ADS 468x60

20 July 2024

வங்காளதேச கலகம்: மாணவர் எழுச்சியின் விளைவுகள்

அறுபதுக்கு மேல் மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 2000 பேருக்குமேல் காயமடைந்துள்ளனர், இன்ரர்நெற் முடக்கப்பட்டுள்ளது, பாதைகள், சாலைகள் மூடப்பட்டுள்ளன, வங்கதேசத்தில் என்னதான் நடக்கின்றது? 

மாணவர்கள் அரசுக்கு எதிராக திரும்பும்போது, ஒரு நாட்டின் அடித்தளம் நிலைகுலையலாம். இந்த நிலை தற்போது வங்காளதேசத்தில் உருவாகியுள்ளது, மாணவர் போராட்டங்கள் நாட்டை ஸ்தம்பித்து கிடக்க வைத்துள்ளன. இவ்விதமான மாணவர்களின் இயக்கங்கள் முக்கிய அரசியல் மற்றும் சமூக புரட்சிகளை ஏற்படுத்தும் சாத்தியங்களை வெளிப்படுத்துகிறது.

போராட்டத்தின் பின்னணி: சமீபத்திய கலவரம் 2018-ல் பிரதமர் ஷேக் ஹசீனா எடுத்த முடிவின் அடிப்படையில் உருவானது. மாணவர்களின் போராட்டத்துக்குப் பதிலளிக்க, 1971ல் பாகிஸ்தான் எதிரான சுதந்திர போரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 30% இட ஒதுக்கீட்டை ரத்து செய்தார். பின்னர் உயர் நீதிமன்ற உத்தரவு மீண்டும் இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியது, இது மாணவர்களின் எதிர்ப்பை தூண்டியது.

14 July 2024

புத்திஜீவிகளின் வெளியேற்றம்: நாட்டின் வளர்ச்சிக்கு பேரிடர்!

படித்த இளம் தலைமுறையினர் நாட்டை விட்டு வெளியேறுவது நாட்டின் வளர்ச்சிக்கு பேரிடராகும். 30 வருட யுத்த காலத்தில் புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறியதைப் போலவே, தற்போதும் கல்விமான்கள், புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறி வருவது துயரமானது.

யுத்த காலத்தை விடவும் தற்போது கல்விமான்கள் மற்றும் புத்திஜீவிகளின் வெளியேற்றம் அதிகம். மருத்துவர்கள் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது.

சுகாதாரத்துறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் பற்றாக்குறையால், அரசு வைத்தியசாலைகளில் ஒரு மருத்துவர் ஒரு நாளைக்கு 200க்கும் அதிகமான நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

13 July 2024

வீதி விபத்துக்கள் தொடர்ந்துகொண்டே போகும் பேரழிவு

இலங்கையில் வீதி விபத்துக்கள் ஒரு பெரும் சமூக பிரச்சினையாக மாறிவிட்டன. ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மக்கள் வீதி விபத்துகளில் உயிரிழக்கின்றனர், ஆயிரக்கணக்கானோர் காயமடைகின்றனர். இந்த விபத்துகள் தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையில் 1103 வீதி விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதில் 1154 பேர் உயிரிழந்துள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டில் 2200 வீதி விபத்துகளில் 2557 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை இது ஒப்பிடுகையில் காட்டுகிறது.

10 July 2024

களுதாவளைச் சுயம்புலிங்கர் பேராலயம் ஒரு ஆன்மீக நிறுவனமாகும் கனவு!

 இந்துசமுத்திரத்தின் முத்தான இலங்காபுரியின் கிழக்கே, இராவணன் இருந்தாண்ட பூர்வீக மண்ணின் தெற்கே, மீன்பாடும் தேன்நாடான மட்டக்களப்புக்கு தெற்கே, வங்கக் கடல் அலைமோத, வற்றாத வாவிமகள் வளைந்தோட, வெற்றிலையும் வேளாண்மையும், வெற்றி கொண்ட தமிழ் மக்களும் செறிந்திலங்கு களுவைநகரில் சுயம்பாக வந்தமர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க களுதாவளைச் சுயம்புலிங்கப்பெருமானின் பொற்பாதம் பணிந்து ஒரு கட்டுரையினை எழுதுகின்றேன்.

'களுதாவளைக்கு நீங்க வந்து பாருங்க-அங்கு 

கணநாதன் சந்நதியில் நின்று பாருங்கள் 

ஆறாத காயங்களும் ஆறி போகுங்க-அது

ஆறாவிட்டால் வந்து என்னைக் கேளுங்க' 

எழுத்தினை இப்படி துவங்குகின்றேன். எனது சிறிய வயசில் பசுமரத்தாணிபோல் பதிந்த பல விடயங்களில் என்னுடைய அம்மம்மாவின் பாசம் அன்பு என்பவை மறக்கமுடியாதது. ஆம் எனது அம்மம்மா என்னுடனும் எல்லோருடனும் சிரித்த முகத்துடன் அன்பாகவும் பாசமாகவும் இருக்கும் ஒரு இறை நம்பிக்கைகொண்டவர். அவர்; பார்ப்பதற்கு எப்பொழுதும் நெற்றி நிறைய நீறணிந்து, சுத்தமாக உடைதரித்து மங்கலமாக இருப்பார்.