ADS 468x60

05 June 2021

இணையவழிக் கல்வி மாணவர்களுக்கு சாத்தியமா சங்கடமா!

S.Thanigaseelan;
அறிமுகம்: இன்று கொவிட் -19 வைரஸின் தாக்கம் உலகெங்கும் பரவலாகி அச்சுறுத்தி வரும் வேளையில், இலங்கையிலும் தாக்கத்தை வலுவாகக் காட்டிவருகிறது. கடந்த மே மாதத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை இன்று வரை நீடித்து பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்விக் கல்லூரிகளை வழக்கமான முறையில் செயல்படாத சூழலுக்குத் தள்ளிவிட்டது. இதனால் ஏனைய துறைகளினை விடவும் கல்வித்துறை பாரிய இடர்களை எதிர்கொண்டு வருகின்றதை நாம் அனைவரும் அறிவோம். 

இந்தப்பின்னணியில், கல்வி பயிலும் மாணவர்களுக்கு இது ஒரு அசாதாரண சூழல். கொரோனாவினால் வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் குழந்தைகளுக்கு இணையத்தில்; கற்பித்தல் வழியே இப்போது ஆசிரியர்கள் உதவுவதாக ஏறத்தாழ உலகின் பல நாடுகளிலிருந்தும் செய்திகள் வந்து கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.  இணையவழிக் கல்வி என்பது மேற்கத்திய நாடுகளில் எப்பவோ துவங்கிய கல்வியை எல்லோரும் இலகுவாக அணுகும் ஒரு வழியாக அவர்கள் கொண்டாடி வரும் நிலையில், கொராணா நிமித்தம் நாம் கட்டாயத்தின் பேரில் இவற்றை பின்பற்றவேண்டியிருப்பதே எம்போன்ற வளர்சி பெற்றுவரும் நாடுகளுக்கு மறுபுறத்தில் சவாலாகவும் காணப்படுகின்றது.

அதனால் எம்மத்தியில் பல கேள்விகள் இதுபற்றி எழத்துவங்கியுள்ளது. ஒன்லைன் கல்விமுறையின் தேவை என்ன? இந்த மாற்றங்களைக் கல்வி முறையில் கொண்டுவந்தால் ஏற்படும் சிக்கல்கள் என்னவாக இருக்கும்? மாணவர்கள் உண்மையிலேயே கற்றலில் ஈடுபடுகின்றனரா? பலதரப்பட்ட பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிலவும் நமது சமூக அமைப்பில் ஒன்லைன் கல்வி என்பது சாத்தியமா? இன்ரெனெட் கவரேஜ் (இனைய வசதிகள்) தாராளமாகக் கிடைக்கின்றதா? அதற்கான டேடா காட்களை (தரவு அட்டைகளை) நாட்டை முடக்கிய சூழலில் கொள்வனவு செய்ய முடிகின்றதா? வசதிகளற்ற வீட்டிற்குள் ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இருந்தால் அவற்றை எவ்வாறு அணுகுவது? இப்படி ஏராளமான சந்தேகங்கள் நம்மிடையே உருவாகியுள்ளன.

இலங்கையில் உள்ள கையடக்கத் தொலைபேசிப் பாவனையாளர்கள்.

குறிப்பாக 2019 ஆம் ஆண்டின் பாடசாலைகளின் கணக்கெடுப்பின்படி இலங்கையில் உள்ள 10,165 அரச பாடசாலைகளிலும் 4,061,653 மாணவர்களுக்;கும் 246,592 ஆசிரியர்கள் கல்வி கற்பித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள அனைத்து மாணவர்களுக்கும் இந்த இக்கட்டான காலத்தில் இணையவழி கல்வியே அவர்களை கல்வியில் இருந்து விலகாமல் இருக்க ஒரே வழி என அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

ஆனாலும் பல அரச பாடசாலைகளில்;, தொற்றுநோய்களின் போது கற்றல் பெரும்பாலும் ஒன்லைன் இணைப்புக்கள் (நேரலை வகுப்புக்கள்) வழியாகவே நிகழ்ந்துள்ளது, ஆசிரியர்கள் வட்ஸ்அப் மற்றும் வைபர் ஆகிய சமூக வலைத்தளங்களின்; வழியாக மாணவர்களுக்கு பெரிய அளவிலான பிடிஎப் ஆவணங்களாக அனுப்புகின்றனர். இருப்பினும், சமீபத்திய கணக்கெடுப்பு தகவல்களின்படி, 2018 ஆம் ஆண்டில், பாடசாலை வயது குழந்தைகள் உள்ள இலங்கை குடும்பங்களில் 52 வீதமானவர்கள் மட்டுமே ஸ்மார்ட்போன் அல்லது கணினி வைத்திருக்கின்றனர் என்றும் மற்றும் அதில் 40 வீதமானவர்களுக்கு மட்டுமே இணைய இணைப்பினைக் கொண்டுள்ளனர் எனவும் கீழே படம் 1 இல் சான்று கூறப்படுகின்றது. 


இணையவழிக் கல்விக்கு சார்பான வாதம்

இன்று நாடு முடக்கப்பட்ட சூழலில், கொரோணா அச்சுறுத்தலின் மத்தியில் பெற்றோர் பிள்ளைகளின் கல்வி பற்றி பெரும் கவலையுடன் காணப்பட்ட நேரத்தில், இந்த இணையவழிக் கல்வி மாற்றுவழியாக கொண்டுவரப்பட்டு, பரீட்சிக்கப்பட்டு அது தொடர்ந்தவண்ணம் உள்ளது. அந்தவகையில் இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் எங்கிருந்தும் எப்போதும் கல்வியைப் பெற முடிவதும், அதை அனைவருக்கும் சாத்திய மாக்குவதும் தான் இணையவழிக்; கல்வியின் முதல் பயனாக இருக்கும். இங்கு வழமையான அனைவருக்கும் பொதுவான கற்பித்தல் முறையாக இருப்பினும், அது மாணவரின் இயல்பு - தனித்துவத் தேவைக்கு ஏற்ற கற்றலைப் பெற முடிவதாக உள்ளது.

இது மீத்திறன் மாணவர்கள், மெல்லக் கற்போர், கற்றல் குறைபாடு உள்ளோர் - சிறப்புக் குழந்தைகளுக்கு வரப்பிரசாதமாக அமையும். சிறந்த கல்வி நிலையங் களுக்கான அலைச்சல், கல்வி நிலையக் கட்டமைப்பு, சிறந்த ஆசிரியருக்கான தட்டுப்பாடு ஆகியவற்றுடன் புத்தகப் பொதி, பாடசாலை, பல்கலைக்கழகங்களுக்கான பயணம், நேர விரயம் போன்றவற்றிலிருந்தும் மாணவர்களுக்குப் பெரும் விடுதலை கிடைக்கும்.

மாணவர்கள் வகுப்பறைக் கற்றலைவிட ஒன்லைன் கல்விமுறையில் கூடுதல் திறன்களைப் பெறுவது சாத்தியமாகும். வௌ;வேறு கல்வி நிறுவனங்களின் வாயிலாக ஒரே நேரத்தில் பல்வேறு படிப்புகளைப் பெறுவதும் உயர் கல்விக்கு உதவும். வருங்காலத்தின் பன்மயப்பட்ட தொழில் வளர்ச்சியை எதிர்கொள்ளும் பணித்திறனுக்கு அவை ஈடுகொடுக்கும். தலைசிறந்த கல்வி நிறுவனம் ஒன்றின் மரபு ரீதியிலான மாணவர்களை உள்வாங்குவதனைவிட, ஒன்லைன் கல்வியில் ஏராளமானோர் சேர வாய்ப்பு கிடைக்கும். மாணவர்களின் தேவை, விருப்பம் ஆகியவற்றைப் பொறுத்து பாடங்களைப் படிக்கவும் முடியும். குறிப்பாக பாடசாலை நேரங்களிலும் ஏனைய நேரங்களிலும் கற்றலை மேற்கொள்ள இது வசதியாகவுள்ளது. நாடு பூராவும் உள்ள மாணவர்கள் சில பிரசித்தி பெற்ற ஆசியரியர்களை இணையத்தினூடாக அணுகி தமது கற்றலை மேற்கொள்ள இது வழிசமைக்கின்றது. அதாவது இலங்கையின் பெயர்பெற்ற பாடசாலையிலுள்ள ஆசியரியர்களிடம் தாம் கற்ற வேண்டும் என்ற மாணவ மாணவியரின் ஆதங்கங்களுக்கு இத்தகைய நேரலைமுறை உதவியாக இருக்கின்றது எனலாம். 

அத்துடன் தேர்வு முறையின் அழுத்தங்கள் குறையும். தம்மையொத்த மாணவர்கள் குழுவாக ஒரே நேரலை வகுப்புக்களில் ஒன்றிணையவும் பாடச் செயல்களை ஒன்லைனில் ஒருங்கிணைத்துக் கொண்டுசெல்லவும் இயலும். பொருளாதாரம், பலதரப்பிலுமான நெகிழ்வுத் தன்மை, பிரத்யேகக் கவனம், செறிவும் வீரியமும் நிறைந்த கற்றல் – கற்பித்தல் செயல்பாடுகள் ஆகியவை சாத்தியமாகவும் ஒன்லைன் கல்வி முறை வழி செய்யும். மேலும் கூகுள்போம் என்ற செயலியின் ஊடாக பரீட்சைகள் நேரலையில் தரவிறக்கம் செய்யப்பட்டும் மற்றும் நேரடியாக நேரலையிலும் விடைகளை எழுதுவதற்கும் குறிப்பதற்குமான சந்தர்ப்பம் காணப்படுவதால் வினாத்தாள்களை திருத்துவதற்கு ஆசியரியர் நேரத்தினை செலவிட வேண்டிய அவசியமில்லை. அத்துடன் மாணவர்களுக்கு தாம் விடையளித்த வினாத்தாள்களுக்கான பதிலை உடனடியாகவே சரிப்பார்த்துக்கொள்ளவும் முடிகின்றது.

நவதாராண்மை பொருளாதாரத்தின் விளைவானது எவ்வாறு தேசிய அரசுகளின் எல்லைகளைக் கடந்து வாடிக்கையாளர்களை தக்கவைத்துள்ளது. அதனைப்போலவே இன்று இணையவழிக் கல்வியும் பூகோள எல்லைக்கோடுகளை அழித்து சாமானிய மாணவர் ஒருவருக்கு உலகின் தலைசிறந்த பேராசிரியரின் பாடங்களைக் கேட்க முடிவதும், அவரிடம் ஐயங்கள் தீர்த்து தேவையான வழிகாட்டுதல்களைப் பெறுவதும் சாத்தியமாக்கியுள்ளது. நவீனத் தொழில்நுட்பங்களின் உதவியுடன் மாணவரின் தேவைக்கேற்ற வழிகாட்டுதலை வழங்கவும் ஆசிரியரால் இயலும். அப்படியான தொழில்நுட்பங்கள் பலவும் நம் கைகளுக்கு எட்டத் தொடங்கியுள்ளன. என்று இன்னும் பல சாதகமான விடயங்களை நாம் அடுக்கிக்கொண்டு செல்லலாம்.

ஒன்லைன் கல்விக்கு எதிர்மறையான வாதம்

நாளுக்குநாள் அதிகமாகும் கொரோனா பாதிப்பின் காரணமாக, கல்வித்துறையின் தலைப்புச் செய்திகளாக 'ஒன்லைன் டீச்சிங்' இடம்பெற்றுள்ளது. இந்த இணையத்தின் வழியே கற்பித்தல் முறை கல்வி என்பது மாணவர்களுக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்துமா? அல்லது அது ஒரு மாயத்தோற்றமா? என்பதுபற்றி நாம் இன்று பார்க்கவேண்டியுள்ளது.

1) ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனி

நாடு பூராவும் பரவியுள்ள கொரோணா காரணமாக, பஞ்சத்தால் மக்கள் அவதியுற்றுக்கொண்டிருக்கும் நமது நாட்டில், கொரோனா தொற்று பெரும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், ஏழைகளுக்கு ஒன்லைன் கல்வி என்பது எட்டாக்கனி தான். இலங்கையில்; வெறும் 47% வீதமானவர்களின் வீடுகளில் மட்டுமே திறன்பேசிகளைக் (Smart phone) கொண்டதாகவும், அதிலும் கிராமப்புறங்களில் 35% விகிதமானவர்களே இணைய இணைப்பைப் பெற்றிருக்கின்றனர் எனவும்; கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன.  இந்நிலையில் இணைய வழிக் கல்வி என்பது நடுத்தர மற்றும் உயர்தட்டுப் பிரிவினரின் குழந்தைகளுக்கு மட்டுமே சாத்தியமானதாக இருக்கிறது.

ஏற்றத் தாழ்வுகள் மிகுந்துள்ள கல்வி முறையைக் கொண்டுள்ள நமது நாட்டில் சாதாரண கல்வியே பலருக்கு எட்டாக் கனியாக விளங்கும் சூழலில் எல்லோருக்கும் ஒன்லைன் கல்வி சாத்தியமா என்பதையும் சிந்திக்க வேண்டும். மின்சாரம், திறன்பேசி, கணிணி, இணையம் என ஏழை மக்களுக்குக் கிடைக்கப் பெறாத பலவும் அவசியப்படும் ஒன்லைன் கல்வி முறை என்பது கல்வியிலிருந்து ஏழை எளிய மாணவர்களை அடித்துத் துரத்தி கல்வியை தனியார்களின்; வேட்டைக் காடாக்கும் வேலையையே நிகழ்த்தியிருக்கிறது.

ஏற்கனவே பெரிய பெரிய தனியார் கல்வி நிறுவனங்களின் கீழ் இயங்கும் தனியார்; பாடசாலைகள் ஏற்கனவே கற்பித்தலை தனி பெக்கேஜ் முறையாக ஒன்லைனில் வெறும் பாடப்பொருளை வழங்கும் சடங்கு நிகழ்வாக செய்துவருகின்றன. இது ஒருவேளை பல்கலைக்கழக மாணவர்களுக்கு பொருந்தலாம். ஆனால் பள்ளிப் பருவத்து மாணவர்களுக்குப் பொருந்தாத ஒன்று. 

  2). அலைவரிசைப் பிரச்சினை 

இலங்கைப்போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் தொலைதொடர்பு சேவைகள் மற்றும் அலைவரிசைகள் தொடர்பான பிரச்சினைகள் காணப்படுகின்றன. ஆதலால் பாடசாலையில் அதிபர் மற்றும் துறைசாரந்த மேலாளரின் மேற்பார்வையின் கீழ் நடைபெறும் கற்பித்தல் செயன்முறைகள் இங்கு பின்பற்றப்படுவதில்லை. எனவே, பாடநேரங்களில் மாணவர்கள் பல்வேறு வகையான இணையத்தளங்களுக்கும் செல்வதற்கான வாய்ப்புள்ளது. அத்தகைய நிலைமை மாணவர்களின் நடத்தையில் பாதிப்பினை செலுத்துகின்றது. 

பின்தங்கிய பிரதேச மக்களுக்கு தொலைதொடர்பு வசதிகள் காணப்படாமையினால் சில சமயங்களில் மாணவர்கள் மரங்களின் மேலமைக்கப்பட்டுள்ள கொட்டகைகளிலிருந்து கல்விநடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அதிகரித்த மழை மற்றும் காலநிலை மாற்றங்கள் காரணமான மாணவர்களால் தமது வகுப்புக்களுக்கு சமூகமளிக்க முடியாத சூழ்நிலையும் காணப்படுகின்றது. 

3). நாடு முடக்கமும் நலிவுற்ற மக்களும்

தோட்டப்புற மற்றும் கிராமப்புர ஏழை பெற்றோர்கள் குடும்பத்தில் இரண்டு மூன்று பிள்ளைகளை ஆன்லைன் மற்றும் இணையவழி கல்வி சேவையில் இணைத்துக்கொள்ள முடியாமல் திண்டாடுகின்றார்கள். ஏனெனில் அவர்கள் உழைப்பது அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்துகொள்ள முடியாமலிருக்கின்ற அதேவேளை அவர்களால் கைப்பேசி அட்டைகள் மற்றும் டேட்டா அட்டைகளை தமது பிள்ளைகளி;ற்கு வாங்கிகொடுக்க முடியாதநிலமைக் காணப்படுகின்றது. அத்தோடு பாடசாலையிலுள்ள அiதியான கற்றலுக்கான சூழலை நாம் வீட்டில் எதிர்ப்பார்க்க முடியாதுள்ளது. வசதிகுறைந்த வீடுகளிலுள்ள பெற்றோர் மாணவர்கள் மற்றும் ஆசியரியர்கள் கூட பல்வேறு சாவால்களை இக்கல்விமுறையினால் சந்திக்கின்றார்கள் எனலாம். 

4). உளரீதியான பாதிப்புக்கள்

அப்படி ஒன்லைன் கல்வியில் படிக்க சாத்தியமான மாணவர்களுக்கும் கூட, இந்த வகுப்புகளில் தொடர்ச்சியாக அமர்ந்திருந்து கவனிப்பது என்பது உளவியல் ரீதியான சிக்கல்களை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மாணவர்களை கவனச் சிதறல் இன்றி கைப்பேசித் திரையை நோக்கச் செய்வதே பெரும் சவாலாக இருப்பதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். மேலும் பாடசாலையைப்; போன்றதொரு மாணவர்களின் ஊக்கமான பங்களிப்பு ஒன்லைன் வகுப்பில் சாத்தியமற்றதாக இருப்பதாகவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். 

இணைய வகுப்புகளில் கலந்து கொள்ள வாய்ப்புள்ள மாணவர்களின் நிலைமை இதுவென்றால், அப்படி ஒரு வாய்ப்பு அமையப் பெறாத மாணவர்களின் நிலைமை இதை விட மோசமானதாக இருக்கிறது. ஒன்லைன் கல்வி பெறுவதற்கான வசதியற்ற மாணவர்கள், உடன் பயிலும் மாணவர்களைப் பார்த்து ஏக்கமுற்றும், பாடங்களை இழக்கின்றோமே என்ற பயத்திலும் மனமுடைந்து கொள்வது இன்று வரை தொடர்கிறது. 

தோட்ப்புரங்களில் பல மாணவர்கள் தமது கல்வியை கையவிட்டு கண்டி, கொழும்பு போன்ற நகரங்களிலுள்ள கட்டிட நிர்மாணங்களில் நாட்கூலிகளாக இணைந்துவிட்டார்கள். மேலும் பல கிராமப்புற மாணவ மாணவிகள் தமது பெற்றோருடன் குடிசைக் கைத்தொழில் மற்றும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது மாணவர்களின் பெற்றோரும் உளபாதிப்புக்களுகுள்ளாகின்றார்.

5). உடல் ரீதியான பாதிப்புக்கள்

மாணவர்கள் அதிகமான நேரம் கைப்பேசித் திரையைப் பார்க்க நேரிடுவது மட்டுமின்றி, இணையவழி வீட்டுப் பாடத்தை செய்வதற்கும் கைப்பேசித் திரையில் நேரம் செலவழிக்கின்றனர். இது மாணவர்களின் உடல்நிலையில் தலைவலி, கண் பாதிப்புகள், முதுகுவலி உள்ளிட்ட உபவிளைவுகளை ஏற்படுத்துகிறது. மேலும் எவ்விதமான உடல் இயக்கங்களும் இல்லாத சூழலும், சக மாணவர்களுடன் பேசுவது போன்ற சமூக உறவுகள் இல்லாத சூழலும் மாணவர்களின் மனநிலையை அதிகமாக பாதிக்கிறது. 

6). கற்றல் கற்பித்தல் பிரச்சினை

குறிப்பாக ஒன்லைன் கல்வியில் கற்பித்தலும் நடப்பதில்லை, கற்றலும் நடப்பதில்லை. தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக உருவாகிய ஒரு டிவைஸ் வழியே தகவல்கள் கடத்தப்படுகின்றன. அங்கே உண்மையான ஜீவனுள்ள உயிரோட்டமான ஆசிரியர் - மாணவர் உறவு நிலவுமா?

மாணவர் மனதில் தோன்றும் சந்தேகங்கள் வினாக்களுக்கு தீர்வு கிடைக்குமா? வகுப்பை கவனிக்கிறார்களா, விரும்பி ஆர்வமாகக் கற்றுக்கொள்கிறார்களா? என்பதை ஆசிரியர் உற்றுநோக்க முடியுமா? ஒரு மாணவன் உடல்நலக் குறைவால் அவதிப்படுகிறான் எனில் ஆசிரியர் ஆறுதல்படுத்தி தைரியம் தர முடியுமா? இந்த ஒன்லைன் வகுப்புகளில். உயிருள்ள ஜீவன்களை தனிமைப்படுத்தி உயிரற்ற ஊடகத்தின் வழியே எதுபோன்ற கற்பித்தல் - கற்றல் செயல்பாடுகளை நிறைவேற்றமுடியும்?

கல்வியின் கோட்பாடுகள், காலம் காலமாக நூற்றுக்கணக்கான கல்வியாளர்களால் விவாதிக்கப்படுவது 'கல்வி கற்பதற்கான சூழல்',  மாணவர் கருத்துக்கு இடமளிக்கும் ஜனநாயக வகுப்பறைகள் இவற்றை எல்லாம் அடித்து நொறுக்கி ஒரு மாயையை உருவாக்கத் தயாராகிவருகின்றன. ஒன்லைன் வகுப்பறைகள். கற்பித்தல் படிநிலைகளாக வரையறுக்கப்பட்டுள்ள, ஒரு பாடப் பொருளின் நோக்கம், ஆயத்தப் படுத்துதல், மாணவருடன் உரையாடுதல், செயல்பாடுகள், கேள்வி கேட்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்தல், உற்று நோக்கி உள்வாங்கி கற்றல் என்று எதற்கும் இங்கு இடமில்லை.

குழந்தைகள் பாடத்தை கவனிக்க எந்த நிர்பந்தமும் வழிமுறைகளும் இல்லாமல், திரைப்படத்தைப் பார்ப்பது போல பாடம் நடத்தும்  வகுப்பறைகளை டிவைஸ் வழியே பொழுதுபோக்குக்காகக் கூட பார்க்க விரும்ப மாட்டார்கள் என்பது தான் யதார்த்தம். அதுதவிர எத்தனை மணி நேரம் கண்களின் விழித்திரைகள் ஆசிரியரின் வெற்றுக்குரல்களைக் கேட்டு அவர்களின் பாடம் நடத்தும் அபிநயங்களை வெறிக்கும் என்று எண்ணிப் பார்த்தால், குழந்தைகள் கற்றலையே வெறுத்துவிடுவர். 

கொள்கைரீதியிலான பரிந்துரைகள்

அனைவருக்கும் தொழில் நுட்ப வசதிகள், மின்சார வசதிகள், இணையவிரிவாக்கம் என்பன கிடைக்கும்படியாக செய்வதை உறுதிப்படுத்தவேண்டும். அது தவிர ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் தொழில்நுட்பம் சார்ந்த அறிவினை மற்றும் திறனை ஊக்குவிக்க வேண்டும்.

1. ஸ்மார்ட் வகுப்பறைகளில் மெய்நிகர் கலப்புக் கல்வியை அறிமுகப்படுத்தல்.

நாம் கொவிட்-19 ஆல் கொண்டுவரப்பட்ட வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள, கடந்த வெற்றிகரமான கண்டுபிடிப்புகளுக்கு பங்களிக்கும் காரணிகள் எவை என ஆராயப்பட வேண்டும், இதுபோன்ற திறனை வைத்துக்கொண்டு எவ்வாறு முன்னோக்கிச் செல்ல முடியும் என்பதைப் பார்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ஸ்மார்ட் வகுப்பறைகளில் மெய்நிகர் மற்றும் கலப்பு கற்றலுடன் இலங்கையின் நேர்மறையான அனுபவங்கள் மேம்படுத்தப்பட்டு மேலும் விரிவாக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்வதற்கு, தற்போதுள்ள பின்தங்கிய நிலையிலிருந்து கல்வி-ஆராய்ச்சிக்கு வரவு செலவுத் திட்டங்களில் கணிசமான ஊக்குவிப்பினை வழங்கவேண்டும். அதே சமயம் ஊடகங்கள் வாயிலாக நாம் புத்தாக்கங்களுக்கான ஆதரவைத் திரட்டுவதற்கு அனைத்து கல்வி வழங்குனர்களுடனும் மாற்றத்தின் தேவை பற்றிய கொள்கை விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளவேண்டும்.

2. இணையவழிக் கல்விக்கான செலவினைக் குறைத்தல்

எதிர்காலத்தில் ஒன்லைன் கல்வியைத் தொடர்வதன் விளைவாக, தொடர்புடைய செலவுகளைக் குறைப்பதன் மூலமும், உள்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலமும் ஒன்லைன் தளங்களுக்கு அதிக மேம்பாடு மற்றும் அணுகல் தேவைப்படுகிறது. இருப்பினும், பிற வடிவிலான தொலைக் கல்வியை விரிவுபடுத்துவதற்கான மிகவும் அர்ப்பணிப்பும் முயற்சியும் ஏழ்மையான மாணவர்களை அடைய முக்கியமானது. அனைத்து குழந்தைகளும் கற்றலில் ஈடுபடுவதை உறுதி செய்து கொள்ள அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அரசாங்கத்தால் நடத்தப்படும் கல்வி அலைவரிசை மற்றும் யூடியூபில் ஒன்லைன் வகுப்புகள் அனைவருக்கும் சென்றடைய வழி செய்ய வேண்டும். 

3. கல்வி சார் அமைப்புக்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு

இலங்கையில் கனணியறிவு குறைந்தளவில் காணப்படும் நிலையில் இத்தகைய கல்விமுறையை ஏற்படுத்துவதென்றால் கல்வியமைச்சு  ஏனைய தொடர்புபட்ட அமைச்சுக்களான டிஜிட்டல், தொலைத்தொடர்பு அமைச்சுக்கள் மற்றும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களையும் ஒருங்கிணைத்திருக்க வேண்டும். கல்வித் தொழிற்சங்கங்களுடனும் ஆசிரியர் மாணவர்களுடன் கலந்துரையாடி நிபுணர்களின் உதவியுடன் சிறந்த திட்டங்களை தீட்ட வேண்டும். அதில் புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான திட்டம், க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கானத் திட்டம், க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான திட்டம் என்;றவகையில் சிறப்பான ஒழுங்குகளை மேற்கொள்ள வேண்டும். இதனை மத்திய அரசு மாத்திரம் தனித்து முடிவெடுக்காது மாகாண கல்வியமைச்சுடனும் கலந்துரையாடி மேற்கொண்டால் ஒன்லைன் வகுப்புக்கள் மேலும் வெற்றியளிக்க வாய்ப்புண்டு. 

4. இணைய திறன் அபிவிருத்தியினை ஆசிரியர்களுக்கு வழங்கல்.

கல்வித்துறையைப் பொறுத்தவரையில் ஆசிரிய கலாசாலைகள் பெரும்பாலானவை இருவருட ஆசிரியப்பயிற்சியையும் ஒரு வருட தொழிற்சார்ப்பயிற்சியையும் வழங்கியே ஆசியர்களை உருவாக்குகின்றது. இன்னொருபுறம் கலைப்பீட பட்டதாரிகள ஆசியர்களாக உள்ளீர்க்கின்ற சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. மேற்கூறிய செயன்முறைகளில் பயிற்றப்பட்ட ஆசியரியர்களுக்கு கனணிபிரயோகப்பயிற்சி, ஒன்லைன் பயிற்சி, சூம் செயலி போன்ற விடயங்களிலான பயிற்சியும் ஆங்கிலப்புலமையும் தேவையாக உள்ளது. பாரம்பரிய முறையிலான பயிற்சினைப் பெற்ற ஆசியரியர் குழாமினைக் கொண்டு இலங்கையில் ஒன்லைன் மற்றும் இணையவழி கற்றல்நடவடிக்கைகளை தொடர்வது அரசாங்கத்திற்கு வீணான செயற்றிறனற்ற அறுவடையை தரும். 

எனவே, கல்வியமைச்சும் மற்றும் தேசிய கல்வி நிறுவகம் ஏனைய சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் ஆசியரியர்களுக்கு ஒன்லைன் மற்றும் தொலைக்கல்வித் திட்டங்களினூடாக வீட்டிலிருந்தே கல்விபயிற்சிகள் மற்றும் நுட்பமுறைகளை பயிற்றுவிக்க முடியும். அவ்வாறு செய்வதால் கணணி மற்றும் இனையத்தள செயலிகளில் பரீட்சையமற்ற ஆசிரியர்கள் அதுதொடர்பான பயிற்சியை பெற்று தங்களின் சேவையை தொட முயடியும். 

5. தொலைக்காட்சி அலைவரிசை சீர்திருத்தம்

இலங்கைத்தீவில் தொலைத்தொடர்பு வசதிகளிற்ற பி;னதங்கிய கிராமப்புற மற்றும் தோட்டப்புற மக்களின் நலன்கருதி அரசாங்கம் விஷேட கல்வித்திட்டங்களை நடைமுறைப்படுத்தவது காலத்தின் தேவையாகவுள்ளது. குறிப்பாக தொலைக்காட்சி அலைவரிசைகளில் கல்வி நிகழ்ச்சிகளி;ன் எண்ணிக்கையை மூன்று மொழிலிலும் அதிகரிப்பது காலத்தின் கட்டாயமாகும். குறி;ப்பாக கிராமப்புறு மற்றும் தோட்டப்புறங்களிலுள்ள  500 இற்கும் மேற்பட்ட பிரஜாசக்திநிலையங்களை இவ்வாறான கல்விக்காக விஷேட ஒழுங்குகளுடன் மேற்கொள்ளமுடியும். இதற்கு தோட்ட வீடமைப்பு மற்றும் புதிய கிராமங்கள் அபிவிருத்தி அமைச்சுடனும் கிராமிய வீடமைப்பு மற்றும் உட்கட்மைப்பு அமைச்சுடனும் கலந்துரையாடி மேற்கொள்ள முடியும்.

6. ஆசிரியர்களுக்கான இணையவசதிச் சலுகை

அரசாங்கம் இலவசக்கல்விக்கு பலமில்லியன் கணக்கான தொகைகளை செலவுசெய்யகின்றது. அதிலும் ஆசிரியர்கள் தமது சொந்த செயலவிலேயே கல்வி நடவடிக்கைகளை இணையம் மூலமாக தமது மாணவர்களுக்கு கற்பித்துக்கொடுக்கின்றனர். பாடசாலைநிர்வாகம் அதற்கான செலவீனத்தை ஈடுசெய்வதாக இல்லை. ஆகவே, வலயகல்வி திணைக்களங்கள் பாடசாலை அதிபர்களுடன் கலந்துரையாடி தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் (ஸ்ரீ லங்கா டெலிகொம்,டயலொக், மொபிடெல், ஏயாடெல், லங்காபெல்) சுமுகமாக கலந்துரையாடி குறைந்த சகாய விலையில் டேட்டா பக்ஜிகளை பெற்றுக்கொடுக்கலாம். அதனால் அரசாங்க ஆசிரியர்களின் செலவீனத்தையும் குறைக்கக் கூடியதாகவிருக்கும். அல்லது அரசாங்கம் கல்விக்காக விஷேட குறைந்தபட்ச சலுகையுடனான கை;Nபுசிகள், டெப்கள், கனணிகள் வழங்க வேண்டும். மேலும் சாதாரண மொபைல் போன்களிலும் (வீடியோ வசதியற்ற) ஒளிநாடாவை கேட்பதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செய்வதால் ஆசியரியர்கள் மாணவர்களுக்காக ஆன்லைன் இணைய வகுப்புக்களை சிரமமின்றி நடாத்த முடியும்.

7. தொழிற்பயிற்சிக் கலிவிக்கான மாற்றுவழி

மூன்றாம் நிலைக்கல்வி,  தொழிற்பயிற்சி மற்றும் தொழிநுட்ப கல்வி துறையும் வெகுவாக இந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய கல்வி நடவடிக்கைகளைப் போலவே தொழிற்பயிற்சி பற்றிய கல்வியும் குறிப்பிட்ட நேரடியான உபகரணங்களையும் நேரடியான பங்குபற்றுதலுடனேயே கற்றுக்கொள்ள முடியும். எனவே இத்தகைய இணையவழி கல்வி முறையில் இத்துறை மிகவும் சிக்கலை எதிர்நோக்குகின்றது எனலாம். நாட்டின் திறவாண்மை தொழிற்படையை பயிற்றுவிக்கும் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்பயிற்சி கல்வியையும் எவ்வாறு ஒன்லைன் மற்றும் இணையவழியினூடாக எதிர்வரும் காலங்களில் கற்பிப்பது என்பது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினர் நிபுணர்களுடன் கலந்துரையாடி சிறந்து கொள்கை வகுப்புக்களை முன்னெடுப்பது அவசியமாகும். 

8. தனியார் நிறுவனங்களின் கற்பித்தலுக்கு உதவுதல்

ஒரு நாட்டின் நிர்வாகத்திற்கு தனியார்துறையின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும். இலங்கையிலுள்ள தனியார் பாடசாலைகளும் நிறுவனங்களும் தமது கல்வி நடவடிக்கைகளை தொடரந்;தவண்ணமேயுள்ளன. காரணம் அவர்களது வருமானம் மாணவர்களிடமிருந்து அறவிடப்படும் தொகையாகும். எனினும் தற்காலங்களில் அரசாங்கம் வரிவிதிப்பு தொடர்பான இலகுபோக்குகளை கையாண்டால் அந்நிறுவனங்களின் இருப்பும் தக்கவைக்கப்படுவதோடு தனியார் பாடசாலை மாணவர்களின் கல்வியும் பாதுகாக்கப்படும் எனலாம். 

9. நான்காவது தொழில்துறை புரட்சியினை உள்வாங்குதல்

கொவிட்-19 ஏற்கனவே அதன் தரத்தினை இழந்து கொண்டிருந்த ஒரு கல்வி முறையை சீர்குலைத்துவிட்டது என்று ஒரு சாரார் வாதிடுகின்றனர், குறிப்பாக வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் நான்காவது தொழில்துறை புரட்சியின் (4ஐசு). ஆசிரியர்கள் ஒத்துழைப்பு மற்றும் தொழில்முறை வளர்ச்சியில் ஈடுபடுவதற்கான வழிகள், மற்றும் சுயாதீனமான மாணவர் கற்றலை வளர்ப்பது மற்றும் 4ஐசு கோரும் பரந்த அளவிலான அறிவாற்றல், சமூக மற்றும் உணர்ச்சி திறன்களை உள்ளடக்கிய கற்பித்தல் மற்றும் கற்றல் முறைகளை உருவாக்குவதில் ஒன்லைன் கல்வி முன்னிலை வகிக்க முடியும். இலங்கையின் பாட உள்ளடக்கம் மற்றும் கனமான பரீட்சையை மையப்படுத்திய கல்வி முறையை மாற்றுவதற்கான முக்கியமான வாய்ப்பு இது.

முடிவுரை

மனிதனின் அத்தியாவசிய தேவைகளில் கல்வி காணப்படவில்லை என்றாலும் மனித வாழ்க்கை தீர்மானிப்பதாக இன்றை உலகில் கல்வி நிலைப்பெற்றுள்ளது எனலாம். பழையன கழிதளலும் புதியன புகுதலும் என்பது காலத்தின் கட்டாயமாகும். திண்ணைக்கல்வியிலிருந்து விடுபட்ட நாம் எவ்வாறு மேலைத்தேய வகுப்பறை கலவ்pமுறைக்கு பழக்கப்பட்டோம். பின்பு எவ்வாறு அரசு மற்றும் தனியார் என்று கல்வியை பிரித்தோம். அதனூடாக தேசிய கல்வி மற்றும் சர்வதேச பாடசாலை கல்வி மற்றும் பாடவிதானங்களை அனுமதித்தோம். அதுபோலவே தற்காலத்தில் ஏற்பட்டுள்ள புகோள மற்றும் உலகமயமாக்கலில் எந்த ஒரு நாடும் தனித்து செயற்படமுயடியாததாகியுள்ளது. 

அதற்கமைய எமது பாடவிதானங்களிலும் கல்வி செயற்பாடுகளிலும் கற்றல் மற்றும் கற்றபித்தல் செயற்பாடுகளிலும் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ளலாம். ஆனால் அவையனைத்தும் சமத்துவத்தின் அடிப்படையிலும் நாட்டின் பின்தங்கிய பிரதேச மாணவமாணவியரின் கனவை சிதைக்காது தேசியநலன் நலன்சார்ந்த கல்வி கொள்கைகளை பின்பற்றுவதே சாலச்சிறந்ததாகும். ஏனெனில் சமாதானத்திற்கான நோபால் பரிசு பெற்ற நெல்சன் மண்டேலா அவர்கள் ' உலகை மாற்றும் சிறந்த ஆயுதம் கல்வியேயாகும் ' என்று உரைத்துள்ளார்.

 இன்றய காலகட்டத்தில் மாணவர்களுக்கு கல்வியை இடைவிடாது வழங்க வேண்டுமெனில் அதற்கான மாற்றுவழி இந்த இணையமூலமான கற்றல் கற்பித்தல்தான். ஆனால் அவை ஏற்றத்தாழ்வின்றி எல்லோராலும் எமது இலவசக் கல்விபோல் வசதி செய்து கொடுக்கப்பட்டால்தான் 100 வீத அடைவை நாம் பெற்றுக்கொள்ளலாம். 

கல்வி என்பது பண்டமல்ல, காசு கொடுத்து வாங்கிக்கொள்ள, அது ஒரு அனுபவம், வாழ்க்கையை எதிர்நோக்கக் கற்றுக்கொள்ளும் திறன்வளர்க்கும் வழிமுறை. அது ஒருநாளும் இணையவழி வகுப்புகளிலிருந்து விளையாது.

உஷாத்துணை.


0 comments:

Post a Comment