"இலங்கையிலயே கிழக்கு மாகாணத்தில்தான் அதிகளவான புற்றுநோயளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்னும் சுகாதார அமைச்சின் அதிர்ச்சி தகவல் அனைவருக்கும் தெரிந்த விடயமே'" இருப்பினும் யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்களுக்குள் பாரிய உட்கட்டுமான வளர்ச்சிகள் ஏற்ப்பட்ட போதிலும் சுகாதாரம், வாழ்க்கைத்தர உயர்வு என்பன பெரிய அளவில் ஏற்படவில்லை என்பது கசப்பான உன்மை.
உலகில் வளர்ந்த நாடுகளில் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து காணப்படுவதற்கு அவர்களால் அனுபவிக்கப்படும் தரம் வாய்ந்த அடிப்படை வசதிகளே காரணங்களாகும். கடந்த யுத்த காலத்தில் குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழுகின்ற மக்கள் இடப்பெயர்வு, வாழ்வாதார இழப்பு, உயிர் இழப்புக்கள், காரணங்களாக தங்களது அடிப்படை வசதிகளைக்கூட அனுபவிக்க முடியாதவர்களாக இருந்து விட்டமை துரதிஸ்ட்டமே.