ADS 468x60

06 October 2020

மீண்டும் கோவிட்-19 சொல்லித்தரும் பாடம் என்ன?

ரு புதிய கோவிட்19 சந்தேகநபர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டு, அமைதியாக இருந்த ஞாயிற்றுக் கிழமையன்று திடுக்கிடும்  செய்தி ஒன்று பொதுமக்களால் பெறப்பட்டது. ஒரு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒரு தொழிலாளி ஒருவர் கொரோணா வைரஸ் பாதிப்புள்ளதனை பரிசோதித்துக் கண்டறிந்துள்ளனர். இது கோவிட் -19 மீண்டும் எழுச்சி பெற்றால் இலங்கை எவ்வளவு பாதிக்கப்படக்கூடியது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, ஆகவே நாம் ஒவ்வொருவரும் முன்னெச்சரிக்கையினை வலுப்படுத்தவேண்டிய நிலையில் உள்ளோம்.

இந்தக் கொவிட்-19 க்கு எதிரான மிகதிறனான நடவடிக்கைகளை எமது நாட்டு அரசு முன்னெடுத்து வெற்றிகண்ட வகையில் இலங்கையர்கள் அதிர்ஷ்டசாலிகள், அவர்கள் அதை அறிவார்கள் என ஏனைய நாட்டவர்கள் பெருமைகொண்டாடினர். அரசியல் தேவைகள் பொருளாதார இழப்புக்கள் மற்றும் பிறவற்றைப் பொருட்படுத்தாமல், கொவிட -19 ஐக் இல்லாமற்செய்ய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட நடவடிக்கைகள் பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு விடயமாக இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, எமது மக்கள் காலப்போக்கில்; நாட்டின் நலனுக்காக வைக்கப்பட்ட விதிகளை பின்பற்ற தவறிவிட்டனர். பாராளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பின்னரும் கூட, கொவிட்-19 பாதுகாப்பு வரமுறைகளை மெதுவாகத் தள்ளிவிட்டு, தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதிலிருந்து பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில்; முழு மக்களும் கவனம் செலுத்தினர்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட முகக்கவசம் அணிவதிலும், மக்களிடையே சந்திப்புக்களின்போது சமூக இடைவெளிகளைக் கடைப்பிடிப்பதிலும் பின்னின்றுவருவதனைக் காணக்கூடியதாக உள்ளது. தனியார் துறைகளும் வீட்டில் இருந்தவாறே வேலை செய்தல் என்ற நிலையை நிறுத்தி அனைவரையும் தொழிலுக்கு திரும்ப அழைத்து நகர்ப்புறங்களில் நெருசல்களை அதிகரித்தனர். இந்த ஒரு அசாதாரண நிலைமையின் கீழ் இலங்கையர்கள் தங்கள் வேலையை அணுகிய விதத்தையும் அவர்களின் வேலை-வாழ்க்கை இரண்டுக்கும் இடையிலான சமநிலையையும் பேணுவதற்கான வாய்ப்பினை இதனால் இழந்தனர்.

2020 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் செங்குத்தான மந்தநிலை மற்றும் சாத்தியமான கொவிட்-19 தாக்கத்தை கருத்தில் கொண்டு பொருளாதாரத்தை மீழுருவாக்கம் செய்ய வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன, என்றாலும் நாளாந்தத் தொழிலாளர்கள் மற்றும் பிற நலிவுற்ற தொழிற் குழுக்கள் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரமும் ஊரடங்கு உத்தரவின் கீழ் நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியாமல் இருந்தது நாம் எல்லோரும் அறிந்ததே. அதற்கும் மேல் கடந்த இரண்டு மாதங்களாக மக்களிடையே விழிப்புணர்வு குறைவடைந்துகொண்டு வந்துள்ளதனையும் பார்க்கலாம். 

இந்தப் பின்னணியில், எமது நாடானது இரண்டாவது அலையைத் தாங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தால், கொவிட்-19 பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய கடுமையான மற்றும் மீளமுடியாத தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதனை பலர் எச்சரித்துள்ளனர். நாட்டின் வெளிநாட்டுக் கடனை திருப்பிச் செலுத்துதல் ஏற்கனவே 2021 ஆம் ஆண்டிற்கான ஒரு சவாலான கட்டத்தில் இருந்ததோடு, சமீபத்திய மதிப்பீடுகள் மூடிய பொருளாதாரத்தின் மீது ஒரு வீழ்ச்சியை கொண்டுவந்ததனால், இரண்டாவது அலைகளைத் தடுப்பதன் முக்கியத்துவத்தை சாதாரணமாக மதிப்பிட முடியாது. 


எனவே பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். சில மணிநேரங்களில், பாடசாலைகள்;, பிரத்தியேக வகுப்புகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையின் பிற அம்சங்கள் போன்ற நடவடிக்கைகள் ஒரு நாளிலேயே (ஞாயிற்றுக்கிழமை) மாறின. இதுதான் இந்த தொற்றுநோயின் சக்தி. 

ஆகவே இந்த நிலையில், எப்பொழுதும் போலவே அரசாங்கம் தகவல்களை விரைவாக வெளியிட்டது மற்றும் 'நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன' என்ற ஒரு செய்தியினை ஆர்வமுள்ள பொதுமக்களுக்கு கொண்டுசேர்க்க முயல்கின்றன. தனியார் துறை தங்கள் வேலையை வீட்டில் இருந்தவாறு முன்னெடுத்தல் என்ற நடைமுறையைக் கொண்டுவரவேண்டும். 

அத்துடன் மாகாணங்களிடையேயான போக்குவரத்தினை கூடியளவு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து முடிந்தவரை சிறிய பயணத்தை ஊக்குவிக்க வேண்டும், இதற்கிடையில் குறிப்பாக பொது போக்குவரத்தை பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை எமது பொதுமக்களுக்கு. இப்போதைக்கு, அதிகாரிகள் தங்கள் வேலையைச் செய்ய அனுமதிப்பதும், முகக்கவசங்களை அணிந்துகொள்வதும், இதன் பரவும் வீரியத்தினை முற்றிலும் அவசியமாகக் கட்டுப்படுத்துவதும் என்பது பொதுவான கருத்தாகும்.


0 comments:

Post a Comment