ADS 468x60

28 January 2011

தமிழ்ச்சங்கத் தலைவரிடம் ஒரு முறைப்பாடு...

மட்டக்களப்பு தமிழ்ச்சங்கம் ஒட்டு மொத்தமும் தேத்தாத்தீவில் தமிழ் ஒன்றுகூடலில் சங்கமித்த 25.01.2011 புதன் அன்று நம்மை விட்டு அகன்றும் அகலாத ஒரு மகான் நினைவுகூரப்பட்ட நன்நாளில் சில குறை நிறைகள் தமிழை வளர்த்துச் செல்வதில் அறிஞ்ஞர்களால் விவாதிக்கப்பட்ட சுவாரசியமான சில விடயங்களை பகிரலாம் என்று இந்தப் பதிவு வருகிறது. இந்நிகழ்வுகள் அனைத்தும் எல்லோரையும் கவரும் வகையில் வித்தியாசமாக ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
  (தமிழ் ஒன்று கூடலில் அகமகிழ வைத்த அகழ்விளக்கேற்றல் )
ஓன்று தமிழ்ச்சங்க கட்டிடம் கட்டுதல் என்ற விடயம், இந்த விடயத்துக்கான நிலம் மற்றது மாநகர சபையின் அனுமதி என்பன பெறப்பட்டு அதற்க்கான பூர்வாங்க வேலைகள் நிறைவு பெற்றிருப்பது வித்துவான் செபரட்ணம் அவர்களால் அனைவருக்கும் அறியத்தரப்பட்டது. அது போன்று இது சம்மந்தமாக பேராசிரியர் செல்வராசா அவர்கள் பேசுகையில் அங்கு தமிழ் ஆய்வரங்கம், மற்றும் பூராடனார்போன்ற பெருமக்களின் நூல் ஆய்வரங்கு, விருதறிவித்தல் என்பன கட்டடம் திறந்ந பின்னர் செம்மைப்படுத்தவேணும் என்றும் சொல்லப்பட்டது.

இன்னொரு விடயம் அங்கே காரசாரமாய் விவாதிக்கப்பட்டது, மூத்த ஊடகவியலாளர் பேரின்பராசா அவர்கள் 'எமது கிழக்குப் பல்கலைக்கழகம் மூத்த கலைஞர்களை பல்கலைக்கழக மட்டத்தில் பாராட்டுவதில் ஏனைய பல்கலைக்கழகம்போல் செயற்ப்படவில்லை' என்றும் அவர்கள் புறக்கணிக்கப்படுவதனால் எவ்வாறு தமிழை வளர்த்துச் செல்வது, ஊக்குவிக்கப்படும் என்றும் வினா எழுப்பினார். 
                                           (பதில் கூறும் பேராசிரியுர் ச.செல்வராசா கி.ப.க)
அதற்கு பதில் இறுத்துப்பேசிய கிழக்குப்பல்கலைக்கழக கல்வியியல் பேராசிரியரும் அங்கு பட்டம் வளங்குவதற்க்காக நியமிக்கப்பட்டிருக்கும் குழுத்தலைவருமான செல்வராசா அவர்கள் கூறுகையில் 'இவ்வாறான கௌரவிப்பு நடைமுறைகள் முறையாக ஒழுந்கமைக்கப்பட்டிருக்கின்றது என்றும் அவற்றை அறிந்து அதனூடாக செயற்ப்படுகின்றவர்கள் சிலரே என்றும் அதற்கு அறிஞர்களின் அசண்டையீனமான போக்கே காரணமாகும் என்றும் கூறினார்;. கலைஞர்கள், அவர்களின் ஆக்கங்களை உபவேந்தர் ஊடாக இந்த பட்டமளிக்கும் செயற்குழுவுக்கு முறையாக அனுப்பிவைக்கவேண்டும்; என்றும,; அதன்பின் பரிசீலனை செய்யப்பட்டு தகுந்த கௌரவிப்பு வளங்கப்படும்' என்றும் உறுதிபடக் கூறினார்.
                               
தவிரவும் ஈழத்துப்பூரடனார் பெயரில் கலை கலாசார மண்டபங்கள் திறந்து அவரை வருடா வருடம் நினைவுகூரப்படவேண்டும் என்றும,; அவரது பலநூற்றுக்கணக்கான நூல்கள் பயன்படுத்த வேண்டும் என்றும், அன்நினைவுகூரலில் எம் கனடாவாழ் தமிழ் உறவுகளின் பண மற்றும் மன உதவியுடன் செம்மையாக நடந்த பல்கலைக்கழக மாணவர் பாராட்டு மற்றும் பரிசு வழங்கிக் கௌரவிக்கின்ற நிகழ்வுகள் போன்ற பயனுள்ள இன்னோரன்ன நிகழ்வுகளும் எல்லோரையும் ஒரேகூரையின்கீழ் இணைத்த வகையில் எடுத்துச் செல்லவேண்டும் என்றும் வித்துவான் செபரெட்ணம் அவர்களால் அறைகூவப்பட்டது குறிப்பிடும்படியாய் இருக்கிறது.

அவர்மேலும் வினயமாக ஒன்றைக் கேட்டுக்கொண்டார் அதாவது இச்தமிழ்ச்சங்கத்தினில் அனைத்து தமிழ் ஆர்வலர்களும் இணைந்து கொண்டு எம்தமிழை வளர்த்துச் செல்லவேண்டும் என்றும் அதற்க்காக சந்தாப்பணம் செலுத்தி இதில் சேரவிரும்பினால் சேர்ந்து கொள்ளலாம் என்றும் வேண்டுகோள் விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தத் தமிழ் செம்மொழியானது கால தாமதம் என்றாலும் இப்போதாவது சுடுர்விடுகிறதே என்ற மகிழ்ச்சியில் உள்ளனர் உலகத் தமிழர்கள். உலகத்தின் தலையாய மொழிகளில் ஒன்றாக திகழும் நம் தாய் மொழிக்கு பெருமை சேர்க்கும் நினைவுப்பேருரை மேலும் ஒரு மகுடம் சூட்டுவதற்குச் சமம். எத்தனையோ பெருமைகளை தலையில் சுமந்து நிற்கும் தமிழுக்கு, மட்டக்களப்பு அறிஞர்கள் சூட்டும் இந்த மணிமகுடம் மேலும் ஒரு பெருமையாக அமையட்டும்.

ஓலைச் சுவடிகளில் உருண்டு புரண்ட தமிழ் இன்று கம்ப்யூட்டர் திரைகளில் ஜாலம் காட்டும் காலத்திலும் நளினம் குறையாமல், நவீனம் மறுக்காமல், பாரம்பரியத்திற்குப் பங்கம் வராமல் தொடர்ந்து பரவசம் காட்டி வருவது தமிழுக்குள்ள மகா சிறப்பு. இதை நாங்கள் இன்று கட்டிக்காக்க தொடங்கியிருக்கிறோம்.

ஆக ஒட்டுமொத்தத்தில் ஈழத்துப்பூராடனார் ஒரு தமிழ் வித்து அவர் இட்ட வித்துகள் முளைக்கத் தொடங்கி இருக்கின்றது இதற்கு நீரூற்றி வளர்த்து அது அனைத்து தமிழ் மக்ககுக்கும் ஒரு நிழல் விருட்சமாக்குவது எமது ஒற்றுமையான ஒருமித்த செயற்ப்பாட்டிலதான்; தங்கி இருக்கின்றது அல்லவா?

தமிழால் வாழும் நாம் நம் செம்மொழிக்கு பெருமை சேர்த்தவர்கு எடுக்கப்படும் விழாவை வாழ்த்துவோம்,  அக மகிழ்வோம்.
நிகழ்வின் படங்கள்

2 comments:

Unknown said...

Miha nalla pathivu Seelan, Un sevai thodara en vaalththukkal. Nihalvil pakedukkaamale anaiththu mukkiya amsankalaiyum ariya mudikintrathu.. mukkiya vidayam anaiththaiyum saaraamsam pisakaathapadi alakaai solli viddaai. Valthukkal. Nantri.
K.Jeyakanthan.

S.T.Seelan (S.Thanigaseelan) said...

நன்றி காந்தன்...

Post a Comment