ADS 468x60

11 January 2020

அபிவிருத்தியை நிலைகுலைக்கும் வேலையின்மை அதிகரிப்பு

இலங்கையில் கடந்த உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பின்னான பொருளாதார இடையூறில் வேலையின்மை வீதமானது 2019 ஆம் ஆண்டில் 5.1மூ ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அதிகரித்துவரும் வேலையின்மை நிலைதான் கடந்தவருட ஊதிய வளர்ச்சியின் மந்த நிலைக்கு முக்கிய பங்காக விளங்குகின்றது. 2019 செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதமளவில் பணவீக்கமானது குறிப்பிடத்தக்களவு ஊதிய வளர்ச்சியை கட்டுப்படுத்தி நுவர்வோர் செலவு சக்தியை குறைத்து வருகின்ற ஒரு நிலையைக் காட்டி நிற்கின்றது.


2019 ஆம் ஆண்டின் முக்கால்வாசிப்பகுதியில் வேலையில்லாதோரின் எண்ணிக்கையானது 4,37,797 ஆக கணக்கிடப்பட்டுள்ளது. சனத்தொகை மற்றும் புள்ளிவிவரத்துறையில் கணக்கெடுப்பின்படி இது 5.1மூ ஆக காணப்படுகின்றது. அதே காலப்பகுpயில் பொருளாதார ரீதயில் வேலையிலுள்ள மக்களின் மொத்ததொகை 8.6 மில்லியன் ஆகவும் அதில் 65.2 மூ ஆண்களும் 34.8மூ பெண்களும் என இருந்து வருகின்றது.

பெண்களின் வேலையில்லா விகிதமானது கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாக காணப்படுவதாக தரவுகள் கூறுகின்ற அதேவேளை இது தேசிய சராசரியை விட குறிப்பிட்ட அளவு அதிகமாகும். கிட்டதட்ட 4.2 மூ – 4.9 மூ இந்த எண்ணிக்கை பல வருடங்களாக ஒரு மாறா நிலையின் தன்மையை காட்டுகின்றது. இது இலங்கையின் பொருளாதரத்தில் இருக்கும் கட்டமைப்பு ஒழுங்கின்மையைக் காட்டுகின்றது.

பல அபிவிருத்திக்கான குறிகாட்டிகளில் எமது நாடானது வெற்றியடைந்துள்ள அதே வேளை, உலக அளவில் தொழிலாளர் பங்களிப்பில் பாலின இடைவெளி அதிகமாக காண்படும் நாடுகளில் இலங்கை 20 வது இடத்தில் உள்ளது. இது நாட்டின் வளர்ச்சி மற்றும் சமத்துவத்தை பாதிக்கின்ற ஒன்றாக இருக்கின்றது.
விஷேடமாக கிராம மட்டங்களில் பெண்களை வலுவூட்டவும்,  அவர்கள் தொழில்வாய்ப்பை பெறும் வாய்ப்பினையும், சுயதொழில் வாய்ப்பினையும் அதிகரிக்கவுமான பாரிய தேவை காணப்படுகின்றது. 

தொழிநுட்ப பயன்பாடு மற்றும் நிதித்துறையில் அவர்களை வலிந்து ஈடுபடுத்துவதிலான தேவைப்பாடு இருக்கின்றது. குறிப்பாக ஐந்தில் ஒரு பங்கிற்கும் குறைவான இலங்கையர்களே இணையத்தளத்தை பாவிக்கின்றனர். அதிலும் 10மூ மட்டுமே வீடுகளில் நேரடியான பவனையில் ஈடுபடுகின்றனர் என உலகவங்கி தெரிவிக்கின்றது.
இது பெண்கள் தங்களை வளர்த்துக்கொள்வதற்கும் சுயமுயற்சியாண்மையை பெருக்கிக்கொள்ளவும் குறைந்தளவான வசதிகளையே கொண்டுள்ளனர் என்பதனைக் காட்டி நிற்கின்றது. உண்மையில் இலங்கையின் அறிவார்ந்த பொருளாதார வளர்சியில் காணப்படும் பாரிய இடைவெளி என்னவெனில் குறைந்தளவான பல்கலைக்கழக மாணவர்களின் வெளியேற்றமாகும் அதிலும் குறைவான பெண்கள் தொழில்நுட்பத் துறையில் காணப்படுகின்றமை. 

பெண்கள்  தொழில் நுட்பப் பயன்பாட்டினையும்  தங்களை வளர்த்துக் கொள்வதற்கும், தொழில் முனைவோர் திறனை மேம்படுத்துவதற்கும் குறைந்த ஈடுபாடு உள்ளது என்பதே இதன் பொருள்.

இலங்கையில் குறைந்த பெண் தொழிலாளர் பங்களிப்பு மூன்று முக்கிய காரணிகளைக் கொண்டுள்ளது. வீட்டிலுள்ள தேவையற்ற விதிமுறைகள், குடும்ப வேலைகளுக்கு பெண்களே பொறுப்பாக இருக்கின்றமை,  வெளிப்புற வேலைகளுக்கான வாய்ப்பு குறைவாக உள்ளமை பொருத்தப்பாடற்ற திறன்கள், அவர்களின் திறன்களுக்கும் சந்தை எதிர்ப்பார்ப்புக்கும் கோரிக்கைகளுக்கும் இடையிலான வித்தியாசம், நடைமுறையிலும் நிறுவன சார்பாகவும் காணப்படும் பாலின சார்ந்த பாகுபாடு, ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்கள் குறைவான சம்பளம் பெறுதல், வேலையிடங்களில் காணப்படும் பாகுபாடு, நிறுவனங்களில் காணப்படும் நலிவான வலைப்பின்னல் என்பனவற்றை நாம் குறிப்பிடலாம்.

இந்த நிலையினால்தான் மிக மிகக் குறைந்தளவான பெண்கள் வெளிநாடுகளில் சென்று வேலை புரிய நாட்டம் காட்டி வருவதுடன் தமது திறனை வளர்த்துக்கொண்டு அதிக பணம் சம்பாதிக்கவும் விரும்புகின்றனர்.

இவ்வாறான நிலையில் இருந்து மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டுமானால், அரசாங்கம் மற்றும் கொள்கை வளர்பாளர்கள் ஒன்றிணைந்து நடைமுறையில் இருக்கின்ற திட்டங்களுக்குள் தகவல் தொழில் நுட்பம், அபிவிருத்தி மற்றும் பால் நிலைச் சமத்துவத்தினை உட்புகுத்த வேண்டும். இதற்காக நீண்ட கால திட்டமிடலில் பெண்களை கல்வியில் நாட்டமுடையவர்களாக்கி, திறனை வளர்க்கும் செயற்திட்டங்களை உருவாக்கி இவை சமுகத்தினால் ஆதரிக்கப்படும் ஒன்றாக ஏற்படுத்தப்பட வேண்டும்.
உலக வங்கியானது குறைந்தளவான பெண்கள் வேலையில் பங்குபற்றுதலை நிவர்த்தி செய்வதற்காக பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. அந்த வகையில் சமுக மட்ட அமைப்புக்கள் பெண்கள் பகுதி நேர வேலைகளை முன்வந்து செய்ய முடியும் என்ற ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் முன்வைக்கலாம், மகப்பேற்று விடுமுறை வழங்கல், சிறுவர் பராமரிப்பு உதவிகள் போன்றவை மூலம் வேலைக்கு போய் எதை நாம் சாதிப்பது எனும் ஒரு வித மனநிலையை இல்லாது ஒளிக்க முடியும்.

மேலும் சிறுவயதிலிருந்தே இளம் பெண்கள் தங்களுக்கு விருப்பமான வேலையை அடையாளம் கண்டு பாலின வேறுபாடுகள் கட்டுப்பாடுகள் இல்லாமல் செயற்பட, தேவையான வேலை பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள அத்துடன் வேலை வாய்ப்புக்களை நிச்சயித்துக்கொள்ளவென தனியார் துறை இவர்களுக்கு உதவ முடியும். இவ்வாறான தூரநோக்குடனான அரச கொள்கைகள் சாதாரண வளர்சிக்கப்பால் சென்று நிலைத்திருக்கும் ஒரு அபிவிருத்தியை நிர்ணயனம் செய்யும் ஒன்றாக இருக்கும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. மற்றும் கட்டுப்பாடுகளை பொருட்படுத்தாமல் வேலை, தகவல் மற்றும் வேலைவாய்ப்பு 

0 comments:

Post a Comment