ADS 468x60

11 April 2023

வசந்தகால பொருளாதார மாற்றம் மகிழ்சியைக் கொண்டுவருமா?

இது வசந்த காலம். இரண்டு ஆண்டுகளாக, கோவிட் தொற்றுநோயால் வசந்த காலம் உலர்ந்து பயங்கரமான பருவமாக மாறியது. ஆதற்கு அடுத்த ஆண்டு வசந்தம் போராட்டத்தின் முகத்தில் கரைந்தது. அந்த வகையில் 03 வருடங்களின் பின்னர் எமது நாட்டிற்கு வசந்த காலம் வருகின்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வரும் இளவேனில் காலத்தை பொது மக்கள் ஏற்றுக்கொள்ள முடியுமா?

எமது நாட்டில் வசந்த காலத்தின் உச்சம் தமிழ்ப் புத்தாண்டு விடியலுடன் குறிக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் ஈஸ்டர் மற்று
ம் ரமலான் மத பண்டிகைகளும் அனுசரிக்கப்படுகின்றன. இந்த கலாச்சார மற்றும் மத விழாக்கள் அனைத்தையும் இதயத்தில் மகிழ்ச்சியுடன் கொண்டாட, மக்கள் தங்கள் கைகளில் இருந்து பணத்தை செலவிட வேண்டும். அத்தியாவசியப் பொருள்களை மலிவு விலையில் தட்டுப்பாடு இல்லாமல் வாங்க வேண்டும். இந்த அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யாமல் மக்கள் வசந்த காலத்தின் அரவணைப்பை அனுபவிக்கவோ அல்லது பண்டிகைக் காலத்தை அனுபவிக்கவோ முடியுமா?

புத்தாண்டு காலம் நெருங்கும் வேளையில், எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் சந்தையின் தற்போதைய நிலையை ஆராய்வதன் மூலம் உண்மை நிலையைப் புரிந்துகொள்ள சில துப்புகளைப் பெறலாம். அதனுடன் 03 வருடங்களின் பின்னர் வரும் புத்தாண்டு காலம் இது என்பதை மனதில் கொள்ள வேண்டும். அப்படி ஒரு நிலை இருந்தும் நாட்டு மக்களின் கைகளில் இன்னும் குறைவான பணமே உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கொழும்புக்கு வந்து அந்தந்த பகுதிகளுக்கு விற்பனைக்காக பொருட்களை கொண்டு செல்லும் வர்த்தகர்கள் இம்முறை குறைவாக வரவுள்ளதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கப்படுகின்றது. இது நல்ல சகுனம் அல்ல. 

புத்தாண்டுக்காக மக்கள் வாங்கும் ஆடை உள்ளிட்ட பொருட்களின் விலை மிகவும் உயர்ந்துள்ளதாக பொருட்களை வாங்க வரும் வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இருப்பினும் அரிசி மற்றும் காய்கறிகளின் விலை குறைந்துள்ளமை மக்களுக்கு நிம்மதியாக உள்ளது. கோழி மற்றும் சில வகையான மீன்களும் சில மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட மலிந்திருக்கின்றது. இருப்பினும், பெரும்பான்மையான மக்களின் வருமான ஆதாரங்கள் குறைவதால் அவர்களின் கொள்வனவுத் திறன் குறைந்துள்ளது. மேலும், ஆடை உள்ளிட்ட இதர பொருட்களின் விலையும், பாடசாலை செல்லும் குழந்தைகளுக்கான புத்தகங்கள், உபகரணங்கள், காலணிகளின் விலையும் மிக அதிகமாக உயர்ந்துள்ளதால் மக்களின் வசந்தகால கனவுகள் மங்கலாகி உள்ளன. அந்த பிரச்சனைகளுக்கும் விரைவான பதில்கள் இல்லை.

ஐஎம்எவ் கடன் நிவாரணம் அங்கீகரிக்கப்பட்டு அதன் முதல் தவணையை பெற்றுக்கொண்டமை நாட்டுக்கு ஓரளவு நிம்மதியை தந்துள்ள போதிலும், பல்வேறு சிரமங்களுக்கும் தடைகளுக்கும் மத்தியில் நாடு அந்த பாதையில் செல்ல வேண்டியுள்ளது என்பதே யதார்த்தம். அதோடு, ரூபாயின் மதிப்பும் ஓரளவு வலுவடைவதும் சாதகமாக உள்ளது. ஆனால் தற்போது டொலரின் மதிப்பு விரைவில் மாறும் என்பதால் இறக்குமதி பொருட்களின் விலை குறையும் என எதிர்பார்க்க முடியாது என அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். இது நுகர்வோர் தரப்பில் ஒரு அச்ச நிலமையை உண்டு பண்ணியுள்ளது.

நாடு பொருளாதார நெருக்கடியை சந்தித்து வங்குரோத்து நிலையில் 03 வருடங்களின் பின்னர் வசந்தம் வருவதே பிரச்சினையாக இருக்கின்றது. நாடு இனிமேல் வங்குரோத்து நிலையினை ஏற்படுத்தாது என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். அதை உணரும் வரை நாட்டு மக்கள் நம்ப மாட்டார்கள். குறைந்த பட்சம் புத்தாண்டுக்கு தேவையான அளவு பொருட்களின் விலை குறைக்கப்பட்டால் அது மக்களுக்கு பெரும் நிம்மதியாக இருக்கும்.


0 comments:

Post a Comment