இந்தப்பாடல் என்னால் இற்றைக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டு பெரும்பாலும் அனைவராலும் அறியப்பட்ட பாடல். இப்போது இந்தப்பாடலுக்கான இசையை செல்வன் மனோ யோகராஜ் அவர்களால் அமெரிக்காவில் இருந்து அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அவருக்கு எனது மனம் நிறைந்த நன்றிகள்.
மட்டக்களப்பு தமிழகத்தின் தமிழர்களை தமிழால் தமிழில் தமிழ்போற்றி அன்றய எமுத்தாளர்கள் பனையோலை, செப்புத்தகடு, ஆணி இவற்றின் துணைகொண்டு எமது மட்டக்களப்பு தமிழகத்தின் கலாசாரம், பண்பாடு, பூர்வீகம் கொண்ட வரலாற்றுப்பதிவுகளை காலத்துக்கு காலம் எழுதிவைத்துள்ளனர். இவற்றையெல்லாம் மகாவித்துவான் அவர்கள் தேடி பொறுக்கி மான்மியத்தை எழுதி பறைசாற்றியது அந்தக்காலம். ஆனால் அதைவிட இன்று எமது இடவமைவு எமது கலாசாரம், வளங்கள், பண்பாடு என்பனவற்றை கற்றறிந்தோர் அரசியல் பிரமுகர்கள் பறைசாற்றும் அளவு ஒப்பீட்டளவில் மிகக்குறைவு.
அதனால்தான் தமிழரின் பூர்வீக இடங்கள் கூட கிழக்கில் புறத்தியானின் கையில் சிக்கித் தவிக்கிறது. இருப்பினும் கிடைக்கும் சாதனங்களைவைத்து அவற்றை பறைசாற்றும் எனது முயற்சியில் இந்த பாடலும் ஒன்று. அதற்க்கான வீடியோக்கலவை பல பிரயத்தனத்தின் மத்தியில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறான பல துறைசார் பதிவுகளை மாணவர்கள் மட்டத்தில் இருந்து அதிகரிக்கும் வழிசெய்தல் வேண்டும் மட்டக்களப்பின் பிராந்தியங்களில் அவை நிறுவப்பட்டு பல ஆய்வுப்பணிகளின் மூலம் ஆவணப்படுத்தப்பட வேண்டும். இருப்பை இருத்துவோம்
0 comments:
Post a Comment