ADS 468x60

24 February 2019

தேனூர் பதியினில் மேலவனே!

தேனூர் பதியினில் மேலவனே
கொம்புச் சந்தியில் ஆண்டவனே
வானுறை தேவர்கும் தெய்வமே
வலம்புரி நாயகனே- ஸ்வாமி
தேனூர் பதியினில் மேலவனே
கொம்புச் சந்தியில் ஆண்டவனே


ஓம் கணபதியே சரணம் பொன் ஐயனே!
கொம்புச் சந்தியானே சரணம் பொன் ஐயனே!
முக்கண்ணன் மகனே சரணம் பொன் ஐயனே!
மோதக கஸ்த்தா சரணம் பொன் ஐயனே!
தேனூர் பதியினில் மேலவனே
கொம்புச் சந்தியில் ஆண்டவனே

நீங்காத குறை களையும் கணநாதனே- என்னை
நிழலாகப் பின்தொடரும் அருள்நாதனே- 2
அம்மை அப்பன் தெய்வமாய் -நீ
அனைவருக்கும் உணர்த்தினாயே
அகம் மகிழ கலியுகத்தில்  தோன்றினாயே

அல்லும் பகலும் உனை நினைப்போர் தனை- என்றும்
அருளும் பெருமானாய் மேல் அமர்ந்தாய்
வண்ண வண்ண மாலையிட்டு
மாவெடுத்து கோலமிட்டு
எண்ணி வரும் இறைவன் என்றும் நீ தான் அப்பா

0 comments:

Post a Comment