ADS 468x60

24 July 2019

இளைஞர்களே இது இருந்தால் வேலை நிட்சயம்: தயாராகுங்கள்

இளைஞர் யுவதிகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்! நீங்கள் பல்கலைக்கழகங்களில் படிக்கின்ற காலங்களில் உங்களை மேம்படுத்த தொழில்நுட்பத்துடன் கைகோர்த்துக்கொள்ளுதல் முக்கியமானதாகும் இதை நான் சொல்லித்தான் நீங்கள் அறியவேண்டியதில்லை.

நேற்று நான் ஒரு வேலைக்காக அப்பிளிக்கேசன் போடுவதற்காக சென்றபோது, அவர்கள் ஒன்லைன் அப்ளிக்கேசன் போடச் சொன்னதும், அங்கு சென்று அதை திறந்து ஒவ்வொன்றாக நிரப்பத் துவங்கினேன். குறிப்பாக லிங்டிங் லிங்கை இணைக்கும்படி ஒரு இடைவெளியும், ஏனைய எமது சொந்த வுளக்ஸ்பொட், யூரியுப் ஆகியவற்றினை இணைக்கச் சொல்லி இன்னும் ஒரு இடைவெளியுமாக இருப்பதைப் பார்த்தேன்.

பின்வருவனவற்றை நல்லவேளை நான் ஏலவே தயார்படுத்தி இருக்கின்றேன்.

My Linkdin : https://www.linkedin.com/in/s-t-seelan-2669a942/

My Website: http://unoov.blogspot.com/ 

இவை இல்லாவிடின் உங்கள் அப்பிளிக்கேஷன் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என அங்கு எனக்கு அறிவுறுத்தல் காட்டிக்கொண்டிருப்பதனையும் கண்டேன். நல்ல காலம் இவைகளை நீண்டகாலமாக நான் பரிபாலித்து வருகின்றேன். இதில் முகப்புத்தக முகவரியும் இணைக்க முடியுமாய் இருந்தது. இவையெல்லாம் நம்மை பிறருடனும் தொழில்ச் சந்தையுடனும் இணைக்கும் நவீனகாலத்து கருவிகள்.


நாம் இன்று கிராமமாகச் சுருங்கிய உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். அதனால் இந்த உலகக் கிராமத்தினுள் ஏனையவருக்கு நிகராக வாழ்வதற்கு நாம் தயாராக இருக்கின்றோமா? என்பதனை சுயபரிசோதனை செய்யும் காலம் இது.

Job Application for your information

போட்டி நிறைந்த இந்த உலகில் விளையாட்டாக காலத்தினை கடத்தாமல் இவ்வாறான செயலிகளை நீங்கள் உடன் திறந்து, அவற்றை நன்கு பராமரித்து அவற்றில் நல்ல விடயங்களையும், எழுத்தாற்றல்களையும், நிபுணத்துவத்தினையும், ஆழுமைத் திறன்களையும்;, திறன்களையும் தெரியப்படுத்தும் செயற்பாட்டில் உங்களை ஈடுபடுத்தி, எனையவர்களுடன் நிபுணத்துவ இணைப்பினை ஏற்படுத்தி தொழிற் சந்தையில் உங்கள் பெயரையும் பதித்துக்கொள்ள பாடுபட வேண்டுகின்றேன்.

இன்றய இளைஞர்கள் உண்மையில் குறைந்தளவான பப்ளிக் றிலேசனையே வைத்துக்கொண்டிருக்கின்றனர். இவர்கள் தங்களது தனிப்பட்ட திறமையினை வெளிக்கொணரும் சாதனமாக இதை பார்க்கத் துவங்கவில்லை. இந்த லிங்டினை ஏதோ அவர்களது இன்சோகிராம், வட்ஸ்அப், பேஷ்புக் ஆகியவற்றினைப் பயன்படுத்துவதுபோல் மாத்திரம் பயன்படுத்துகிறார்கள்.

நான் எனது வேலையை முதலில் ஆரம்பித்தபோது இவ்வாறான சோசியல் மீடியாக்கள் இருந்ததில்லை. இவை 2005 இலேயே ஆரம்பமாகியது. இன்று உலகில் அரை பில்லியனுக்கும் மேல் தொழில் நிபுணர்கள் இவற்றை பாவித்து வருகின்றனர்.

ஆக இன்று வேறுமுறையில் எம்மைத் தயார்படுத்தவேண்டும். நாம் வெறுமனே ஒரு சிறிய கிணற்றுக்குள் இருந்துவிட்டு இதுதான் உலகம் என பலர் எண்ணிக்கொண்டு திரிவதை இன்றிலிருந்தே நிறுத்திக்கொள்ளுவோம். நாம் வேலையை பிச்சைகேட்காத வண்ணம் எங்களை நாங்கள்தான் வளர்த்துக்கொள்ள வேண்டும். நிச்சயம் அங்கிலம் மற்றும் தொழில் நுட்ப அறிவுகளை நிச்சயமாக வளர்த்துக்கொள்ள வேண்டும். 

0 comments:

Post a Comment