ADS 468x60

21 March 2023

நாட்டின் மிக ஆபத்தான தலைவிதி

போதைப்பொருள் தொற்றுநோய் ஆக்டோபஸ் போல மாறியதால், நாட்டின் மிக ஆபத்தான தலைவிதியைப் பற்றி பேசுவதற்கு இனி எங்களிடம் வார்த்தைகளோ வாக்கியங்களோ இல்லை. இதுபற்றி பலர் எச்சரித்தும், தடுக்கப் பரிந்துரைத்தும்;, நாட்டின் ஆட்சியாளர்கள் எவரும் அதற்கான சாதகமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இது திறந்த பொருளாதார முறையின் ஊடாக உருவாக்கப்பட்டுள்ள துரோகிகள், குண்டர்கள், ஊழல்காரர்களின் தாராள கொள்கையூடாக போதைப்பொருள் உள்ளிட்ட தேவையற்றவையெல்லாம் நாட்டிற்கு ஏராளமாக வருகின்றன என்று நாம் கருதினால், முன்னாள் ஜனாதிபதிகள் ஜே. ஆர். ஜெயவர்தன, ஆர். பிரேமதாச, டி. பி. விஜேதுங்க, சந்திரகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச மற்றும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகிய 8 ஜனாதிபதிகளாலும் இந்த போதைப்பொருள் மாபியாவை நாட்டிலிருந்து ஒழிக்கவோ அல்லது சேதத்தை குறைக்கவோ முடியவில்லை என்றுதானே அர்த்தம்.

=> Complete your registration now!

இங்கு நமது நாட்டை ஆண்ட ஜனாதிபதிகள் குழுவொன்றின் பெயர்களை நாம் குறிப்பிடுகின்றோம், ஏனென்றால் அவர்கள் அனைவரும் நிறைவேற்று அதிகாரம் மற்றும் போதைப்பொருள் தொற்றுநோயை அகற்றும் முழு திறன் கொண்ட இந்த நாட்டின் ஆட்சியாளர்களாக இருந்தனர். ஆனால் இது படிப்படியாக வளர்ந்து அதன் கிளைகளைப் பரப்பி இந்த சமுகத்தின் அனைத்துப் பாகத்தினையும் ஆக்கிரமித்து அராஜகம் பண்ணுகிறதே தவிர குறைந்தபாடில்லை.

ஆனால் அண்மையில் பிரபல போதைப்பொருள் வியாபாரிகள் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் மறுநாள் கப்பலில் ஏறி இந்தியா வழியாக மீண்டும் சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பில் இணைந்தது வேறு காரணமல்ல. இந்த நாடு இவ்வளவு ஊழல் நிறைந்த நாடாக இருக்கிறது என்பதனால்தான், வேறு எதற்காகவும் அல்ல. அல்லது இந்த நாட்டின் அரசியல்வாதிகள் மிகவும் அக்கறையில்லாதவர்கள்; என்பதால். இந்த விளையாட்டுகளின் மாஸ்டர் ப்ளான் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் தான், வேறு யாரும் அல்ல. எனவேதான் 8 நிறைவேற்று ஜனாதிபதிகள் ஆட்சி செய்த் நாட்டில் கூட போதைப்பொருள் கடத்தல் இப்படியே நடந்து கொண்டிருந்தால் அதைப் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை.

=> Claim Your $500 Gift Card With PayPal!

இப்போதும், நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பரவி வரும் இளைஞர் யுவதிகள் மத்தியிலான அதிகரித்த மது, போதைப் பொருட் பாவனைகளின்களால் சமுகத்தில் நல்ல உள்ளம் படைத்தவர்கள் மிகவும் விரக்தியடைந்து எமது சமுகத்தின் எதிர்காலம் குறித்துப் பயந்து வாழ்கின்றனர். இவை கிராமங்களிலும், தற்போது பரவி வரும் நிலையில், இந்த போதைப்பொருள் கடத்தல் குறித்து பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவும் தயக்கம் காட்டுகின்றனர். 

நாட்டில் இவ்வாறான அராஜகம் நடந்து வரும் சூழலில், மத்திய கிழக்கு மற்றும் சில முஸ்லிம் நாடுகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு பலஸ்தீனம், எகிப்து, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளின் தூதுவர்களிடம் மல்வத்து மகாநாயக்கர் அதிமேதகு திப்பட்டுவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல மகாநாயக்கர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை மிக முக்கியமான கோரிக்கையாக நாம் பார்க்கின்றோம். பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற பிராந்திய நாடுகளும் இந்த போதைப்பொருள் வலையமைப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன, ஆனால் இந்த நாட்டு மக்கள்கூட போதைப்பொருளால் ஜாதி, மத வேறுபாடு இல்லாமல் மிகவும் அவதிப்படுகிறார்கள், இதனால் இந்தக் குடும்பங்கள் உடைந்து குழந்தைகள் ஆதரவற்றவர்களாக உள்ளனர். எனவே போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு வேலி கட்டுவதற்கு முஸ்லிம் நாடுகள் கைகோர்க்க வேண்டும். உலகம் முழுவதும் போதைப்பொருளை ஒழிக்க வேண்டும் என்று மேற்குறிப்பிட்ட நாடுகளின் தூதுவர்களிடம் அவர் கூறுவது மிகவும் சரியான நேரத்தில் பயனுள்ள கோரிக்கையாகவே பார்க்கிறோம்.

இவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்து நாட்டை ஆட்சி செய்பவர்கள் போதைப்பொருளை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் நாடு அடிவருடிகளின்; செல்வாக்கின் கீழ் இருந்தால், மதத் தலைவர்கள் சமூக சீர்திருத்தத்திற்கு முன்வர வேண்டும். எனவே, இவ்வாறானதொரு நிகழ்வில் மல்வத்து பீடாதிபதியின் தலையீட்டிற்காக எமது வணக்கத்தையும் நன்றியினையும் செலுத்த வேண்டும்.

உண்மையாகவே, அவரது அறிக்கை, பொய்யுடன் நாட்டை நடத்தும் ஆட்சியாளர்களின் முகத்தில் அறைந்த அடியாகும். மக்களின் வாக்கு பலத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அரசியல்வாதிகளும் அதிகாரவர்க்கமும் நாட்டுக்கு ஏற்படுத்திய அழிவுகளை மீள முடியாது. அவற்றுள் போதைப்பொருள் கடத்தல் மிகவும் பாரதூரமான விடயமாகும். அதை அடக்கும் முதுகெலும்பு ஆட்சியாளர்களுக்கு இல்லை என்றால், நலன்விரும்பிகளே குரல் எழுப்ப வேண்டும்.


0 comments:

Post a Comment