ADS 468x60

13 June 2021

கொரோணாவின் கொடூரம் மாதவிடாய்க்குத் தெரியுமா?

இன்று பலர் பல 'சொல்லொண்ணாக்' கொடுமைகளை இந்த மூடிய காலத்தில் அனுபவித்த வருகின்றனர். அதை நீங்கள் அறியாமல் இல்லை. ஆனால் இந்த நெருக்கடி ஏழை பணக்காரர் எனப் பார்க்காமல் அதிகாரமுள்ளவர் அற்றவர் என நோக்காமல் சுழட்டிச் சுழட்டி அடிக்கின்றது.

இருந்தாலும் எதிலும் துவண்டுபோகக்கூடிய நலிவுற்று நசிந்து போகக்கூடிய மிக பின்தங்கிய சமுகம், மக்கள் கூட்டம் இலங்கையில் இருக்கின்றார்கள். அவர்களால் நீங்கள் ஒன்லைன் மூலம் வழங்குகின்ற கல்வியைப் பெறமுடியாது, அன்றாடத் தொழில் இன்றி அரைவயிரைக்கூட நிரப்பமுடியாது, வக்சினையும் வசதிவாய்பையும் பெற்று கொரோணாவுக்கு தப்பவும் முடியாது. 

சாதாரணமாக ஒரு கிராமத்தில் உள்ள குடும்பத்தில் இருப்பவர்கள், வலது குறைந்தவர்கள் மேலும் வறிய குடும்பத்தில் உள்ள பெண் பிள்ளைகள், மாதர்களின் நிலமையை அவர்களது இடத்தில் இருந்து சிந்தித்துப் பார்த்தால் தலை சுற்றி விடும். ஏனெனில், தொற்று வந்துவிட்டதே என இயற்கையாக பெண்களுக்கு வரும் மாதவிடாய் நின்றுவிடுவதில்லை. பெண்களுக்கு சானிடரி நாப்கின்கள் என்பது உணவு போல் அத்தியாவசியமானதொன்று அதுபோல் அது அவர்களின் அடிப்படை சுகாதாரத் தேவை, அவர்களது கௌரவம் மற்றும் கண்ணியம் சார்ந்தது அது ஒரு விடயமாகக்கொள்ளவேண்டியது மிக மிக அவசியம்.

பொதுவாக மாதவிடாய் நெருங்கும்போது, மனதளவிலும், உடல் அளவிலும் ஏற்படும் அதிர்ச்சிகள், குடும்பங்களில் பேசப்படுவதே இல்லை. இங்கேதான் நாம் அனைவரும் தோற்றுப்போயிருக்கிறோம். நம்முடைய உலகத்தின் நம்பிக்கைகளும், கட்டுப்பாடுகளும் மாதவிடாய், அதில் வெளியேறும் ரத்தம் ஆகியவற்றை அசுத்தம், புனிதம் இல்லாதது என்று முத்திரை குத்துகிறது. இதனால், எது குறித்துக் கட்டாயம் பேச வேண்டுமோ, அது குறித்துப் பேச மறுக்கிறோம், அவை ஒரு தேவையாகவே கணக்கிடப்படுவதில்லை என்பதனையே பின்வரும் தரவுகள் புடம்போட்டுக் காட்டுகின்றன.


இலங்கையில் எத்தனை குடும்பம் நப்கின் பாவிக்கின்றனர்? 

இந்த தொற்றுகாரணமாக நாடு முழுதாகவும் முடங்கியுள்ள காலத்தில் அது சார்ந்த உற்பத்திப் பொருட்களை அணுகமுடியாத நிலையில் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக இலங்கையில் 29 விகிதமான வீதமானவர்களே ஒரு மாதத்தில் அந்த பெண்களுக்கான நப்கின் உற்பத்திப்பொருட்களை கடையில் பெற்றுக்கொள்ளும் கொள்வனவு சக்தி, அறிவு ஆகியவற்றினைக் கொண்டுள்ளனர் என (LMRB) அறிக்கையும், இலங்கையில் உள்ள பெண்களில் 66 விதிதமானவர்கள் தமக்கு முதலாவது மாதவிடாய் ஏற்பட்ட முன்னர் அது பற்றிய அறிவையும், தேவையினையும் அறிந்திருக்கவில்லை என (UNICEF & WaterAID)  அறிக்கையும் தெரிவிக்கின்றது.

அதுமட்டுமல்லாது மக்களிடம் பணம் இருக்கின்றது என எடுத்துக்கொண்டாலும், கிராமப்புறங்களில் இருக்கும் பெண்கள் 10 அல்லத அதற்கு மேற்பட்ட கிலோமீற்றர்கள் சென்று பாமசிகளில்தான் இவற்றை பெற்றுக்கொள்ளும் நிலையில் இந்த போக்குவரத்துத் தடைக்காலத்தில் அவர்களால் எவ்வாறு அணுக முடியும் என்பது இன்னொரு பிரச்சினை. 

அதுபோல, இந்தியாவில் உள்ள 355 மில்லியன் மாதவிடாய் ஆகும் பெண்களில் 36 விகிதம் மட்டுமே நாப்கின்கள் பயன்படுத்துகின்றனர். மீதமுள்ளவர்கள் துணி, சாம்பல் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். மேலும் 23 மில்லியன் பெண்கள் பருவம் எய்தியவுடன் பள்ளியிலிருந்து நின்று விடுகிறார்கள். ஏன்ற அதிர்சித் தகவலை BBC தமிழ் கூறுகின்றது.

இதற்கு என்ன வழி உள்ளது.

இந்தியா போன்ற நாடுகளில் இதனை தயாரிக்கின்ற நிறுவனங்கள் கிராமப்புறங்களுக்கு பரோபகாரத்துடன் விநியோகிப்பதுபோல் இங்கும்செய்யலாம்.

தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ நிறுவனங்கள் இதற்கான முக்கியத்துவத்தினை இக்காலத்திலாவது கையில் எடுக்கலாம்.

அரசாங்கம், வழங்குகின்ற நிவாரணப் பொதிகளுடன் இந்த நப்கின் சேர்த்துக்கொள்ளுவதனை கட்டாயமாக்க வேண்டும்.

சமுகத்தில், பாடசாலையில் இவைபற்றிய தெழிவினை மாணவிகளிடையே பெண் ஆசிரியைகள் மூலம் தனியாகத் தெழிவுபடுத்துவதோடு, அரசாங்கம் வசதி குறைந்;த குடும்பங்களுக்கு அதன் பெண் அங்கத்துவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் நப்கினை இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ வழங்கி உதவுவதனை அத்தியாவசியமாக்குவதும், ஆரோக்கியமான மற்றும் எதையும் சாதிக்கும் உற்பத்தித்திறனுடைய ஒரு சமுகத்தை நாம் கொண்டிருப்பதற்கான அடித்தளமாக அமையும்.


0 comments:

Post a Comment