ADS 468x60

11 April 2010

எழிதாய் சம்பாதிக்க என்ன வழி?

இன்றைய சூழ்நிலையில் எளிய முறையில் சம்பாதிக்க பைனான்ஸ் கம்பெனி தான் சிறந்த வழி. ஒரு பைனான்ஸ் கம்பெனி தொடங்குவது முதல் மொத்த காசையும் ஆட்டயப் போட்டுக்கிட்டு எஸ்கேப் ஆவது வரை ஏதோ என்னால் முடிந்த யோசனைக



தேவையான பொருட்கள்: நல்ல கட்டிடம் : 1 இணையதளம்: 1 மேனேஜர்: 2 அல்ல்து 3ரிசப்சனிஸ்ட் :2 (அழகாகஇருப்பது அவசியம்தொலைபேசி இணைப்புகள் : 3 அல்லது 4செக்யூரிட்டிகள் : 2 மேசை நாற்காலிகள்தேவையானஅளவு  லர்விளக்குகள் : தேவையான அளவு
செய்முறை :
1) முதலில் நகர்புறத்தின் அல்லது ஒதுக்குப் புறமாக எவ்வளவு கேட்டாலும் ட்வான்ஸ் கொடுத்து ஒரு பிரம்மாண்டக்கட்டிடத்தை வாடகைகுப் பிடித்துக் கொள்ளவும்.அதன்பிறகு கொஞ்சம் செலவுசெய்து கட்டிடத்தின் வெளியே ஸ்டீல்மோல்டிங் செய்து கொள்ளவும்
2) மேஜை நாற்காலிகள் நாள் வாடகைக்குப் பிடித்து வைத்துக் கொள்ளவும்அதற்கும் வாடகை கொடுக்கத்தேவையிருக்காதுஎஸ்கேப் ஆகி போகும் போது அதை வைத்துவிட்டுப் போவதால் ஏமாந்தவர்கள் அதைத்தூக்கிஅடித்து விளையாட வசதிப்படும்.
3)சாப்ட்வேர் படித்தவர்கள் புதிய நபர்கள் தேவை என பேப்பரில் விளம்பரம் செய்து அவர்களில்நல்லதாகப் 10 பேரைசெகச்ட் செய்து பின்னர் அவர்களிடம் நமது ஜில்பான்சி கம்பெனிக்கு ஒரு நல்ல இணையத் தளம் வடிவமைத்துத்தருமாறும் அதை வைத்துத் தான் அவர்களின் திறனை கண்டு பின்னர் அப்பாயின்மென்ட் லட்டர் தருவதாகவும்சொல்லி நல்ல கலர்கலராக வெப்சைட் ஓப்பன்செய்துகொள்ளவும்.அவர்களுக்கும் அல்வா தான்அதேபோல நல்லஅடிவாங்கும் திறன் கொண்ட அப்பாவிகள் சிலரை ஆபீஸ் பணியாளர்களாக அமர்த்த வேண்டும்.கடைசியில் அவர்கள்தான் மாட்டிக் கொண்டு முழிப்பார்கள்.
4) நமீதாநயன்தாரா போன்ற நல்ல கலர் பிகர்களைத் தேர்வு செய்து அவர்களை ரிசப்சனிஸ்ட் வேலைக்கு அமர்த்தவேண்டும்.அவர்களுக்கு எதிராக ரிசப்சனில் சோபா செட்டுகளைப் போட்டுவிட்டால் போதும் கூட்டம் நாளுக்குநாள்அதிகரிக்கும்.
5)பிரைவேட் செக்யூரிட்டி சென்டரில் நல்ல ஆஜானுபாகுவான பேரை கேட்டு வாங்கி அருகிலேயே வைத்துக்கொள்ளவும்இதன் மூலம் பணத்தை திருப்பிக்கேட்டு சண்டை போட நினைத்துக் கொண்டு வருபவர்கள் ஜம்ப்ஆகிவிடுவார்கள்.
)முதலில் வைப்புத்தொகையாக ஒரு லட்சம் ரூபாய் செலுத்தினால் மாதாமாதம் ரூபாய் 26 ஆயிரம்வாரம்ஒருவருக்கு குலுக்கல் முறையில் ஹோண்டா சிட்டி கார் என 10 மாதங்களுக்குத் தரப்படும் என டிவி,பத்திரிக்கைகளில்விளம்பரம் செய்யலாம்இலவசம் என்றாலே போதும் நம் மக்கள் எதைப் பத்தியும் கண்டுகொள்ளாமல் தங்கள்காசுகளை அள்ளிக்கொண்டு வந்து கொட்டி விடுவார்கள்.
7) செலவைக் கணக்கில் கொள்ளாமல் விளம்பரங்களையும் ஸ்பான்சர்களை அள்ளி இறைக்கவும்.அது மட்டுமின்றிஒரு நபர் மற்றொரு நபரை சேர்த்துவிட்டால் ஒரு தங்க நாணயம் எனஅள்ளிவிட வேண்டும் . நமது ஆட்களில் ஒரு 10பேருக்கு தங்க நாணயக் கொடுப்பது போல போட்டோ எடுத்து அதை ரிசப்சனில் மாட்டி வைத்தால் போதும்இதனால்நமது ஜில்பான்சிகம்பெனியின் முதலீட்டாளர்கள் எண்ணிக்கை குபுகுபுவென உயர்ந்துவிடும்.
இது போல செய்தால் ஒரு மாதத்தில் எப்படியும் 100 கோடியை எட்டிவிடலாம்அத்தோடு அதை தூக்கிக் கொண்டுஎஸ்கேப் ஆகிவிடலாம்இதற்குப் பிறகு மட்டுமே சுதாரிக்கும் நம் தமிழக மக்கள் பின்னர் வாயிலும் வயித்திலும்அடித்துக் கொண்டு டிவியில் பேட்டி கொடுப்பார்கள்பிறகு ஏமாந்தோர் அசோசியேசன் அமைத்துப் புகார்கொடுப்பார்கள்பின்னர் காவல்துறை வலைவீசித் தேடும்.எனவே நாம் குளங்களிலும் கடல்களிலும் குளிக்காமல்இருப்பது நலம்.
ஆயிரம் கலைமகள் சபாஆயிரம் அனுபவ் குரூப் என கோடி கோடியாய் சுருட்டி பாடம்புகட்டினாலும் நம்தமிழ்மக்களுக்கு அறிவே வராதுநாளைக்கே நீங்கள் ஒரு பைனான்ஸ் கம்பெனிஆரம்பித்து டபுள் வட்டி தருவதாய்சொன்னால் கூட அதற்கென ஒரு கூட்டம் இருக்கிறது.ஆலோசனை மட்டும் தான் நான் சொல்ல முடியும்மத்தத நீங்கதான் செய்யனும்அப்படி யாராவதுஇதை பாலோ செய்து ஒரு நல்ல தொகை அடித்தால் தயவுசெய்து எனக்கும் ஒருஷேர் தருமாறுபணிவோடு வேண்டுகிறேன்பணம் கிடைத்தால் நான் வாங்கிக் கொள்கிறேன்வேறுஏதாவதுகிடைத்தால்?? என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது.., விடு ஜூட்!!!!!!!!!!

06 April 2010

வாழ நினைத்தால் வாழலாம்

உங்களுக்கு ஒரு பையன் பொறந்திருக்கான்” என நிக்கை (Nick Vujicic) அவனுடைய தந்தையிடம் காட்டியபோது உள்ளுக்குள் குமட்டிக் கொண்டு வர, ஆஸ்பத்திரியை விட்டு வெளியே ஒடி வந்து வாந்தியெடுத்தார் தந்தை !

“இந்தாங்க உங்க பையன்” என தாயிடம் நீட்டியபோது “ஐயோ.. என் முன்னாலிருந்து கொண்டு போங்கள்…” என நான்கு மாதங்கள் அவனைத் தொடாமலேயே அழுது தீர்த்தாள் தாய்.


விஷயம் இது தான். நாளும் கிழமையும் எண்ணி எண்ணி ஆவலுடன் குழந்தையைக் கொஞ்ச காத்திருந்த அந்த பெற்றோருக்குப் பிறந்ததோ கைகளும் கால்களும் இல்லாத ஒரு குழந்தை ! இரண்டு கைகளும், இரண்டு கால்களும் இல்லாத ஒருவனால் என்ன செய்ய முடியும் பிச்சை எடுப்பதைத் தவிர ? என்று தானே நினைக்கத் தோன்றுகிறது ?

அந்தக் கவலைதான் அந்த ஆஸ்திரேலியப் பெற்றோருக்கும் இருந்தது. ஒரு சின்ன குறை இருந்தாலே சமூகத்தில் தாக்குப் பிடிப்பது மிகவும் கடினம். கைகளும் இல்லாமல், கால்களும் இல்லாமல் இல்லாமல் இவனெல்லாம் என்ன வாழ்க்கை வாழப்போகிறான் ? தொட்டதுக்கெல்லாம் யாரோ ஒருவருடைய உதவியில் தானே இவன் வாழ முடியும் என்பதே பெற்றோரின் தலையாய கவலையாய் ஆகிப் போனது.

அன்றைக்கு அவர்களிடம் போய், “கவலைப்படாதீர்கள். உங்கள் மகன் ஒரு நாள் ஓடுவான், குதிப்பான், நீச்சலடிப்பான். கால்ஃப் விளையாடுவான், புட்பால் விளையாடுவான், கடலில் ஷர்ப் செய்வான் என்றெல்லாம் சொல்லியிருந்தால்” அன்றைக்கே ஒரு கொலை விழுந்தாலும் விழுந்திருக்கும். ஆனால் எல்லாமே ஒரு பரபரப்பான சினிமா போல நிஜமாகியிருக்கிறது இன்று.

தற்போது தனது இருபத்து ஆறாவது வயதில் இருக்கும் நிக், இன்றைக்கு மேலே சொன்ன எல்லாவற்றையும் செய்கிறார். கூடவே கோடானு கோடி மக்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் சின்னமாகவும் உருவெடுத்திருக்கிறார்.
இப்போது மிகவும் உற்சாகமாய் இருக்கும் நிக் கடந்து வந்த ஆரம்ப வாழ்க்கை ரொம்பவே கொடுமையானது. கைகளும் கால்களும் இல்லையென்றாலும் பெற்றோர் அவனை பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டார்கள். பள்ளிக்கூடத்துக்குச் சென்றால் பிள்ளைகள் நிக்கை நெருங்கி வரவே பயப்பட்டார்கள். ஏதோ ஏலியனைப் பார்ப்பது போலத் தான் நிக்கை பார்த்தார்கள்.

எல்லாரையும் போல சாதாரணமாய் வாழ முடியாத ஏக்கம் நிக்கிற்குள் டன் கணக்காய் கனத்தது. மற்றவர்களின் கிண்டலும், கேலியும், அருவருப்புப் பார்வையும் நிக்கை நிலைகுலைய வைத்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லை. டீன் ஏஜ் வயது வரை நிக் செய்த செபம் என்ன தெரியுமா ? “கடவுளே தலைமுடி வளர்வது போல எனக்கு கைகளும் கால்களும் வளர வேண்டுமே” என்பது தான்.

அப்போதெல்லாம் தொட்டதுக்கெல்லாம் தற்கொலைச் சிந்தனைகள் வந்து கொண்டே இருந்தன. எப்படியாவது செத்துப் போகவேண்டும் என்று நினைத்தாலும் அதையும் தனியே செய்ய முடியாத நிலை. “கொஞ்சம் என்னைக் கொல்வீர்களா பிளீஸ்” என யாரிடமாவது கெஞ்ச வேண்டிய நிலையே நிக்கிற்கு.

அப்படியும் ஒருமுறை பாத்டப்பில் தண்ணீரை நிரப்பி மூழ்கிச் சாக முனைத்திருக்கிறார். இன்னொரு கழுத்து உடையட்டும் செத்து விடலாம் என டேபிளில் இருந்து தலைகீழாய் குதித்திருக்கிறார். ! என்ன செய்ய? வாழவேண்டும் எனும் விதி அவருக்கு. எல்லா தற்கொலை முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன.

ஆரம்ப காலத்தில் நிக்கின் உருவத்தைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர் பின்னர் நிக்கிற்கு தன்னம்பிக்கையை ஊட்டத் துவங்கினர். 18 மாதமாக இருந்தபோதே நீச்சல் பழக்கத் துவக்கிய தந்தை, ஆறு வயதாக இருக்கும் போது கம்ப்யூட்டர் கற்றுக் கொடுத்தார். தாய் பிளாஸ்டிக்கில் ஒரு வளையத்தைச் செய்து அதில் பென்சிலை மாட்டி எழுத கற்றுக் கொடுத்தார். இவையெல்லாம் தான் நிக்கிற்கு நிமிர்ந்து நிற்கும் தைரியத்தைக் கொடுத்தது.
நிக்கின் இடது கால் இருக்க வேண்டிய இடத்தில் ஆறாவது விரல் போல நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு பாகம் தான் அவனுடைய வரப்பிரசாதம். அதுதான் அவனுடைய கை, கால், துடுப்பு, எல்லாமே !. நடப்பது, எழுதுவது, நீந்துவது, விளையாடுவது என சர்வமும் அதன் வழியாகவே. இது மட்டும் இல்லாமலிருந்தால் நான் என்ன செய்திருப்பேனோ தெரியாது என சொல்லி சிரிக்கிறார் நிக்.

தனது பதின்மூன்றாவது வயதில் ஊனமுற்ற ஒருவரைப் பற்றிய வரலாறு ஒன்றை நிக் படித்தார். அதுதான் அவருடைய வாழ்க்கையையே புரட்டிப் போட்டது. அந்த ஊனமுற்ற மனிதர் கழுத்தையும், நாடியையும் பயன்படுத்தி கால்ப் விளையாடியதைப் படித்தபோது நிக்கிற்குள் ஒரு மின்னல் அடித்தது.
“அடடா… தேவையில்லாமல் தற்கொலை செய்யப் பார்த்தேனே” என தன்னையே நொந்து கொண்டவர், “நல்ல வேளை இதுவரை சாகவில்லை” என நினைத்துக் கொண்டு வாழ்க்கையை புதிய உத்வேகத்துடன் எதிர்கொள்ள ஆரம்பித்திருக்கிறார். அதுவரை கண்ணாடியைப் பார்க்கும் போது கைகளும், கால்களும் இல்லாத சதுர உடம்பு மட்டுமே தெரிந்த நிக்கிற்கு அதன் பின் தான் தனது அழகிய கண்கள் தெரிந்தன என சிலிர்ப்பூட்டும் நம்பிக்கை விதைக்கிறார்.
அதன் பிறகு கடவுளைப் பழிப்பது, சாக நினைப்பது, முனகுவது, அழுவது, கவலை கொள்வது என அனைத்து வேண்டாத விஷயங்களையும் மூட்டை கட்டி தூர எறிந்து விட்டு உற்சாகமாகிவிட்டார் நிக். பிறருக்கு தன்னம்பிக்கை ஊட்டும் பேச்சுகளையும் மீட்டிங்களையும் நடத்தத் துவங்கிவிட்டார்.

அப்படி ஆரம்பித்த அவரது தெம்பூட்டும் பணி, 24 நாடுகளுக்குப் பயணம் செய்து இலட்சக்கணக்கான மக்கள் கூட்டத்தில் உரையாற்றுமளவுக்கு பரந்து விரிந்திருப்பது வியக்க வைக்கிறது ! தற்போது ஊனமுற்றவர்களுக்காக இயங்கும் “லைஃப் வித்தவுட் லிம்ப்ஸ்” எனும் நிறுவனத்தின் இயக்குனராகவும் இருக்கிறார் அவர்.

ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்னில் பிறந்த நிக் இப்போது வசிப்பது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில். சோர்வுற்றும், சோகமுற்றும் இருப்பவர்களுக்கு இப்போது உற்சாக டானிக் இவர் தான், இவருடைய பேச்சுகள் தான்.

ஐயோ அது இல்லையே, இது இல்லையே என புலம்பும் மக்கள் எதுவும் இல்லாமல் எல்லாம் இருப்பதை விட மகிழ்ச்சியாய் இருக்கும் நிக்கைப் பார்த்ததும் விளக்கைப் போட்ட இருட்டு அறைபோல சட்டென தெளிவாகி விடுகின்றனராம்.

குறிப்பாக இளம் வயதினரின் தாழ்வு மனப்பான்மை, தன்னம்பிக்கைக் குறைவு, மன அழுத்தம் இவையெல்லாம் இவரைப் பார்த்ததும் பனிக்கட்டியில் வரைந்த ஓவியமாய் ஈரமாய் ஒழுகி மறைந்துவிடுகிறதாம்.
“கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலைகளும் இல்லை” எனச் சிரிக்கும் நிக் உண்மையிலேயே இந்த நூற்றாண்டின் வியப்புக் குறியீடாய் நிமிர்ந்து நிற்கிறார்.

23 March 2010

உலகமயமாக்கலில் உக்கும் மனிதன்

வாழ்க்கைக்கு வேலை அவசியம்தான். ஆனால், வேலையே வாழ்க்கையாக இருந்து விடக்கூடாது. எந்த நேரமும் வேலையைக் கட்டி அழுது கொண்டிருக்காமல், அதற்காக ஒதுக்கபட்ட நேரத்தில் மட்டும் வேலை செய்யுங்கள். அதேபோல் வாங்கும் சம்பளத்திற்குக் குறைவில்லாமல் வேலை பாருங்கள். அலுவலக வேலைக்காக குடும்பத்தில் கிடைக்கக் கூடிய சந்தோஷங்களைத் தியாகம் செய்யாதீர்கள்.   வேலையையும், அது சார்ந்த டென்ஷன்களையும் மறக்க ஓய்வு அவசியம். விடுமுறை நாட்களிலும் அலுவலகத்தை பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்காமல், கிடைக்கக் கூடிய ஓய்வை பயன்படுத்திக் கொள்ளுங்கள். 

அதிக நாட்கள் விடுமுறை கிடைத்தால் குடும்பத்துடன் சுற்றுலா செல்லுங்கள். வார இறுதியில் திரைபடங்களுக்கோ, உறவினர் அல்லது நண்பர்களின் வீடுகளுக்கோ சென்று வரலாம். அதன் முலம் கிடைக்கும் புத்துணர்ச்சி தான் அடுத்த ஆறு நாட்களுக்கு சோர்வு இல்லாமல் வேலையை சிறப்பாகச் செய்ய உதவும்.   உங்களுக்கு எந்த வேலையில் ஆர்வம், திறமை இருக்கிறதோ, அந்தத் துறையில் சேர்ந்து பணியாற்றுங்கள். அப்போதுதான் வேலையையும் நன்றாகச் செய்ய முடியும்; உங்கள் திறமைகளும் வெளி உலகத்திற்குத் தெரிய வரும். விருப்பமில்லாத வேலையைச் செய்யும்போது, வேலையும் ஒழுங்காக நடக்காது. உங்கள் திறமைகளும் வீணாகி போகும். 

ஓவியம் வரைவதில் திறமையை வைத்துக் கொண்டு மார்க்கெட்டிங் துறைக்கு போக வேண்டாம்.   உங்களால் செய்ய முடியாத அல்லது செய்யத் தெரியாத வேலைகளைக் கண்டிப்பாக மறுத்து விடுங்கள். மேலதிகாரியைத் திருப்தி படுத்துவதற்காகவோ, சக ஊழியர்களிடம் உங்களை பெரிய ஆளாக காட்டிக் கொள்வதற்காகவோ எல்லா வேலைகளையும் ஒப்புக் கொண்டால் வேலையின் முடிவு எதிர்பார்த்த பலனைத் தராது; உங்களுக்கும் மன அழுத்தம் அதிகரிக்கும். எனவே, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணாமல், `இதை என்னால் செய்ய முடியாது’ என்று திட்டவட்டமாகக் கூறிவிடுங்கள்.

வேலையில் ஏதாவது உதவி தேவைபடும் பட்சத்தில், தயங்காமல் உடன் பணிபுரிபவர்களிடம் கேளுங்கள். `எனக்கு யாருடைய உதவியும் தேவையில்லை, நானே எல்லாவற்றைம் செய்து கொள்கிறேன்’ என்று அடம் பிடித்தால் டென்ஷன்தான் மிஞ்சும். எல்லா வேலைகளும் தேங்கி, உங்கள் ஒருவரால் மொத்த அலுவலகத்தின் வேலையும் ஸ்தம்பித்து போகும் நிலை உருவாகும். அதேபோல, உடன் பணிபுரிபவர்களுக்கு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டால், அவர்களுடைய வேலைகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.   ஒவ்வொரு வாரமும் அந்த வாரத்தின் இறுதியில் நீங்கள் செய்த வேலைகளை பட்டியலிடுங்கள். எந்த வேலைக்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டீர்கள், எந்த வேலைக்கு குறைவான நேரம் எடுத்துக் கொண்டீர்கள் என்பதையும் கணக்கிட்டு பாருங்கள். வேலையை முடிக்க அதிக நேரம் ஆனதற்குக் காரணம் என்ன? அந்த வேலையில் தோன்றிய சிக்கல்கள் என்னென்ன? நாம் செய்த தவறுகள் எவையெவை? இதையெல்லாம் குறித்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் அடுத்து குறையில்லாமல் வேலை பார்க்க முடியும்.   மேல் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்வதைத் தவிருங்கள். பெரும்பாலும் அதுபோன்ற சூழ்நிலைகள் உருவாகாமல் தடுப்பதே நல்லது. தவறு யார் மீது இருந்தாலும் அனுசரித்துச் செல்பவராக நீங்கள் இருங்கள். மேலதிகாரி மீது தவறு இருக்கும் பட்சத்தில், பலர் முன்னிலையில் வெளிப்படையாகச் சொல்லி அவமானபடுத்துவது தவறான செயலாகும். அவரைத் தனியாகச் சந்தித்து யார் மீது தவறு என்பதை விளக்கிச் சொல்லும்போது, அவர் மனபூர்வமாக தவறை ஒத்துக் கொள்வார். மேலும், உங்கள் மீதான மரியாதையும் அதிகரிக்கும்..
எங்கோ படித்தது.....