பகுத்தறிந்து வாழ்பவரை சரித்திரம் பேசும் -
அவர்பரம்பரையின் கால்கள் மீதும் மலர்களை வீசும்
பயந்து வாழும் அடிமைகளைப் பூனையும் ஏசும்
அவர் பால் குடித்த தாயைக் கூட பேய் எனப் பேசும்.
என்னிடம் பலா் கேட்க;கும் கேள்விக்கான பதில். அமைச்சா்களும், மா.ச.உறுப்பினா்களும், எம்.பி.,யும் தான் அரசியல்வாதிகளா? அரசு+இயல்=அரசியல். இயல் என்றால் கலை. அரசு சார்ந்த கலையே அரசியல். அந்த கலையில் பங்குகொள்ளும் ஒவ்வொருவரும் அரசியல்வாதியே.
மா.ச.உறுப்பினா்களும், எம்.பி.,க்களும் மட்டும் தான் அரசியல் கலையில் பங்குகொள்கிறார்களா? அவர்களைப் பங்குகொள்ள வைப்பது யார்? ஓட்டுப்போடும் ஒவ்வொருவரும் தெரிந்தோ தெரியாமலோ அரசு கலையில் பங்கேற்கிறார்கள். அவர்கள் பங்கேற்காமல் அரசு கலை நடக்குமா? அவ்வகையில் ஓட்டுப் போடும் ஒவ்வொருவரும் அரசியல்வாதியே...
ஆக நான் வாக்காளராக ஆக்கப்பட்ட நாளிலேயே அரசியல்வாதியாகிவிட்டேன். அதுவும் துடிப்பான அரசியல்வாதியாக. ஆனால் பலர் நினைப்பதுபோல் தேர்தலில் நிற்பவர்தான் அரசியல்வாதி என்கின்ற கூறுகெட்ட எண்ணப்பாங்கிற்கு நான் எதிரானவன். சிறுவயது கொண்டே கஸ்ட்டப்படுபவர்கள் நம்மத்தியில் இருப்பதை சகிக்க முடியாதவனாக இருந்து அவர்களுக்கு உதவவேண்டும் என்ற உத்வேகத்துடன் செயற்பட்டு வருகிறேன். இதற்கு கட்சி தேவையில்லை மனசிதான் வேண்டும்.
அந்த மனசி உள்ளவா் கூட்டம் அதே பாணியை இன்று தொடங்கி பின்பற்றி பட்டி தொட்டியெல்லாம் செய்து வருவதை எமது பணியின் ஆரம்பத்துக்கான அங்கிகாரமாக நினைக்கிறேன். சொந்த மக்களின் துயர்துடைக்க எந்தவகையிலும் தனது பொன்னான நேரத்தினை செலவிடுபவன், எதிர்கால குறையில்லாத, அடக்குமுறையில்லாத வாழ்க்கைக்கான அறிவினை புகட்டுபவன். வழிதனைக் காட்டுபவன் இவர்களெல்லாம் அரசியல்வாதிகளே!
அவ்வாறு இல்லாது நேற்று முளைத்த காளானாக ஒரு முகம் வந்து தேர்தலுக்கு மாத்திரம் நின்றால் அவர்கள் மக்களை ஏமாற்றுபவர்கள் எனப் பொருள்படும். அங்குதான் வரலாற்றுப்பிழைகளை நாம் கால காலமாக செய்து வரலாற்றுப் பிழைகளே வரலாறுகளாகிற்று.
உண்மையில் வரலாறுகள் பிழைசெய்வதில்லை நாம் வரலாற்றை பிழையாக்கிவிடுகின்றோம். இதனால்தான் சொந்த நாட்டுக்குள்ளேயே மூன்று தசாப்தம் மற்ற இனத்தின் முன்னேற்றத்துடன் ஒப்பிடும் பொழுது பின்தங்கி இருக்கின்றோம்.
பொறுத்தது போதும் தமிழினமே... சிந்தி... நீ யார்? உன் புகழ் என்ன? உன் வரலாறு என்ன? உன் வீரம் எத்தகையது? சிந்தி... அணையை உடைத்தெறி...
வீரம் ஏந்து! பொதுநலம் பேண்! தைரியம் கொள்!
ஆயுதப்போர் தேவையில்ல... அரசியல் போர் புரிவோம்.
நம் முன்னோர்கள் காலத்து தூய அரசியலை மீட்டெடுப்போம்! அரசியல் சாக்கடையை தூய்மை செய்வோம்! நம் அடுத்த சந்ததிகளுக்கு புனித அரசியலைப் பரிசளிப்போம்!!! அதை விடப் பெரிய பரிசு அவர்களுக்கு எதுவமல்ல..
சிந்திப்போம்!
0 comments:
Post a Comment