ADS 468x60

03 January 2018

ஓன்றுபட்டால் வென்றிடலாம் தோழா!

ஓன்றுபட்டால் வென்றிடலாம் தோழா- நீயும்
உணா்வில்லாமல் ஒதுங்குகின்ற ஆளா
ஏங்கித் தவிக்கும் எம் இனத்தை
எழுச்சி பெற எழுந்து வந்து
வாக்களிப்பை கையிலெடு தோழா ஓகோ


வளரும் உலகத்திலே வாக்கென்றும் ஆயுதமே
பகைவரை ஓட வைக்கும்
நமையாள உரிமை தரும் 
ஓன்றுபட்டால் வென்றிடலாம் தோழா- நீயும்
உணா்வில்லாமல் ஒதுங்குகின்ற ஆளா

ஓடிடும் நேரத்திலே ஓராயிரம் தடைகள்
தடைகளை உடைத்திடவோம்
படையாகத் திரண்டெழுவோம்
ஓன்றுபட்டால் வென்றிடலாம் தோழா- நீயும்
உணா்வில்லாமல் ஒதுங்குகின்ற ஆளா

தேசத்தின் வரலாறு எமக்கென்றும் படிப்பினையே
தவறுகள் செய்தவரை
தரையோடு முறியடிப்போம்
ஓன்றுபட்டால் வென்றிடலாம் தோழா- நீயும்
உணா்வில்லாமல் ஒதுங்குகின்ற ஆளா 

0 comments:

Post a Comment