ADS 468x60

14 July 2019

தேர்தல் என்றால் தெருத் தெருவாக வருவாரே!

நாங்கள் எல்லாம் காலா காலமாக தமிழரசிக்கட்சி, அதன் பின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என அரசியலில் ஏதோ இவர்களுக்கு மாத்திரம் ஆதரவாக ஒரு வகையில் ஈடுபட்டுக்கொண்டு வருகின்றோம். தெரியாதவர்கள்கூட இந்தக் கட்சியில் கேட்டாலும், அவர்களுக்கு வாக்களித்து வழியனுப்புவதுதான் எமது வழக்கமாக இருந்து வருகின்றது.


இது இந்தக் கட்சியில் நிற்பவர்களுக்கான பெரிய செல்வாக்கில் அவர்களை தேர்வு செய்த காலம் மலையேறி இன்று கட்சிக்காக கிடைத்த வாக்கில் கரைசேந்தவர்களே அதிகம் அதிகம். இதை யாரும் மறுக்க முடியுமா?


என்னைப் பொறுத்தவரையில் கௌரவ ஸ்ரீநேசன் உட்பட பல வேட்பாளர்களை, இறுதியாக நடந்த பொதுத்தேர்தலில் தெரிந்திருக்கவில்லை. ஏனெனில் அவர்கள் எந்தவிதத்திலும் மக்கள் மத்தியில் செல்வாக்கானவர்களாக என்னைப் பொறுத்தளவில் இருந்ததே கிடையாது. ஆனால் கேள்விப்பட்டோம் இவர் ஒரு அரச உத்தியோகத்தராக கடமையாற்றியவர் என. அவ்வளவுதான் குடும்பமே கூடி வாக்களித்தது.

அதெல்லாம் ஒரு காலம். இன்று அந்தக் காலம் மொத்தமாக மாறிக்கொண்டு வருகின்றது. அது இவர்களுக்கு நன்கு தெரியும்.

ஆனால் எனக்கெல்லாம் இரும்பைப்போன்ற பற்று இருந்தது, எமக்கு தெரியாதவர்களிடம் அல்லது தகுதியற்றவர்களிடம் அவற்றைக் காட்டிக்கொள்ள எனக்கும் என்னைப்போன்ற பலருக்கும் மனசு இடமளித்திருக்கவில்லை.

இது போன்றவர்களிடம் பின் திரிவதற்கோ, இல்லை இவர்களது வானர்கள் நோட்டீஸ்களை வினியோகிக்கவோ நான் சென்றதும் இல்லை. செல்லப்போவதும் இல்லை. ஆனால் இந்தக் கட்சியில் திடீர் திடீர் என முளைத்த பலர் நினைப்பதைப்போல கட்சி ஆதரவு என்றபேரில் ஊதாரியாகத் திரியும் பலரையே இவர்கள் தோழில் தூக்கிவைத்து, உண்மையான தொண்டர்களை உதறித்தள்ளி விடுவதனால் இன்று தெருத் தெருவாக இழுத்து வைத்து அவமானப்படுத்தும் போது அந்தக் கட்சித்தொண்டர்களின் முழக்கம் முடங்கிவிடுவதை தெரியாதவர்கள் கட்சியை வளர்க்க காரியாலயம் திறப்பது நகைப்பே!.

யுத்த காலத்தில் இருந்து பின்னால திரிந்தோம் என்பதற்காக நாங்கள் எல்லாம் வாக்களிக்த்துவங்கினோம் என்றால் இந்த மட்டு மண் தாங்காது. நல்ல ஆதரவாளர்களை ஒன்றுகூட்டுங்கள் மக்களால் தூக்கி வீசப்பட்டவர்களை சற்று ஒதுக்கி வையுங்கள், புதிய ஆர்வமுள்ளவர்களை தேடிக் கண்டுபிடியுங்கள், அவர்களை வளர்த்து வாய்ப்புக்கொடுங்கள் நீங்கள் மூன்று ஆசனங்களையல்ல நான்கு ஆசனங்களையும் தொடர்ந்து நம்வசம் வைத்திருக்கலாம். அல்லாது போனால் தமிழருக்கென்று எமது மாவட்டத்தில் ஒரு ஆசனமும் இல்லாது செய்தோம் என்ற வரலாற்றுப் பின்னணிக்கு வாக்கப்பட்டவதர்களாகும் நிலை வெகு தூரத்தில் இல்லை.

நாங்கள் சொல்லி நீங்கள் கேட்கவா போகின்றீர்கள்! ஏதோ நடாத்துங்கள்.

கட்சிக்கான கருசணை எமது குடும்பத்தில் கொழுந்துவிட்டு வளர்ந்துகொண்டே இருந்தது. அப்போது அந்தக் கட்சி சார்பாக எழுதிய ஒரு பாடல்தான் இது.
வீட்டை தவிர வோட்டை எதற்ம் போடாதே -நமைக் 
காட்டிக் கொடுப்போர் காலடி என்றும் நாடாதே- வெறும்
பேச்சைக் கேட்டு பொம்மைகள் போல ஆடாதே- பொழுது
புலரும் கிழக்கில் வெற்றியின் முழக்கம் வாடாதே - நீ
வீட்டை தவிர வோட்டை எதற்ம் போடாதே!

கருவானாலும் தமிழ்தாய் வயிற்றில் கருவாவேன்- ஒரு
கனவானாலும் உரிமையை வெல்லும் கனவாவேன்- எனது
வாக்கானாலும் வீட்டை காக்கும் வாக்காவேன்- நம்
வலியை மறந்த நரிகளுக்கெல்லாம் புலியாவேன்- நீ
வீட்டை தவிர வோட்டை எதற்ம் போடாதே!

தேர்தல் என்றால் தெருத் தெருவாக வருவாரே - உனை
தேனே மானே உயிரே என்று குழைவாரே -நாளை
வேலையும் வீடும் தருவேன் எனவும் சொல்வாரே -அவர்கள்
வென்றதும் இனத்தை விற்றதில் பிழைத்து போவாரே - நீ
வீட்டை தவிர வோட்டை எதற்ம் போடாதே!

பூனைகள் போலே மூலையில் சுறுண்டு தூங்காதே-வெறும்
பானையைப் போலே முழுதும் இழந்து ஏங்காதே - எமை
ஏய்த்திடும் கோழைகள் மாய்திட செய்யும் நாள்வருதே- அதில்
புயலென எழுந்து புலர்ந்திடும் பொழுதில் வாக்கிடுவோம்
வீட்டை தவிர வோட்டை எதற்ம் போடாதே
தமிழா தமிழா தமிழா தமிழா!

0 comments:

Post a Comment