ADS 468x60

17 January 2017

பாரப்பா பழனியப்பா எப்பங்க நாம முன்னேறுவது???

நேற்றய சிங்கப்பூரைப் பாருங்கள் அது 1950களில் இலங்கை மற்றும் இந்தியாவை விட ஏழை நாடாகத்தான் இருந்தது ஆனால் இன்றய சிங்கப்பூர் முற்றிலும் வேறுபட்டது, அதன் மொத்த மக்கள் தொகை கிட்டத்தட்ட 43 லெட்சம் மற்றும் கிட்டத்தட்ட 644 கிலோமீற்றர் பரப்பளவு கொண்ட குட்டித்தீவு இது. இந்தியாவின் வெங்குழூரை விட சிறிய நகரம். ஒரு சிங்கப்பூர் குடிமகனின் சராசரி வருமானம் நம்மை விட பன்மடங்கு அதிகம். 80 சதவீதம்பேர் தனி பிளட் வைத்திருக்கின்றார்கள். இது இருபத்தைந்தே ஆண்டுகளில் ஏற்ப்பட்ட முன்னேற்றம்.

அடுத்தது ஜப்பான் பெரும்பாலான கனிமங்கள் எதுவும் இல்லாத சுனாமி மற்றும் பூகம்ப நாடு, இரண்டாம் உலகப்போரில் வீழ்த்தப்பட்ட நாடு. இரண்டு அணுக்குண்டுகளை மார்பில் வாங்கிய நாடு. புல் பூண்டு கூட முளைக்காது என்று கருதப்பட்ட நாடு இன்று கப்பல் மீது விவசாயம் செய்துகொண்டிருக்கின்றது. இன்று உலகப் பொருளாதாரத்தில் ஜப்பானில் நிலை என்ன? அது இரண்டாவது நிலையில் இருக்கின்றது. கொரியா தாய்வான் மலேசியா நம்மைச் சுற்றிலும் நம்மை விட ஏழையாக இருந்த நாடுகள் அத்தனையும் நம்மை விட முன்னேறிவிட்டன. இது நம்ம நாடு இன்னும் தப்பவிட்டுக்கொண்டிருக்கும்தருணங்களால் ஆனதுதான்.

66 வருட சுதந்திரம், 2கோடி மக்கள் தொகை, 65,610 கி.மீ பரப்பளவு, அதில் பாதிக்கு மேல் விவசாய நிலம், குளம், ஆறு, சுற்றிவர கடல் வளம், இன்னும் இருந்தும் உலகப் பொருளாதாரத்தில் இன்னும் 69 வது இடத்தில் இருப்பது ஏன்? ஊழலில் 92 வது இடம், ஊடக சுதந்திரத்தில் உலகில் 162வது இடம், ஏன் ஏன் உங்களில் யாராவது சொல்ல முடியுமா?? கேட்டால் நல்ல அரசாங்கம் இல்லை என்கின்றனர், நல்ல அமைச்சர்கள் இல்லை என்கின்றனர், நல்ல பொலிஸ்காரர்கள் இல்லை என்கின்றனர், நல்ல நீதி கிடைக்கவில்லை என்கின்றனர். 

இப்படி நல்ல நல்ல என்று எல்லாம் நல்லதாக இருக்கனும் என சொல்லுகின்றோம் நம்மளில் எத்தனை பேர் நல்ல குடிமகனாக இருக்கின்றோம்? ஏத்தனைபேர் நம்முடைய கடமையை ஒழுங்காகச் செய்கின்றோம், 2 கோடி மக்கள் சேர்ந்த அழகான நாடுதான் இலங்கை, ஜனாதிபதி, மந்திரி, நீங்க நான் என எல்லோரும் நமது கடமையை ஒழுங்காகச் செய்யும்போதுதான் நமது நாடு முன்னேற்றமடையும்.

மக்கள் சக்தி அதுதான் மாபெரும் சக்தி, இன்னும் இலங்கையைப் பொறுத்தவரையில் விலைபோகும் ஒன்றாக இருக்கும் இந்த சக்தியை விழிப்பிழந்து கிடக்கும் இந் சக்தியை விழிப்படையச் செய்யவேண்டும். நீ, நான், அவன் என்று வாழாமல் நாம் என்று வாழத்தொடங்கவேண்டும்.
//ஏற்கனவே முகப்புத்தகத்தில் வெளியான எனது பதிவு//

0 comments:

Post a Comment