல்லோர்கும் தெரியும். ஆனாலும் எமக்கென இருக்கும் ஒரே ஆயுதம் இவற்றை வென்றெடுக்க கல்வி மாத்திரம்தான் அதனை எமது குழந்தைகள் கைவிடக்கூடாது. அதற்கு திருவாளர் மகேந்திரன் போன்றோர் உதவ காத்திருக்கின்றனர். அதற்கு எமது ஒவ்வொரு குழந்தைகளின் பெற்றோரும் இதனை நன்குணர்ந்து ஒத்துழைக்கவேண்டும். ஏனெனில் அவர்களும் மிகச் சிரமத்தின் மத்தியில் பணம் சம்பாதித்து அதில் எமது குழந்தைகள் முன்னேற வேண்டும் என இவ்வாறான பலநற்பணிகளை செய்யும்போது அவர்களுக்கு நாம் செய்யும் பிரதியுபகாரம் கல்வியில் ஒருபடி முன்னேறிக்காட்டுவது மாத்திரமே!


பாடசாலைக்கல்வியே உயர்கவ்விக்கான அடிநாதம் எனவே இங்கு நாம் சரியாக கல்வியினை மேற்கொள்ளவேண்டும் இதற்கு பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவிடும் தாய்மார் ஏனோதானோ என அசமந்தமாக இருக்காமல் மிகச் சிரத்தையுடன் இருப்பது அவசியம்' எனவும் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி திருமதி சுரேஸ் அவர்கள் உரையாற்றும் போது தெரிவித்தார்.

இந்த நிகள்வில் சமுக ஆர்வலர் சி.தணிகசீலன் இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்து இத்திட்டத்தினை ஆரம்பிக்க உறவுப்பாலமாக இருந்து இந்த மாணவர்கள் மத்தியில் சவால்களை முறியடிக்கும் வகையில் விழிப்புணர்வு உரையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்சியினை ஆசிரியர் வே.குகதாசன் அவர்கள் தொகுத்து வழங்க இந்தப்பாடசாலையின் பொறுப்பு மிகு ஆசிரியரான த.சித்தாத்தன் அவர்கள் இதனை ஒழுங்கமைத்து நெறிப்படுத்தி செவ்வனே செய்தமை பாராட்டத்தக்கது.

இந்த நிகழ்வினை சிறப்பிக்கும் வண்ணம் 'இன்றய சிறுவர்களே நாளைய தலைவர்கள்' எனும் தலைப்பில் செல்வன் து.சட்ஜன் அவர்கள் ஒரு அழகான குட்டிப்பேச்சினை நிகழ்த்தி மாணவர்களுக்கு விழிப்பூட்டினார். அதனைத்தொடர்ந்து பாடசாலை மாணவர்களால் இடையிடையே அழகான நடனங்கள் அரங்கேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் திருவாளர் மா.மகேந்திரன் அவர்களது அளப்பரிய பணியினை கௌரவிக்கும் வண்ணம் பாடசாலை அதிபர் ஆசிரியர்களால் நன்றிகூரும் நினைவுச்சின்னம் பரிசளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


அத்தோடு பாடசாலைக்கு அதிதிகளாகவும் ஆர்வலரர்களாகவும் வருகை தந்தமையினையும் நிலைபேறான அபிவிருத்திக்கு அடையாளமாகவும் தென்னங்கன்றுகள் நடும் நிகழ்வினை இப்பாடசாலையின் பழைய மாணவர்கள் ஒழுங்கமைத்து இந்த நிகழ்வினை இனிதே நிறைவு செய்திருந்தனர்.

 இந்த ஊரில் பிறந்து நல்ல முறையில் இந்தப் பாடசாலைகளிலும், ஊரிலும் கற்று சிறப்பாக வாழ்பவர்களை கணக்கிட்டால் எண்ணிலடங்காது. ஆனால் அதில் எத்தனைபேர் இவ்வாறான நல்லெண்ணத்துடன் செயற்படுகின்றனர் என்றுகேட்hல் அது கேள்விக்குறியே அந்த வகையில் திருவாளர் மா.மகேந்திரன் அவர்களை எத்தனை முறை பாராட்டினாலும் தகும். அதுபோல இந்தப் பாடசாலை பல குறைகளுன் இன்னும் காணப்படுகின்றது. இவ்வாறான ஆர்வமுள்ளவர்கள் நிச்சயம் முன்வந்து எமது தமிழ்மக்களுக்கு என இருக்கும் ஒரே சொத்தான கல்வியை கைவிடாமல் பாதுகாக்க முன்வரவேண்டும் என்பதே இந்த தேசத்தின் ஒருமித்தவேண்டுகோள் மன்றாட்டல் எல்லாமே.

































0 comments:

Post a Comment