மிருகங்கள் நுழைந்த நாள்
வெள்ளையுள்ளம் கொண்டவர்களை
வெட்டி வீசி
கறுப்பாக்கிய நாள்!
முடியாதவர்களால்
முடிந்தவர்களை முழையோடு
கிள்ளி எறிந்த நாள்!
வர்த்தகம் எல்லாம்
வழித்து எறியப்பட்ட நாள்!
வாசகங்கள் இடமாறிய நாள்!
நிராயுதபாணிகளின் குருதிகுடிக்க
வெலிக்கடைச் சிறையில்
வேலிகளே பயிரை மேய்ந்த நாள்!
இளைஞர்களின் நெஞ்சில்
இறுமாப்பை விதைத்த நாள்!
ஊராரின் நாட்டில்
உறைவதில்லை என
தனிநாட்டுத் தாகம்
தமிழீழமென ஊற்றெடுத்த நாள்!
ஆக இது
கடந்துவிட்டுப் போக- இது
களியாட்ட நாட்களில்லை
கறுப்பு நாள்!
இறப்புககுள் விதையான-எம்
உறவுகளின்
ஆத்ம சாந்தியாகட்டும்!
கறுப்பு ஜீலை 83 இல் 4000 பேர் தமிழர்கள் சில முஜ்லிம்கள் உட்பட தவறவிடப்பட்டதுடன், ஆயிரக்கணக்கானோர் காயப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் அனுமதிக்கப்பட்ட வைத்தியசாலைகளுக்கும் சென்று அங்கும் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டனர். இவற்றின் காரணமாக கிட்டத்தட்ட 200,000 பேர்வரை இடம்பெயர்ந்தனர், அத்துடன் சிறிய கடைகள் இன்று பெரிய பெக்றிவரை சுமார் 2500 தமிழ் வர்த்தகங்கள் நிர்மூலமாக்கப்பட்டன. இவற்றுடன் நாசமாக்கப்பட்ட வீடுகள் ஏனைய கட்டிடங்கள் கணக்கிடப்படவில்லை.
0 comments:
Post a Comment