ADS 468x60

07 November 2020

நாம் ஏற்றுமதிசார் உற்பத்தியாளர்களாக மாறுவதற்கு சிந்திக்கவேண்டும்

உலகம் படிப்படியாக பல புரட்சிகளைச் செய்து ஒரு கண்டத்துக்கும் இன்னொரு கண்டத்துக்கும், ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டிற்கும் இடையிலான தொடர்பானது ஒரு கிராமத்திற்குள் நடப்பதுபோல் மாறி அதை 'உலகமயமாதல்' என்ற பதம் கொண்டு அழைத்து வந்தனர். ஆனால் இந்த தொடர்புகள் கொரோணா வைரஸ் பரவல் காரணமாக இன்று துண்டிக்கப்பட்டுள்ளது. 

ஒரு நாட்டில் செய்யும் மிகை உற்பத்தியை ஏற்றுமதி செய்தும், இன்னொரு நாட்டிற்கு மிகைத் தேவையாக இருக்கின்ற பொருட்களை இறக்குமதி செய்தும், வர்தகம் உலகத்தின் ஒரு மூலையில் இருந்து இன்னொரு முலைக்கு 24 மணித்தியாலங்களில் பரிமாறப்பட்டன. இதனைக் கருத்தில்கொண்டு இலங்கையிலும் பல தொழிற்கிராமங்கள், தொழிற்பேட்டைகள், வர்த்தக வலயங்கள் என முயற்சியாளர்களை பெருக்கி வர்த்தகத்தினை வளர்த்துக்கொண்டனர். ஆனால் இவையெல்லாம் இந்தக் கொரோணாவால் கணப்பொழுதில் மாறிவிட்டதனை அவதானித்து வருகின்றோம். அதனால்தான் கிராமத்துக்குள் இருப்பனவற்றையே இன்று பரிமாறிக்கொள்ளும் நிலையில் அந்தக் கிராமம் இன்று உலகமாக விரிந்துவிட்டதனை காணலாம்;. இவ்வாறு அந்த அந்த மக்களுக்கு தேவையானவற்றை அவர்களே உற்பத்தியாக்கிக்கொள்வதனை தன்னிறைவுப் பொருளாதாரம் என்றழைத்தனர்.

இவ்வாறான ஒரு பின்னணியில் ஒரு அனர்த்தத்தினை அனுசரித்து அதற்கேற்றாற்போல் வாழப்பழக வேண்டிய கட்டாயத்தில் நாம் மாறிவிட்டோம். ஆதனை உணர்ந்த அரசாங்கம், ஏற்றுமதிசார் உற்பத்தி கிராமங்களை ஒரு தேசிய திட்டத்தின் கீழ் மீண்டும் தொடங்க வர்த்தக அமைச்சிற்கு இந்த வாரம் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 

ஒரே பகுதியில் உள்ள கிராமங்களை ஒன்றிணைத்து ஏற்றுமதிக்கான பொருட்களை உற்பத்தி செய்ய அவர்களுக்கு பயிற்சி அளித்து அவற்றை ஒரு நிறுவனத்துடன் அல்லது அதுசார்ந்த கம்பனிகளுடன் இணைப்பதே இந்த திட்டம். 1980 களில் இருந்து இதே போன்ற பல திட்டங்கள் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டு வந்துள்ளன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஏற்றுமதியைப் பன்முகப்படுத்தவோ அல்லது அதிகரிக்கவோ பெரியளவில் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. அப்படி ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களில் காலமாற்றத்துக்கு ஏற்ப மேலும் அவை தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட (tech-focused)  உயர் பெறுமதிசேர்க்கப்பட்ட உலக சந்தையாக (high-value markets of the world) இருக்கத் தவறிவிட்டன.

இதேபோன்ற ஒரு 100,000 சுயமுயற்சியாளர்களை 2020 வருடத்திற்குள் உருவாக்கும் திட்டத்தினை இலக்காகக்கொண்டு முன்னய அரசு பல நடவடிக்கைகளை முன்னெடுத்து அதற்கால 60 பில்லியன் ரூபாக்களும் ஒதுக்கப்படது குறிப்பிடத்தக்கது. எது எவ்வாறாயினும், எமது நாட்டின் மொத்த சனத்தொகையில் வெறும் 2% வீதமானோரே தொழில் முனைவோராக இருப்பதனால் இக்கொள்கை வர்த்தக சமுகத்தினரால் பெரிதும் ஆதரிக்கப்பட்டது. ஆனால் தற்போது நிறுவப்பட்டுள்ள அரசின் திட்டம் வேறுபட்டது என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் அந்தத்திட்டங்கள் சுயமுயற்சியாளர்களை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவேண்டும் என்பது பொதுவான அவிப்பிராயம்.

இலங்கையில் மொத்த தொழில் முயற்சியாளர்களில் சிறு மற்றும் நடுத்தர முயற்சியாளர்களின் தொகை 75% வீதமாகும் என தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தினால் கூறப்பட்டாலும் இந்த தொழில் முனைவோரின் எண்ணிக்கை நமது பல அண்டை நாடுகளுடன் ஒப்பிடும் போது அவை மிகக்குறைவானதாகவே காணப்படுகின்றது. 

வியட்நாமில், உழைக்கும் மக்களில் 19.6% வீதமானவர்கள் வணிக உரிமையாளர்கள் அல்லது முதலாளிகள். தாய்லாந்தில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக உள்ளது, அது 27.5% வீதமாகும். பங்களாதேஷ் மற்றும் சீனா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் முறையே 11.6% வீதமும் மற்றும் 7.5% வீதமும் என அறிக்கை சொல்லுகின்றது. ஆகவே இவை அந்தந்த நாட்டு மக்களின் வர்த்தகர்களின் அதிகரித்த எண்ணிக்கையாகும்.

அதுபோன்று பல இலங்கைக்கு சமமான மக்கள்தொகையினைக் கொண்ட நாடுகளில், சராசரியாக் 10% வீதமானவர்கள் வர்த்தகர்கள் இருக்கின்றார்கள். இந்தநாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் சுமார் 230,000 முதலாளிகள் அல்லது வணிக உரிமையாளர்களே உள்ளனர். எனவே, உலகப் பொருளாதாரத்தில் நாம் போட்டியாளர்களாக மாற நமது பொருளாதார வளர்ச்சி இலக்கினை அடைய எமது நாட்டில் தொழில்முனைவோரின் எண்ணிக்கையை நாடு மிகவும் அதிகரிக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.

இவ்வாறான நிலையில் வெளிநாடுகளில் இருந்து செய்யப்படும் இறக்குமதிக்கு மாற்றாக பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வது என்பது குறைந்த நன்மைகளைக்யே தரும். இந்த தந்திரோபாயத்திற்குப் பதிலாக நாம் உற்பத்திசெய்யும் பொருட்கள் போட்டித்தன்மைகொண்ட ஏற்றுமதி சார்ந்த பொருட்களாக இருக்க வேண்டும்,  மேலும் உலகளாவிய பெறுமதிசேர் சங்கிலிகளுடன் (global value chains) இணைக்க பெரிய இணைப்புகள் இல்லாவிட்டால் இதை அடைவது மிகவும் கடினம்.

சிறு நிறுவனங்கள் மற்றும் ஆரம்ப நிலையில் உள்ள நிறுவனங்களுக்கு போதுமான வழிகாட்டுதல் கிராம, பிரதேச மற்றும் மாவட்ட மட்டங்களில் உருவாக்கப்படுதலுடன் சர்வதேச நிறுவனங்களுக்கிடையிலான மற்றும் சந்தைகளுக்கிடையிலான தொடர்புகள் (Network) ஏற்படுத்தப்படவேண்டும். இலங்கையின் மாறுபட்ட பொருளாதாரக் கொள்கைகளுக்கு ஏற்ப பல தசாப்தங்களாக, நமது நாட்டில் தொழில்முனைவோரை அல்லது முயற்சியாளர்களை வளர்ப்பதற்காக அரசாங்கம் பல திட்டங்களை வகுத்து வந்துள்ளன. ஆனால் இவற்றில் பல ஏற்றுமதியினை மையமாகக் கொண்ட முயற்சிகளைக் காட்டிலும் இறக்குமதிக்கு மாற்றீடுகளை (Import Supsidies) உருவாக்கும் முயற்சிகளாக மாறியுள்ளன.

இன்றைய அதிக போட்டி நிறைந்த உலகில், கம்பனிகள் அல்லது நிறுவனங்கள் 'உலகளாவிய அளவில் பிறக்க வேண்டும்' எனவேதான் அவை உலகளாவிய பெறுமதிசேர் சங்கிலிகளுடன் இணைக்கப்பட்டு போட்டித் தொழில்களாக வளர முடியும். 

நிறுவனங்களை ஆதரிப்பதற்கான செயல்முறைகளில் அதற்குப் பொருத்தமான அல்லது சாத்தியமான முதலீட்டாளர்களுடன் அவற்றை இணைப்பது மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளை குறிவைப்பது என்பவை மிகவும் கடினமான பகுதிகளாகும். இந்தச் செயன்முறையை பல வெற்றிகரமான அரசாங்கம் இலங்கையில்; ஒட்டுமொத்த வணிகச் சூழலை மேம்படுத்துவதற்கும் நெருக்கமாக இணைக்கப்படுவதற்கும் தவறிவிட்டன. ஆகவே இலங்கையின் பொருளாதாரத்தை மிகவும் போட்டித்தன்மையடையச் செய்ய தேவையான ஒட்டுமொத்த கட்டமைப்பு மாற்றங்களும் பின்தங்கியுள்ளதால், சந்தைகளைக் கண்டுபிடிப்பது மற்றும் தொழில்முனைவோரை ஆதரிப்பது எப்போதும் கடினமானது.

தொழில்முனைவினை ஏற்படுத்தல் என்பது அனைத்து நாடுகளும் பின்பற்றுகின்ற மற்றும் பொருளாதார ரீதியில் சாதிக்கும் பொன்னான வாக்குறுதியாகும். அதை மனதில் வைத்து, மக்களுடைய பொது நிதியை எவ்வாறு செலவிடுகிறது என்பதில் அரசாங்கம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும் அதில் சிலவற்றையாவது உண்மையாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கவேண்டும். 

சந்தைகளைக் கண்டுபிடிப்பதற்கான சவாலைச் சமாளிக்க முழு வள ஒதுக்கீட்டினையும், ஆதரவினையும் ஏற்படுத்தாவிடின்; தொழில் கிராமங்களை உருவாக்குதல் கடினமாகும். அவ்வாறு இருந்தால் நாம் கிராமங்களையே உலகமாகப் பார்க்கும் ஒரு பின்தங்கிய நிலைக்குத் தள்ளப்படுவோம். எனது அரசாங்கத்துடன் இணைந்து இந்த தொழில் முனைவோரை உருவாக்கும் ஊக்குவிக்கும் பணியில் இணைத்து மக்களையும் நாட்டையும் வறுமை எனும் பொறியில் இருந்து மீட்டெடுப்போம்.

0 comments:

Post a Comment