ADS 468x60

13 April 2010

விகிர்த்தி புதவருடப் பிறப்பு

சங்கு முழங்க 
தானை பல வென்று 
எங்கும் உலகாழும் -தமிழன்
சிங்க நடைபோட்டு 
வங்கக் கடல் சூழ
வாழ்த்து மழைமாரி- தமிழர் 
வாழும் வரை பெய்ய 
ஆண்டே வருக 
புத்தாண்டே வருக...

தமிழர் காலக்கணிப்பு முறையின்படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரெண்டு மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாகும். தமிழ் மாதங்கள் பூமிக்குச் சார்பாகத் தோற்றுகின்ற சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்தே இம் மாதங்கள் கணிக்கப்படுகின்றன. இதனால் இவை சூரிய மாதங்கள் எனப்படுகின்றன. அவ்வாறு வரும் ஆண்டுகளை 'பிரபவ முதல் அக்ஷய' வரை அறுபது தமிழ் வருடங்களாக அறுபது பெயர்களிட்டு அழைக்கின்றனர்.இராசிச் சக்கரத்தில் மேட இராசிக்குள் சூரியன் நுழைவதிலிருந்து அந்த இராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதமாகும். சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. 

சூரியன் மேட இராசிக்குள் நுழைவது சித்திரை மாதப் பிறப்பு ஆகும். அத்துடன் சித்திரை முதல் மாதம் என்பதால் இதுவே புதிய ஆண்டின் தொடக்கமும் ஆகும். இதனால் சித்திரை மாதம் முதல் நாளைத் தமிழர் புத்தாண்டாகக் கொண்டாடுவர்.

இன்று செவ்வாய்க்கிழமை பங்குனி மாதம் 30ஆம் திகதி வைகறை 5 மணி 21 நிமிடத்தில் (14.04.2010) விகிர்தி வருடம் பிறப்பதாகவும்இ அன்று பின்னிரவு 1 மணி 21 நிமிடம் முதல் சித்திரை முதலாம் திகதி புதன்கிழமை காலை 9 மணி 21 நிமிடம் வரை விஷூ புண்ணியகாலமாகுமென வாக்கிய பஞ்சாங்கமும் நாளை புதன்கிழமை 14.04.2010 காலை 6 மணி 57 நிமிடத்தில் விகிர்தி வரு டம் பிறப்பதாகவும்இ செவ்வாய் இரவு 2 மணி 57 நிமிடத்திலிருந்து புதன் முற்பகல் 10 மணி 57 நிமிடம் வரையும் புண்ணி யகாலமாகுமெனத் திருக்கணித பஞ்சாங் கமும்  தெரிவிக்கின்றன.புதிய விகிர்த்தி வருடம் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி எதிர்வரும் 14ம் திகதி சித்திரை மாதம் 4ம் திகதி காலை 6.57க்கு மேடலக்கிணமும் ரேவதி நட்சத்திரம் மூன்றாம் பாதம் அமாவாசை நிதியும் மரணயோகமும் கூடிய சுபவேளையில் பிறக்கிறது. வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம் பங்குனி மாதம் 31ம் திகதி 14ம் திகதி புதன்கிழமை அதிகாலை 5.23க்கு மீன லக்ணம் ரேவதி நட்சத்திரம் இரண்டாம் பாதம் அமாவாசைத் திதி மரணயோகம் கூடியவேளையில் புதுவருடம் பிறக்கிறது என சுட்டிக் காட்டப்படுகிறது. 

செவ்வாய்க்கிழமை இரவு 2.57முதல் புதன்கிழமை 10.57வரையுள்ள காலம் புண்ணிய காலமாக திருக்கணித பஞ்சாங்கமும் செவ்வாய்க்கிழமை பின் இரவு 12.23முதல் புதன் காலை 8.23 வரையும் புண்ணியகாலம் என்றும் வாக்கிய பஞ்சாங்கம் குறிப்பிட்டுள்ளது. இப்புண்ணிய காலத்தில் மருந்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்து புத்தாண்டை உடுத்தி சித்திரை கொண்டாடலாம் என வேண்டப்படுகிறது. புது வருட ஆதாய பலன் இங்கே பார்க்கலாம்.....

0 comments:

Post a Comment