2026ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து 2027ஆம் ஆண்டின் ஆரம்பம் வரை, இலங்கை ஒரு தீவிரமான எல்நினோ (El Niño) தட்பவெப்ப நிகழ்வை எதிர்கொள்ளவிருக்கிறது என வானிலை திணைக்களம் தெரிவித்துள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரை உச்சத்தை அடையவிருக்கும் இந்நிகழ்வு, குறைந்த மழைவீழ்ச்சி, அதிகரித்த வெப்பநிலை, நீர் மற்றும் மின்சார வளங்கள் மீதான கடுமையான அழுத்தம் ஆகியவற்றை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 63 சதவிகித சாத்தியக்கூறு கொண்ட இந்த நிகழ்வு, ஒரு தட்பவெப்ப புள்ளியல் அறிக்கை மாத்திரமன்று; அது ஒரு நாட்டின் பொருளாதார பலவீனங்களையும், நிறுவன தயார்நிலையையும், சமூக பழக்கவழக்கங்களையும் ஒரே நேரத்தில் பளிச்சிடும் ஒரு கண்ணாடியாகவும் அமைகிறது.


