ADS 468x60

02 April 2023

கூடினால் புரியும் வியாபாரிகளுக்கு குறைந்தால் புரிவதில்லை.

அண்மையில் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாயப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி உக்கிரமடைந்த போது, இலங்கையில் கொஹிலா எனும் காட்டுக்கிழங்கு நுகர்வு 40% வீதம் அதிகரித்துள்ளது. செப்டம்பர் 2012 முதல் 2022 இறுதி வரை, இந்த நாட்டில் உணவுப் பணவீக்கம் 95% வீதம் வரை உயர்ந்திருந்தது. இது இலங்கை அனுபவித்த மிக மோசமான பொருளாதார நெருக்கடியாகும். 

இக்காலத்தில் இந்நாட்டு மக்கள் கையில் கிடைக்கும் எந்தக் காய்கறியையும் உண்டனர்;. அந்த நேரத்தில், பீன்ஸ், கேரட், பீற்றுட், லீக்ஸ் போன்ற காய்கறிகளின் நுகர்வு சுமார் 30மூ குறைந்திருந்தது. அப்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடும் கோபத்தில் இருந்தனர். ஒருவேளை கோஹிலாவின் நுகர்வு அந்த கோபத்தை அடக்க முடிந்ததா? கோஹிலா நார்ச்சத்து நிறைந்த காய்கறி, இது வயிற்றுக்கு மிகவும் நல்லது மற்றும் மூல நோய்க்கு மிகவும் நல்லது. அந்த நிலை ஓரளவு மாறி இன்று இந்த நாட்டில் உணவு நெருக்கடி ஓரளவுக்கு குறைந்துள்ளது.

இன்னொரு முக்கியமான விஷயத்தைப் பற்றி விவாதிப்போம். எரிபொருளின் விலை நேற்று நள்ளிரவு முதல் கணிசமான அளவு குறைந்துள்ளது. எரிபொருளின் விலை அதிகரிக்கும் போது, மற்ற நுகர்பொருட்களின் விலை அதே நாளில் இருந்து கணிசமாக அதிகரிக்கிறது. 

ஆனால் எரிபொருளின் விலை குறைக்கப்படும் போது அதிகரித்துள்ள பொருட்களின் விலை எந்த வகையிலும் குறையாது. பெற்றோல் லீற்றர் 450 ரூபாவாக சென்ற போது சில முச்சக்கர வண்டி சாரதிகள் முதல் கிலோமீட்டருக்கு 60 ரூபாவாக இருந்த விலையை 150 ரூபாவாக மாற்றியுள்ளனர். அன்றிலிருந்து அதன் பின்னான ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 100 ரூபாயாக இருந்தது.

பெற்றோல் விலை குறைக்கப்பட்டபோது, முச்சக்கர வண்டிகளின் கிலோமீட்டருக்கான விலை குறையவே இல்லை. பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 60 ரூபாவாக குறைந்தபோதும் முச்சக்கரவண்டி சாரதிகளின் கட்டண முறைமையில் சிறிதும் மாற்றம் ஏற்படவில்லை. அது அப்படியே இருக்கிறது. 

மேலும், எரிபொருளின் விலை உயர்வால், பேக்கரி உணவுகளின் விலையும் அதிகரித்துள்ளது. எரிபொருளின் விலை குறைந்துள்ள இந்த நேரத்தில் ஒரு இராத்தல் பாணின்; விலை ஐம்பது சதங்கூட குறையவில்லை. ஆகவே இந்த நாட்டில் பெரிய அளவிலான தகவல் தொடர்பு குறைபாடு இருப்பதாக நாங்கள் உணர்கிறோம். 

முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் வர்த்தகர்கள் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் மாத்திரமே அறிந்து கொள்கின்றனர். ஆனால் எரிபொருளின் விலை குறைவது அவர்களுக்குப் புரியவில்லையே. பொதுவாக அந்தச் செய்தி அவர்களுக்குத் தெரிவிக்கப்படுவதில்லையோ தெரியவில்லை. இப்போது வாடிக்கையாளர்கள் வியாபாரிகளையும், ஆட்டோ சேவை வழங்குநர்களையும் சபிக்கத் தொடங்குகிறார்கள்.இந்தக் குழப்பத்தில் இருந்து நாம் எப்போது காப்பாற்றப்படுவோம்?


0 comments:

Post a Comment