ADS 468x60

04 January 2011

'பெண்களுக்கு சாபக்கேடாகும் வறுமைப் பிணி'

 லக சனத்தொகையில் வறுமைப் பொறிக்குள் சிக்கியவர்களில் பெண்கள் பெரும்பான்மையினராகக் காணப்படுகின்றனர். அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளில் வறிய சமூகங்களை ஒப்பிட்டு நோக்கும்போது அங்கு பெண்களும், சிறுவர்களுமே மிக மோசமான பற்றாக்குறையால் (Harshest deprivation) பாதிக்கப்படுகின்ற அனுபவங்களை அவதானிக்கலாம்.
இவர்கள் அநேகமாக வறியவர்களாகவும்,; போதிய உணவு இல்லாது போசாக்குக் குறைந்தவர்களாகவும் (Malnourished) குறைந்தளவிலேயே மருத்துவ சேவைகள், சுத்தமான குடிநீர், சுகாதாரம் மற்றும் ஏனைய நன்மைகளை மிகச் சிறிய அளவில் பெறுகின்றவர்களாகவும் காணப்படுகின்றனர். வருமானங்களை பங்கு போடுகின்ற நிலமையில் கூட பெண்களை தலைவர்களாகக் கொண்ட குடும்பங்களுக்கிடையே (Female – headed households) அவர்களுடைய உழைக்கும் திறனுக்கு குறைவானதாவே கொடுக்கப்படுகின்றது. அதுபோன்று ஆண்களை தலைவர்களாகக் கொண்ட குடும்பங்களிடையேயும் அவர்களது உழைப்பில் பெண்களுக்குச் சேரும் வருமானப்பங்கு மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கின்றமை அறிக்கைகள் மூலம் அறியக்கிடக்கின்றது.

வருமானப்பகிர்வில் பாரபட்சம்....
இதற்கு மேலாக பெண்கள் சாதாரணமாக கல்வி கற்பதில், முறைசார் துறைகளில் தொழில் புரிவதில் (Formal –sector employment) சமூகப்பாதுகாப்பில், மற்றும் அரச தொழில்வாய்ப்புத் திட்டங்களில் அதிகுறைந்த வாய்ப்பினை கொண்டிருக்கின்றனர். ஆகவே மேலே கூறிய வருமானம், வாழ்க்கைச் செலவுக்காக செலவிடும் பணம் என்பவற்றை ஆண்களுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் போது மிகக்குறைந்த அளவிலேயே வறிய பெண்களின் வாழ்க்கையில் பெறக்கூடியதாக இருக்கின்றது.

மூன்றாம் உலக நாடுகளிடையே பெண்களைத் தலைவர்களாகக் கொண்டு வாழுகின்ற வறிய குடும்பங்களை எடுத்துக்கொண்டால், அங்கே பொதுவாக ஆண்களின் உழைப்பு பூ10ச்சியமாக இருக்கும். தரவின் அடிப்படையில் பெண்களைத் தலைவர்களாகக் கொண்ட குடும்பங்கள் இந்தியாவில் 20 சதவீதமும், கோஸ்டரிக்காவில் 17 சதவீதமும், கென்னியாவில் 40 வீதமும் காணப்படுவதோடு இத்தொகை மேலும் மேலும் இந்த வளர்முக நாடுகளிடையே அதிகரித்த வண்ணம் இருக்கின்றது என்று கூறப்படுகின்றது. ஏனெனில் பொதுவாக பெண்களை தலைமையாகக் கொண்ட குடும்பங்களிடையே கல்வி, வருமானம் என்பன மிகக் குறைவாகக் காணப்படுவதுடன், பிறக்கும்போது இறக்கின்ற குழந்தைகளின் அளவு (Fertility) அதிகமாகக் காணப்படுகின்றன. இதற்கு மேலாக ஒரு பெற்றோரை மட்டும் கொண்டுள்ள வறிய குடும்பங்களிடையே அனேகமானவர்கள் தங்களது உணவுக்காக மிகக்குறைந்த அளவில் செலவிட வேண்டிய அழுத்தத்தின் மத்தியில் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆண்களைவிட பெண்கள் மிகவும் வறியவர்களாக் காணப்படுகின்றனர்.

வேலைவாய்ப்புக் கெடுபிடிக்குள்...
நகரப்புறங்களில் பெண்கள் முறைசார் துறைகளில், அரச துறைகளில் மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புப் பெறுவது மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது. அப்படியிருந்தாலும் அடிக்கடி முறைகேடான வகையிலும், குறைந்த வருமானம் தரும் துறைகளிலும் தான் ஈடுபடுத்தப்படுகின்றனர். முறைகேடான சட்டத்தின் கீழ் முரனான வேலைகளில் பெண்கள் வேலைக்கமர்த்தச் செய்கின்ற ஒரு நிலைமை இந்தத் தனியார் வேலைத்தளங்களில், மற்றும் ஆடைத்தொழிலகங்களில் அவர்களது சமூகப் பாதுகாப்பு (Social security) கட்டுப்பாட்டு வருமான சட்டங்கள் (Minimum wage –lows ) என்பவற்றை எல்லாம் உதாசீனப்படுத்தும் ஒரு நிலை உருவாகியுள்ளது. இது போன்று கிராமப் புறங்களில் உள்ள பெண்கள் கூட மிக அரிதாகவே வருமானங்களை ஈட்டுவதற்காகவும், உள்ளூர் வளங்களைப் பாவிக்கின்ற நிலமைக்கும் ஆளாகியுள்ளனர். இதற்கு மேலாக இவ்வளர்முக நாடுகளில் பெண்களுக்கு இருக்கக்கூடிய அடுத்த சவால் பாராளுமன்றங்களில் அடிக்கடி இயற்றப்படுகின்ற சட்டங்களில் (Legislation) பெண்கள் சொத்துக்களை தமது உடமையாக்குவதில் நீதியீட்டும் சம்மநிமான ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவதில் ஆண்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகின்றது.


இன்னொரு வகையில் பார்த்தோமானால் அபிவிருத்தியை அளவிடுவதற்கு மொத்தத் தேசிய உற்பதத்தி; போதியளவு குறிகாட்டியாக இருக்கவில்லை. ஏனெனில் இவை ஒரு நாட்டின் முழுவறுமை அளவினை கணிப்பீடு செய்யத் தவறி விடுகின்றது அதே போன்று தனிநபர் வருமானக் கணிப்பீடு ஒரு குடும்பத்தில் சரியான ஆள்வீத வருமானத்தை (Per capita income) கணிக்கத்தவறி விடுகின்றது. ஏனெனில் குறித்த நாட்டின் மொத்த வருமானம் அங்கு வாழுகின்ற மக்களிடையே சமமாக பங்கிடப்படுவதில்லை. அதிலும்; இந்த கணிப்பீடுகளில் பெண்களின் நிலையைக் கணிப்பிடுவதில் அதிகூடிய பாராபட்சம் காட்ட்படுகின்றது. உதாரணமாக அவர்களது போசாக்கு, சுகாதாரம் மற்றும் உடமை என்பவற்றைக் குறிப்பிடலாம்.

வழிவழியான ஆண்ஆதிக்கம்.
குறிப்பாக ஆண்களை விட பெண்கள் வறுமையில் அநேகமாக பாதிக்கப்படுகின்றனர். ஆய்வறிக்கைகளின் படி உதாரணமாக இந்தியாவில் பெண்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்படும் போது 04 தடவைகள் வைத்தியசாலைக்கு செல்கின்றனர். அதேபோன்று ஆண்கள் நோயினால் பாக்கப்படும் போது 40 தடவைகள் மருத்துவமனைக்கு செல்கின்றனர் என அதில் கண்டறியப்பட்டுள்ளன. இவ்வாறான வள ஒதுக்கீட்டில் காணப்படும் சமத்துவமின்மையானது பெண்களின் வாழும் காலத்தினைக் குறைத்துவிடுகின்றது என கூறப்பட்டுள்ளது. இதனால் ஆண்களுடன் பெண்கள்; கொள்ளும் பாலியல் உறவு குறைந்துள்ளதாகவும் ஆய்வு கூறுகின்றது.

இவ்வாறான பாராபட்சங்களில்; பெண்களுடைய பொருளாதாரத்தில் மிகவும பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்றது. இன்னொரு விடயம் என்னவெனில் பெண்களின் உழைப்பில் குடும்பங்களிடையே செலவிடப்படுகின்ற வருமானத்தின் அளவு ஆண்களுடன் ஒப்பிடும்போது அதிகமாக இருப்பதுடன் இதில் பெண்கள், சிறுவர்கள் அதிகமான நன்மையும் பெறுகின்றனர். ஆய்வுகளின் அடிப்படையில் பார்த்தால் பெண்களின் உழைப்பில் கிடைக்கும் வருமானத்தில் அனேகமானவை அவர்களின் குடும்பத்தின் போசாக்கிற்கு ஒதுக்கப்படுகின்றன. ஆனால் ஆண்களின் வருமானம் நாளாந்த தேவைகளை பூர்த்தி செய்வதில் மிகமிக குறைந்தளவு சதவீதமாகும்.

ஒடுக்குமுறையான போக்கு..
இன்னோரன்ன பல காரணங்களினால் பெண்களுக்கான வளப்பகிர்வு, வருமானம் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கின்றது. பார்ப்போமானால் அவர்கள் தாயாக இருத்தல், விறது சேமித்தல், சமைத்தல் மற்றும் இன்னோரன்ன பிரத்தியேக வேலைகள் கூலிவழங்கப்படாமல் (Unremunerated) நாட்டுக்கும் வீட்டுக்கும் உழைக்கும் வருமானங்களாகும். இவை ஒன்றும் தேசிய வருமானப்பங்கீட்டில் சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை. கீழைத்தேய நாடுகளில் வறிய குடும்பங்களில் பிறக்கும் பெண்கள் கூலியில்லாமல் விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத துறைகளில் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக மெக்சிக்கோவின் கணக்கெடுப்பின்படி 22.5 வீதமானவக்கள் விவசாயத்துறையிலும், 7.6 வீதமானவர்கள் விவசாயம் அல்லாத துறையிலும் முழுநேரமும் வேதனம் இன்றி வேதனையுடன் வேலை புரிகின்றனர். தவிர பகுதிநேரங்களில் வீட்டுத்தோட்டம், சிறுவிவசாயம் என்பனவற்றில் ஈடுபடுகின்றனர் இருப்பினும் இவைமூலமான வருவாய்களும் கணவன்மாரினால் கட்டுப்படுத்தப்படுகின்றதாக கூறப்படுகின்றது.

ஆகவே குடும்பத்தினை தலைமைதாங்கி நடத்துகின்ற பெண்களிடையே காணப்படுகின்ற வருமானப் பாகுபாடு (Earning Disparity) அதேபோன்று பொருளாதார நிலையில் ஏற்ப்படுகின்ற வீழ்சி இவற்றினை இல்லாமல் செய்யும் வகையில் இன்றய அபிவிருத்தி கொள்கைகள் வகுக்கப்பட்டு உற்ப்பத்தி வேறுபடுதலை குறைக்க வேண்டி இருக்கிறது தவிரவும் அரசாங்கங்களால் முன்வைக்கப்படுகின்ற வறுமை ஒளிப்புத்திட்டங்களில் ஆண்களும் கணிசமான அளவு உள்வாங்கப்பட வேணும். அத்துடன் விவசாயத்துறையில் ஆணாதிக்கம் செலுத்தும் பயிரிடலில் மாற்றங்கள் கொண்டுவருதல், மற்றும் இன்னோரன்ன சிபார்சுகளை கொள்கையளவில் இல்லாது செயல்வடிவம் அளிக்கும்போது பெண்களின் வறுமைக்குட்படும் தன்மை குறைவடையும்.

0 comments:

Post a Comment