ADS 468x60

13 January 2011

ஐயோ பரிதாபம்....

மட்டக்களப்பின் பல பாகங்கள் நீரில் மூழ்கி இருப்பினும் அவற்றில் அனேகமாகப் பாதிக்கப்பட்ட நமது படுவான்கரை மக்கள் படும் துயரம் சொல்லில் அடங்காது. போக்குவரத்து முற்றாகத்தடைப்பட்ட நிலையில் தோணிகளில் பயணம் மேற்கொள்ளும் அபாய நிலை பரிதாபகரமாக இருக்கிறது. மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிப்பது போல் யுத்தத்தின் பிடியில் இருந்து மெல்ல விடுபட்டு இருந்த இவர்களை இயற்கையின் சீற்றம் விட்டு வைக்கவில்லை. 

நாங்கள் இன்றுதான் சூரியனைக் கண்டுகொண்டோம், அதனால் இம்மகளின் அவலத்தினை  நேரில் தரிசிக்க முடிந்தது. அவர்களை நேர் கண்டபோது இவர்கள் பழுகாமம், போரதீவு, வெல்லாவெளி, கொக்கட்டிச்சோலை போன்ற இடங்களில் இருந்து வருவதாகவும் பல பேர் இந்த வெள்ள அனர்த்தத்தினால் பலர் நோய்வாய்ப்பட்டவர்களாக இருக்கின்றனர் என்றும் அவர்களை களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினரின் கூட்டு மயற்சியுடன் இம்மக்களது போக்குவரத்துக்கு உதவுவதுடன் அவர்களை வைத்திய சாலைகளுக்கு கொண்டு சேர்த்து உதவுவதனையும் காணக்கூடியதாக இருந்தது. மக்களோடு மக்களாக நிற்கும் படையினர் உன்மையில் பாராட்டப்படவேண்டியவர்கள்தான்.

இதற்கு மேல் வானிலை அவதான நிலையம் தந்துள்ள குறிப்பின்படி வரும் 36 மணித்தியாலங்களில் பலத்த காற்றுடன் பலத்த மழை பெய்யும் சாத்தியம் உள்ளதென எதிர்வு கூறியுள்ளது. அதனையும் தாண்டி எமத பகதிகளில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினர் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படைத்தேவைகளைக் கண்டறிய பாதிக்கப்பட்ட இடங்களில் தகவலை சேமித்து வருகின்ற போதும், வெள்ளத்தினில் அடித்துச் செல்லப்பட்ட வீதிகளினூடாகச் சென்று தகவல் சேமிப்பது சிரமமாக உள்ளதெனவும் தெரிவித்துள்ளனர்.

இவர்களின் நிலமை அன்றோ பரிதாபம். 1250 ரூபாய் வித்த அரிசு இப்போது 1500, 1600 ஆக விற்க்கப்படுவதடன், பச்சை மிளகாய் 80 ரூபாவுக்கு மேலாகவும் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் ஒரு விலைக்கும் இல்லை எனவும் விசனம் தெரிவிக்கின்றனர். இதற்கு காரணம் இவர்களின் பிரதான சந்தை வெள்ளத்தினில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment