ADS 468x60

19 January 2020

கிழக்கு தமிழர் தை திருநாள் கொண்டாட்டம் 2020

இன்று பலராலும் அறியப்பட்ட தமிழர்களின் வருடப்பிறப்பு தைத்திருநாள்தான் என்பது, பலருக்கு தெரியாமலேயே கொணடாடப்பட்டு வருகின்றது. இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் தமிழர்களின் தாயக மண்ணில் பலப் பல இடப்பெயர்வு, உயிர் உடமை இழப்பு போன்ற யுத்தத்தின் முப்பது வருடக் கோரத்தாண்டவம், மற்றும் காலநிலை மாற்றத்தினால் கிடைத்த சுனாமி வெள்ளப்பெருக்கு போன்ற அனர்த்த அழிப்புகள், அத்துடன் காட்டுவிலங்குளான யானை, பறவைகள் மற்றும் ஏனைய மிருங்களுடனான போராட்டங்கள் இத்தனையுடனும் போராடிப் போராடி எமது கலாசாரத்தினைக் கூட கட்டி காத்துவர முடியாத நிலையில் எம்மில் பல குடும்பங்கள் ஆக்கப்பட்டுவிட்டனர்.

விவசாயமும் அதற்கு உதவுகின்ற கால்நடைகளும்தான் கிழக்கில் மக்களின் மூச்சி, அவைதான்; அவர்களுடைய பொழதுபோக்கு, அதுகள்தான் அவர்களுடைய உழைப்பு, அதுதான் அவர்களுடைய மகிழ்சி, அதுதான் அவர்களுடைய வழிபாடு, அதுதான் அவர்களுடைய வாழ்க்கை இப்படி எல்லாமே இவர்களது ஐPவனோபாயமான தொழிலைச் சுற்றியே வாழ்க்கையை அமைத்து வாழ்ந்து பழகிய சமுகம் இச்சமுகம். இதனால்தான் எமது விவசாயப் பெருங்குடி மக்களை 'போடியார்கள்' என அழைத்துவருகின்றமை எமது கிழக்கு மண்ணில் மாத்திரமே வழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

வேளாண்மைக்கு வேண்டிய மழை நீரையும், சூரிய ஒளியையும், காற்றையும் தேவைக்கேற்ப வழங்கி தம்மையும், நாட்டையும் செழிப்புடன் வாழ உதவிய இயற்கைக்கும் (பூமி, சூரியன், வழிமண்டலம், நீர் நிலைகள் போன்றவற்றிற்கும்) தம்மோடு சேர்ந்து கஷ்டப்பட்டு உழைத்த கால்நடைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் தமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாக அன்று உழவர்களால் விரும்பிக் கொண்டாடப்பெற்று வந்துள்ளது.
தற்பொழுது உழவர்கள் மட்டுமன்றி வேறு பல தொழில்புரியும் எல்லா தமிழ் மக்களும் தம் மூதாதையினரான உழவர்கள் பரம்பரை பரம்பரையாக செய்து வந்த பண்டிகையாகவும், தமக்கு வேண்டிய உணவுப் பொருட்களை (அரிசி, தானியங்கள், மரக்கறி) போன்றவற்றை உற்பத்தி செய்து தரும் 'உழவர்களுக்கு நன்றி கூறும்' நாளாகவும் கொண்டாடுகின்றார்கள்.

அதன் காரணமாக இப்பண்டிகை 'உழவர் பண்டிகை' என்னும் பெயர் மழுங்கி 'தமிழர் பண்டிகையாக' பொங்கியெழுந்துள்ளது.
ஆனால் இவர்கள் இன்று திடீர் என ஏற்பட்ட தொழில் நுட்ப மாற்றம், காலநிலை மாற்றம், இடப்பெயர்வு, தொடர்சியான பல தொழில் இழப்புக்கள் போன்றவற்றால் எமது பாரம்பரியத்தையெல்லாம் பராமரிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு சென்றுகொண்டிருக்கின்றனர்.

தமிழ் வருடப்பிறப்பான தை வந்துவிட்டால் அத்தனை மகிழ்சி எம்மண்ணில் ஒரு காலத்தில் இருந்தது. அந்த பரம்பரையுடன் அந்த வழமைகள், வழிபாடுகள், மறைமைகள் மறக்கடிக்கப்பட்டு, பின்பற்ற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு இன்று புதிய புதிய கொண்டாட்டங்களை எமக்கு தெரியாமலேயே எம்மத்தியில் திணிக்கப்பட்டு திசைதிருப்பி உண்மையான உழவர்தினம் உருக்குலைய எடுக்கும் சதிவலைக்குள் எமது இளைஞர்கள் தட்டுத்தடுமாறி பாரம்பரியத்தை பாராமல் விட்டுவிட்டோம்.

இங்கு இந்த நிலையை தொடரவிடாமல் ஆங்காங்கு ஓரிரு நிகழ்வுகள் நடந்தேறிநாலும் எமது இப்பாரம்பரிய தமிழ் தைத்திருநாளை மீட்டு அவற்றை எழுச்சிப்படுத்தும் அழவிற்கு அவை அமைந்துவிடவில்லை என்பதே வெள்ளிடை மலை. இதனைக் கருத்தில் கொண்டே கிழக்கு- பல்கலைக்கழக பழைய மாணவர் ஒன்றியம் கிழக்கிலங்கை இந்துசமய சமுக அபிவிருத்திச் சபையும் இணைந்து இம்முறை வயலும் வயல்சார்ந்த மருதநில மண்ணான திக்கோடைக் கிராமத்தில் அமைந்துள்ள அம்பாரைப் பிள்ளையார் ஆலய முன்றலில் முதலாவது 'கிழக்குப் பொங்கல் விழாவினை' எதிர்வரும் 19.01.2020 ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கும் உழவர் பெருமக்களுக்கும் நன்றி செலுத்தும் இப்பொங்கல் எழுச்சிப் பெருவிழா கொண்டாடப்பட்டது.

இவ்விழா காலை 9.00 மணியளவில் பாரம்பரியத்தினைப் மீட்டெடுக்கும், பறைசாற்றும் கலை கலாசார, பாரம்பரிய எழுச்சிப் பவனி நிகழ்வுடன் ஆரம்பமாகி, ஆலய முன்றலில் கொண்டு வந்த புத்தரிசியில் பொங்கல் செய்ய, பல அடையாளங்களை நிலைநிறுத்தும் நிகழ்வுகளுடன் நிகழ நடைபெற்று முடிந்தது. இந்நிகழ்வினை திக்கோடைக் கிராம மக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடுகளை ஒழுங்கு செய்து நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் விவசாயத்துக்குதவி எம்மண்ணின் மக்களினதும் மற்றும் ஏனைய உயிரினங்களினதும் பசிபோக்கிய விவசாயப் பெருங்குடி மக்கள் கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வுக்கு கிழக்கு-பல்கலைக்கழக பழைய மாணவர் ஒன்றியத்தின் சார்பில் சி.தணிகசீலன், உதவிப்பணிப்பாளர்  பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு அவர்கள் தலைமையில் இந்நிகழ்வு நடந்தேறியமை குறிப்பிடத்தக்கது.

இதில் அதிதிகளாக ச.நவநீதன் பணிப்பாளர், கிழக்கு மாகாணசமை கல்வி அமைச்சு, வைத்தியர் அருளானந்தம், உதவிப் பிரதேச செயலாளர் போரதீவுப் பற்று, மற்றும் பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

ஓவ்வொரு முறையும் உணவு உண்ணும் போது கடவுளை வேண்டும் நாம் அந்த உணவுக்காகப் பாடுபட்ட விவசாயிகளை ஏன் நினைத்துப் பார்ப்பதுகூடக்கிடையாது? அதனால்தான் எம் தமிழர்கள் அன்றே அவர்களை வருடத்தில் ஒரு தடவையாவது நினைத்து போற்ற வேண்டும் என இவ்விழாவை ஒழுங்கு செய்துள்ளனர். தன் உழைப்பு சுரண்டப்படுவது தெரிந்தும் வாழ்நாழ் புராவும் உழைத்துக்கொண்டு இருக்கும் இரு ஜீவன்கள் ஒன்று தேனி இன்னொன்று விவசாயி. ஆப்படிப்பட்ட விவசாயியும் விவசாயமும்தான் எங்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லக்கூடும் என்பதில் மாற்றுக்கருத்துக்கிடமில்லை.





0 comments:

Post a Comment