ADS 468x60

04 January 2011

ஆசியாவை வறுமைக்கோட்டின் கீழ் இழுத்துச் செல்லும் உலக பொருளாதார நெருக்கடி.

ன்று தலையின் மேல் கை வைத்து வியக்கும் அளவுக்கு ஆசியாவின் வறுமை நிலைமை உலக அளவில் ஏற்ப்பட்டிருக்கும் பொருளாதார மந்தத்தினால் (Global economic slowdown) அதளபாதாளத்துக்கு சென்றுகொண்டிருக்கின்றது என பொருளியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இன்று ஆசியாவில் சுமார் ஒரு பில்லியன் மக்கள் மீழமுடியாத வறுமைக்குட்பட்டுள்ளதோடு(Abject poverty), ஏற்றுமதி நோக்கிய வளர்சியில்;(Export-led growth) ஏற்ப்பட்ட பெரும் சரிவு காரணமாக இந்நாடுகளில் பலர் தங்களது வேலையை இழந்து பரிதவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறு இருப்பினும் இன்று உலகலாவிய ரீதியில் ஏற்ப்பட்டுள்ள பொருளாதார, நிதி நெருக்கடிகளின் விளைவாக ஆசியாவில் நலிவுற்றவர்களே குறிப்பிடத்தக்க அளவு வறுமையின் பிடியில் தள்ளப்பட்டுள்ளனர்.

வறுமைப் பொறிக்குள் போகும் அபாயம்.
சிய அபிவிருத்தி வங்கியின் அறிக்கையின்படி ஆசியாவில் 1997-1998 காலப்பகுதியில் ஏற்ப்பட்ட நிதி நெருக்கடியினால் மொத்த ஆசியாவின் வளர்ச்சிப்போக்கு எதிப்பார்க்காதபடி 3மூ தொடங்கி 3.4% அளவுக்குள் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது எனக் குறிப்பிப்படுகிறது. இருப்பினும் இவற்றில் இருந்தான மீட்சி ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் ஏற்ப்பட்ட நெருக்கடிகளின் ஆழ, அகலத்தினைப் பொறுத்தும், ஆசியாவின் ஏற்றுமதிச்சந்தையின் 60% இலுமே இது தங்கி உள்ளது.

உன்மையில் ஆசியாவில் மெதுவான பொருளாதார வளர்ச்சி என்பது, இங்கு 60 மில்லியன் மக்ககள் தொடர்சியாக வறுமைப் பொறிக்குள் (Poverty Trap) தள்ளப்பட்டுக் கொண்டிருப்பதனைக் குறிக்கின்றது. இதிலிருந்து நாம் ஒன்றை விளங்கிக்கொள்ளலாம் அதாவது ஆசியாவின் பொருளாதாரம் தொடர்சியாக ஆரம்பத்தில் ஒரு நெருக்கடியான நிலையில் இருந்து வந்துள்ளது, காரணம் இவ்வறுமை அவர்களுக்கு தெரியாமலேயே பொறிக்குள் சிக்கவைத்துள்ளது என ஆசிய அபிவிருத்தி வங்கி சுட்டிக்காட்டுகின்றது.

ன்னும் ஒரு அதிர்ச்சிதரும் தகவலை ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் வெளியிட்டிருந்தது அதாவது தெற்காசியாவில் வறியவர்களின் எண்ணிக்கை மற்றும் வறுமையின் அளவு இவை இரண்டும் மிக வேகமாக இன்னும் ஒரு தொகை நலிவுற்ரோர் வர்க்கத்தினை உருவாக்கிவிடும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தெற்காசியாவின் பொருளாதார வளர்சியை மந்த கதியிலேயே வைத்திருக்கும் என்றும் என்றும் எதிர்வு கூறியிருக்கிறது.

இன்றய நிலையில் உலகலாவிய பொருளாதார வீழ்ச்சி (Global economic downturn) குறிப்பாக மிகமோசமாக வறியவர்களையே குறிவைத்து தாக்கி இருக்கின்றது. 2007 இல் உணவுப் பொருட்களின் விலை, பெற்றோலியப் பொருட்களின் விலை ஒப்பீட்டளவில் குறைந்திருந்தாலும் அது வறிய மக்ககின் வாழ்கைத்தரத்தில் எதுவித மாற்றத்தினையும் தோற்றுவிக்கவில்லை என்றே கூறவேண்டும்.

வாழ்கைத்தர மாற்றம்..
லண்டனில் உள்ள அபிவிருத்தி கற்கைகளுக்கான அமையம் (Institution of development studies)  தெரிவு செய்யப்பட்ட, குறிப்பாக வங்களாதேஸ் மற்றும் இந்தோனேசியா உள்ளடங்கலாக 5 நாடுகளிடையே வறிய கிராமப் புறங்களில் மற்றும் நகரப்புற சமுகங்களிடையே நடத்தப்பட்ட கள ஆய்வில் கிராமப் புறங்களில் வாழுகின்ற மக்கள் அடிக்கடி மிகக் குறைவான உணவினையே உட்கொள்கின்றனர் அத்துடன் குறைவான சத்துள்ள மற்றும் வேறுவகையான உணவுகளையே உண்ணுகின்றனர்; எனவும் கண்டுள்ளனர். மேலும் அனேகமானவர்கள் தாங்கள் சுயமாக தயார் செய்கின்ற மருந்து வகைகளையே பாவிப்பதாயும் உயர்வான நல்ல மருந்துப் பொருட்கள் அவர்கள் பாவிப்பதற்கு வசதியற்றுள்ளனர் என்றும் அறியப்பட்டுள்ளது. இவர்களத பிள்ளைகளில் அனேகமானவர்கள் பாடசாலையை இடைநடுவில் விட்டுச் செல்கின்றவர்களாகவும் ஏனையோர் அவர்களது வசதிக்கு ஏற்ப்ப மதரசா (Madarasa School) சமயப் பள்ளிகளில் கற்று வருகின்றனர் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

உலக பொருளாதாரத்தினில் ஆசியாவின் தொழில்துறைப்போக்கு.
குறைந்துவரும் கைத்தொழிற்துறை ஏற்றுமதி வர்த்தகத்தினால் பல கம்பனிகள் மூடிவிடுகின்ற நிலையில் காணப்படுவதோடு, திடீh எனப் பலதொழிலாளர்கள் தங்களத தொழிலினையும் படிப்படியாக இழந்துவருகின்றனர் (Layoff), அத்துடன் வழங்கல் செயற்ப்பாட்டில் (Supply chain)  பல இடர்பாடுகளும் ஏற்ப்பட்டு வருகின்றது. இவற்றில் தங்கி இருக்கும் உள்நாட்டு வியாபாரம் சிதைவடைந்து வருகின்றது. இவை வளர்சியடைந்துள்ள நாடுகளின் மந்த நிலையை மேலும் அதிகரித்து வருகின்றது.

2008 கடைசிப்பகுதிகளில் இருந்து தங்களது வேலைக்கான உடன்படிக்கை புதுப்பிக்காமை காரணமாக இடம்பெயர்ந்த ஏற்றுமதித்துறை ஊழியர்கள் குறிப்பாக ஜகார்த்தா நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அவர்களது வீடுகளுக்கு திரும்பிச் சென்றுள்ளனர். ஏனையோரது வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. சுட்டப்படி இயங்கும் கம்பனிகள் போலல்லாது யகார்த்தா போன்ற நகரங்களில் புதிய வேலைவாய்ப்புகள் இருந்தன ஆனால் அவை தரம் குறைந்தனவாகவும், தொழில் பாதுகாப்பு இல்லாததாகவும் இருந்தன என டாக்கா தொழிலாளர்கள் முறையிட்டிருந்தனர்.

இந்த நிலமை களிமண்டன், இந்தோனேசியா போன்ற நாட்டில் உள்ளவர்களிடம் சட்டவிரோதமாக கடத்தல், தங்கம் அகழ்தல் போன்ற செயற்பாடுகள் அதிகரிக்க காரணமாகியது. ஆண்மையில் சைனாவின் அறிக்கைப்படி ஏற்றுமதியில் ஏற்ப்பட்ட தொடர் சரிவு காரணமாக சங்காய், குவான்கோ போன்ற நகரங்களில் ஏற்றுமதி சார்ந்த( Export Oriented)  நிறுவனங்கள் 1000க்கு 10 மூடிவிடப்பட்டதாகவும், இதனால் 20 மில்லியன் பேர் தங்கள் தொழிலை இழந்துள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக பொருளாதார நெருக்கடியும் இடப்பெயர்வும்.
ஐரோப்பா, அமெரிக்கா, மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் குடிபெயர்ந்துவாழ்வபர்களின் பிளைப்பு மட்டம் பொருளாதார நெருக்கடி காரணமாக 2008 உடன் ஒப்பிடும்பொழுது 2009 இல் குறைவடைந்துள்ளது. குறிப்பாக உள்நாட்டு மொத்த வருமானத்தின் பெரும் புகுதி வெளிநாடுகளில் இடம்பெயர்ந்து வாழ்பவர்கள் மூலமே அன்னிய வருவாயாகக் கிடைக்கின்றது. ஆனால் இவை குறைவடைந்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் IBON இன் அறிக்கைப்படி 20 நாடுகளில் இருந்து கிடைக்கும் வருமானத்தில் 11 நாடுகளின் வருமானம் மிகமோசமாகக் குறைவடைந்துள்ளது, இது அன்னியச் செலாவணிவருவாயில் 96% ஆகும் என்றும் கூறுகின்றது.

இன்னொரு பக்கம் தெற்காசிய நாடுகளில் இந்தியா, பங்களாதேஸ், பாகிஸ்த்தான் போன்ற நாடுகளில் அன்னியச் செலாவணி வருவாய் 2008 இல் 16 விகிதமாய் இருந்து 2009 நடுப்பகுதியில் பூச்சியமாக குறைவடைந்துள்ளது. இத்துடன் சர்வதேச ஊழியச் சந்தையில் (International labor market)   ஏற்ப்பட்ட அழுத்தம் வங்காளதேசினால் உணரப்பட்டது. இதன் காரணமாக வெளிநாடுகளில் தொழில் புரிந்த 400,000 தொழிலாளர்களில் 200,000 ஊழியர்கள் தொழில் இழந்து நாடு திரும்பும் ஒரு நிலையை உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்ப்படுத்தி இருந்தது என லொவி நிலையம் குறிப்பிடுகின்றது.

இந்நெருக்கடி குறைந்த வருமானத்தில் வேலைபுரிபவர்களின் அளவினை 2007 இலிருந்து 2009க்கு இடையில் 50 மில்லியனில் இருந்து 120 மில்லியனாக உயர்த்தி உள்ளது என ILO சுட்டிக்காட்டியுள்ளது. அதிலும் குறிப்பாக ஆடைக்கைத்தொழில் துறை, மின் பொருட்கள் உற்ப்பத்தி செய்யதல் என்பனவற்றில் தொழில்புரியும் பெண்கள் மிகமோசமாகப் பாதிப்படைந்துள்ளனர்.

IDS  இன் ஆய்வறிக்கையின் பிரகாரம் அநேகமான குடும்பங்களிடையே மன அழுத்தம், வீட்டு வன்முறை (Domestic Violence)  மற்றும் உள்ழூர் குழுக்களுக்கிடையிலான கலவரம் என்பன அதிகரித்து இருக்கிறது. தவிரவும் சிறு அளவிலான வன்முறை, அல்ககோல் பாவனை, போதைவஸ்த்து பாவனை, கைவிடப்பட்ட சிறுவர்கள் மற்றும் வயோதிபர்கள் என்பன அதிகரித்து காணப்படுவதாக சுட்டிக்காட்டுகிறது. இந்நெருக்கடியில் வறியமக்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை சாதாரண பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே உன்மையில் நடைமுறையில் உள்ள உலக பொருளாதார நெருக்கடி ஒன்றை எங்களுக்கு கோடிட்டுக் காட்டுகின்றது. அதாவது அதிகரித்து வரும் நாடுகளுக்கிடையேயான தங்கி இருக்கின்ற நிலமை (ஐவெநசனநிநனெயnஉந), பெற்றோலியப் பொருட்களின் பாவனை என்பனவற்றின் மீதான கட்டாயமான ஈடுபாடு என்பன பொருளாதார நெருக்கடியில் இருந்தான மீட்சியை குறுக்கிவிடுகின்றமையைக் காணக்கூடியதாக உள்ளது. இருப்பினும் அச்சப்படவேண்டியது என்னவெனில் இந்த பாரிய பொருளாதார நெருக்கடி காரணமாக பூதாகரமாக வளர்ந்து வரும் வறுமையை ஒளிக்க இவ்வாசிய நாடுகளிடம் முன்னாயத்த திட்டங்கள் சரியாக இல்லை என்பதுதான்.

2 comments:

Nalliah said...

அன்று தமக்குச் சொந்தமான கிழக்கிந்தியக் கம்பனி மூலம், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளைக் கொள்ளையடித்த ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பல், இன்று அமெரிக்க டாலரை அச்சிடும் தமக்குச் சொந்தமான பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE) போன்ற தனியார் வங்கிகள் மூலம், எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி நூற்றுக் கணக்கான பில்லியன் கணக்கில் நாணயத்தாள்களை அச்சிட்டு உலகைக் கொள்ளையடிக்கிறார்கள்

அன்று உழைப்பை சார்ந்து உழைப்பாளர்களாலும் தொழி லாளர்ளாலும் உருவாக்கப்பட்ட விவசாயப்பொருட்கள், உற்பத்திப்பொருட்கள் போன்றன தங்கத்திற்கும் வெள்ளிக்கும் கைமாறின. ஆனால் இன்று தங்கம்,வெள்ளிக்கு கைமாறியது போய் சர்வதேச செலாவணியான எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்குச் சொந்தமான பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE) அச்சிட்ட அமெரிக்க டாலருக்கு மக்களின் உழைப்பும், நாடுகளின் இயற்கை வளங்களும், உற்பத்தி பொருட்களும் கைமாறுகின்றன. ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்கும் அவர்களது ஏகபோகக் கூட்டுகளுக்கும் இல்லாமையிலிருந்தே உருவாக்கிய கடனட்டைகளை, வங்கிகளுக்கு விஸ்தரித்து, கடனட்டைகள் மூலம் சாதாரண மக்களை பில்லியன் கணக்கில் கொள்ளையடிக்கின்றார்கள்.
.
கடந்த அரை நூற்றாண்டு காலமாக, அனைத்து பெருநிறுவனங்களுக்கும் தேவையான நீண்டகால மூலதனம், பங்கு (SHARES) நிதியாக்கம், கடன் பத்திரங்களின் (BOND) விற்பனை, கடன் நிதியாக்கம், மற்றும் நீண்டகால கடன் ஆகியவற்றின் மூலம் பெறப்படுகின்றது. குறைந்தகால நிதியாதாரம் அல்லது செயல்பாட்டு மூலதனம் வங்கிக்கடன் மூலம் பெறப்படுகின்றது.

தனிநபர்களும், பெருநிறுவனங்களும், வங்கிகளிடமிருந்து நுகர்வு மற்றும் முதலீட்டுக் கடனை நம்பி இயங்க வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகிவிட்டது, எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி, வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிக்கடன்களைப் பெற்றுக் கொண்ட பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், எதுவுமேயில்லாமல் வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிக் கடனட்டைகளைப் பெற்றுக் கொண்ட தொழிலாளர்களும், நிரந்தரமாகக் கடன்காரர்களாக மாற்றப்படுவதோடு இவ்வங்கிக்கடன்பழுக்கள் மேலும் உயருமே தவிர, முற்றாக திருப்பிச் செலுத்தப்பட இயலாது.
.
வங்கிக் கடன்தான் மூலதனம் என மாறிப்போயுள்ள, சேமிப்பே இல்லாத “கடன்” (CREDIT) மயமான உலகில், தொடர்ந்து துரத்தும் கடன் பழுவால் ஏற்படும் பணப் பாய்ச்சல் (CASH FLOW) குறைவினால், பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒருவருக்கொருவர் எதிராகச் சண்டையிட்டுக் கொள்வார்களே தவிர, பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒன்றுபட்டு எதுவுமேயில்லாமல் வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிக்கடன்கள் மற்றும் கடனட்டைகள் மூலமாக தம்மைத் தொடர்ச்சியாகக் கொள்ளையடித்துக் கொண்டே இருக்கின்ற ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்கும் அவர்களது ஏகபோகக் கூட்டுகளுக்கும் எதிராகப் போராடமாட்டார்கள்.



- நல்லையா தயாபரன்

Nalliah said...

நாட்டு மக்களின் ஆரோக்கியம், கல்வி போன்றவற்றை பேண, செலவிடப்பட வேண்டிய மக்களின் வரிப்பணம், அரசாங்கங்களின் வங்கிக் கடன் சுமைக்கு வட்டியாக செலவிடப்படுகின்றது. 20,000 பில்லியன் டாலர் வங்கிக் கடனில் மூழ்கி இருக்கும் அமெரிக்க அரசாங்கம் முதல் 500 பில்லியன் டாலர் வங்கிக் கடனில் ஆழ்ந்து போயுள்ள கிரேக்க அரசாங்கம் வரை அனைத்து அரசாங்கங்களும், பெருவர்த்தக நிறுவனங்களும், சாதாரண மக்களும் தீராத வங்கிக் கடன்களில் மூழ்கி, முன்னொருபோதும் முகம் கொடுத்திருக்காத புதிய “கடன்” சவால்களை எதிர் கொண்டு திண்டாடும், அனைத்தும் “கடன்” மயமான இன்றைய உலகில், அனைத்தும் வங்கிகளின் கைவசமான இன்றைய காலகட்டத்தில், “மூலதனம்” பற்றி நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட பல விடயங்களெல்லாம் இத்துப்போன கருத்துக்களினதும், காலாவதியான தகவல்களினதும், குவியல்களாக மாறிவிட்டன.

உலகம் பூராக, உலகவங்கி (WORLD BANK), சர்வதேச நாணய நிதியம் (INTERNATIONAL MONETARY FUND), பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE), உள்ளிட்ட பல்வேறு வங்கிகளின் சொந்தக்காரர்களான ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலினதும், ரொக்கபெல்லர் (ROCKEFELLER), வாபேர்க் (WARBURG) மற்றும் மோகன் (MORGAN) உள்ளிட்ட ரொத்ஸ்சைல்ட் கும்பலினது ஏகபோகக் கூட்டுகளினதும் "பணநாயகம்" அனைத்து நாடுகளிலும் ஜனநாயகத்தை அழித்தொழித்துவிடும். இதனையே தத்துவஞானி அரிஸ்டோட்டல் 2,400 வருடங்களுக்கு முன் "Democracy is when the indigent, and not the men of property, are the rulers." எனக் கூறியிருந்ததாக பல ஆங்கில நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

எண்பதுகளில் ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலினதும், ரொக்கபெல்லர் (ROCKEFELLER), வாபேர்க் (WARBURG) மற்றும் மோகன் (MORGAN) உள்ளிட்ட ரொத்ஸ்சைல்ட் கும்பலினது ஏகபோகக் கூட்டுகளினதும் "பணநாயகம்" எம்மவரில் பலருக்கும் புரியவில்லை என்பதே உண்மை. ஆனால் இன்றைய தகவல் உலகில் இதனைச் சரிவர அறிந்து, புரிந்து கொள்வது, சற்று இலகு.

அமெரிக்கா முதல் ஆபிரிக்கா வரை உலகளாவிய ரீதியில், மக்களனைவரும் அச்சுறுத்தல்கள் மூலமும், பயத்தினூடாகவும், கட்டுப்படுத்தப்பட்டு, இலகுவில் ஆளப்படக் கூடியவர்களாக உருவாக்கப்படுகின்றார்கள்.

99 சதவீதமான மக்களின் சிந்தனை, அன்றாட வேலைச் சுமையுடனும், அடுத்தநேர உணவுடனுமே மட்டுப்படுத்தப்படுகின்ற சூழ்நிலை உருவாக்கப்படுகின்றது.

எண்பதுகளில் மேற்குலகமும், சோவியத் யூனியனும் பொருந்திக் கொண்டிருந்த போது, சோவியத் யூனியனை வீழ்த்துவதற்காக, ஆப்கானிஸ்தானில் வேற்றுநாட்டு இசுலாமிய தீவிரவாத இளைஞர்களை ஆயுதபாணிகளாக்கி, சோவியத் யூனியனுக்கு எதிராக யுத்தத்தை நடாத்தி வந்த அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, இதரநாடுகளுக்கும் எதிர்காலத்தில் அதே இசுலாமிய தீவிரவாத இளைஞர்களால், தற்போது பலத்த பிரச்சனைகள் உருவாகியுள்ளன.

- நல்லையா தயாபரன்

Post a Comment