இப்போது இருந்து வரும் வெள்ள அபாய நிலை தீரு முன்னமே இன்று காலையில் ஒரே ஓட்டம் மக்கள் அலை அலையாக ஓட்டம் எடுத்து பிரததான வீதிகளை கடந்து வந்ததை களுவாஞ்சிக்குடி, களுதாவளை, தேத்தாத்தீவு, மாங்காடு மற்றும் செட்டிபாளையம் போன்ற இடங்களில் காணக்கூடியதாக இருந்தது. குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில் வெள்ளத்தில் இடம் பெயர்ந்து பாடசாலைகளில் இருந்த மக்கள் பீதியுடன் அடித்து ஓடிவந்தது பரிதாபகரமாக இருந்தது.
இத்தனைக்கும் நான் உடநடியாக அனர்த்த முகாமைத்துவ உத்தியோகஸ்த்தரை தொடர்புகொண்டு கேட்டபோது இது வெறும் வதந்தி எனக்கூறினார். இதில் இருந்த ஒன்றை என்னால் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. அது இன்னும் மக்கள் இந்த தகவல்களில் நம்பிக்கை வைக்கவில்லை என்பதைக் காட்டுவதுடன், மேலாக இவக்களுடைய ஒருங்கிணைந்த செயற்ப்பாட்டின் நீள அகலத்தன்மை குறைவாக இருப்பதனையுமே சுட்டிக்காட்டுகின்றது அல்லவா?
ஆனால் சுமாத்ரா தீவுகளின் கடலுக்கடியில் 5.5 றிச்டர் அளவில் சனிக்கிழமை அதாவது நேற்று அதிர்வு ஏற்ப்பட்டுள்ள தகவலையும் கருத்தில் எடுக்கவேண்டியது அவசியமாகும்....
ஆனால் சுமாத்ரா தீவுகளின் கடலுக்கடியில் 5.5 றிச்டர் அளவில் சனிக்கிழமை அதாவது நேற்று அதிர்வு ஏற்ப்பட்டுள்ள தகவலையும் கருத்தில் எடுக்கவேண்டியது அவசியமாகும்....
ஆகவே மக்கள் இந்த தகவல் மையங்கள், முன் எச்சரிக்கை கோபுரங்களில் நம்பிக்கை வைக்கும் காலம் எப்போது வரும்? இது சம்மந்தமான விழிப்புணர்வும் நம்பிக்கையும் மக்கள் மத்தியில் எப்போது அதிகரிக்கும்? என்கின்ற வினாக்களுக்கு விடைகிடைக்கும் நாளே மக்களுடைய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் நாளாகும்.
அது தவிரவும் அனாமதேச வாந்திகள் மூலம் மக்களை பீதியுற வைக்கும் விசமிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதன்மூலமும் இவ்வாறான செயற்கை அனர்த்தங்களை தவிர்க்கலாம் அல்லவா?
0 comments:
Post a Comment