ADS 468x60

13 September 2020

எழுந்து வாடா தம்பி

காலை விடிந்தது உனக்காக- என்று
கத்தும் சேவலும் கணக்காக
கிழக்கில் உதிக்கும் சூரியனை- முந்தி
கிழர்தெழு நாளை நமதாகும்

கதிர்கள் ஆடும் வயல் நிலமும்
கரைகள் தோறும் கடல் வளமும்
காடு மேடுகள் குளங்களென
கொண்டது எமது பூர்வாங்கம்

உழுது வாழ உறுதி கொள்வோம்
ஊரைக் கூட்டி உலகை வெல்வோம்
அழுது வாழும் அவலமெல்லாம்
அறவே நம்முள் விலகச் செய்வோம்

10 September 2020

சமுகநலத்திட்டங்கள் வறுமையை குறைத்து தொழில் வாய்ப்பை உருவாக்கியுள்ளதா?

இன்று இலங்கை மாத்திரமல்ல இந்த உலகமே கொவிட்-19 என்ற பேராபத்தில் சிக்கி நலிவுற்றுள்ளது. யாருக்கு யார் ஆறுதல் சொல்லுவது என்ற நிலையில் அபிவிருத்தியடைந்த அடைந்துவருகின்ற நாடுகள் பாரிய பொருளாதார வீழ்ச்சியில் சிக்கித்தவிக்கின்றன. இந்த நிலையில் பல்வேறு சமுக பாதுகாப்பு நடைமுறைகள் நாட்டுக்கு நாடு நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் இலங்கையிலும் சமுகப் பாதுகாப்பு நடைமுறைகள் அரசாங்கத்தினால் அந்த மக்களை மீட்டெடுக்க நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சமுர்த்தி அதில் உள்ளடங்கும் ஒரு பெரிய சமுக நலத்திட்டமாகும். இதனை நடைமுறைப்படுத்த நாடு பூராகவும் சுமார் 25,000 சமுர்த்திப் பணியாளர்கள் அந்தச்சேவையில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையில் ஓட்டுமொத்தமாக 2 மில்லியன் மக்கள் சமுர்த்தியினை பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டு 600,000 மக்களால் சமூர்த்தியை விரிவுபடுத்த அரசு நடவடிக்கை எடுத்தது. இருப்பினும் சமுர்தி நாட்டின் மிகப்பெரிய சமூக நலத் திட்டமாகும், இது ரூ. 2017 ஆம் ஆண்டில் 43 பில்லியன் மற்றும் ஏற்கனவே 1.4 மில்லியன் குடும்பங்களை அதன் பட்டியலில் வைத்திருந்தது. அனைத்து அரசியல் பிரச்சாரங்களிலும் வறுமை ஒழிப்பு ஒரு முக்கிய செய்தியாக இருந்தாலும், சமுர்தி திட்டம் எவ்வாறு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பது குறித்து தெளிவு இல்லை.

06 September 2020

கோழி மேய்பதென்றாலும் கவர்மென்றில் சேரவேண்டுமாம்!

ஓவ்வொருமுறையும் ஒரு புதிய அரசு அமையும் பொழுது பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்பார்ப்புத்தான் அவர்களது அரச வேலைவாய்ப்புக்கான கனவு. ஆதனால் புதிய அரசாங்கம் தங்களுக்கு புதிய மற்றும் சிறந்த வேலை வாய்ப்புகளை வழங்கும் என்று நம்புகிற வர்க்கத்தில் வேலையற்ற பட்டதாரிகள் மட்டும் அடங்கவில்லை, மீதமுள்ள தொழிலாளர்களும் அதில் அடக்கம். ஆனால் ஒரு புதிய பொருளாதாரத்தின் வேலைவாய்ப்புக்களை உருவாக்க வேண்டுமானால் நிச்சயமாக அதுசார்ந்த புதிய கொள்கை சீர்திருத்தங்கள் தேவை என்பதனை பொருளியலாளர்கள் நன்கு உணர்ந்திருக்கின்றனர்.