ADS 468x60

11 July 2021

நல்ல சிந்தனைகளே வெற்றிக்குக் காரணம்

நாம் இன்று புதிய மாற்றமடைந்த உலகில் காலடி எடுத்து வைத்திருக்கின்றோம். அதற்கு தகுந்தாற்போல் நாம் மாறாவிட்டால் இந்த உலகின் கடைசி இருக்கையிலே தான் இருக்கநேரும். நாம்  புதிய புதிய வழிமுறைகளை பரீட்சித்து முன்னேற வேண்டும். அது காலத்தின்தேவை. அதனால் இன்றைய உலகம் வர்த்தகத்தினை அதுவும் இன்னோவேற்ரிவ் விசினஸினை முன்னிலைப்படுத்தி அதற்கான கல்வியை திறனை வழங்கி வருகின்றது.

சரி இதற்காக, விரிவான சிந்தனை, தெளிவான சிந்தனை, தொலைநோக்கு சிந்தனை என நிறைய முறை படித்திருப்பீர்கள். அது என்ன தெளிவான சிந்தனை? திட்டமிட்ட சிந்தனை?

நமக்கு பயிற்சியுடன் கூடிய, முயற்சியுடன் கூடிய நல்ல இலக்குகளை அடைவதற்கான அனைத்து முயற்சிகளுமே அல்லது நல்ல சிந்தனைகளுமே, தெளிவான சிந்தனைகள்தான்.

உண்மையில், தெளிவான சிந்தனையாளர்கள், எந்தப் பொருளை எப்படி விற்க வேண்டும்? யாரிடம் விற்க்க வேண்டும்? எப்படி அதிக விலைக்கு விற்க வேண்டும்? என அனைத்து திட்டமிடல்களையும் சரியாக தேர்ந்தெடுக்கிறார்கள், உழைக்கிறார்கள், எண்ணங்களில் தெளிவடைகின்றார்கள், பின்னர் வெற்றியடைகிறார்கள்.

கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டியது 'நீங்கள் எவ்வளவு தூரம் ஓடி வருகிறீர்களோ? அவ்வளவு தூரம் தடைகளை தாண்டுவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம்'. இங்கே நீங்கள் எவ்வளவு தூரம் ஓடி வருகிறீர்கள் என்பது முயற்சியை மட்டும் குறிப்பதல்ல. லட்சியத்தை அடைவதற்கான முயற்சிகளையும் திட்டங்களையும் குறிக்கிறது.

ஆகவே வெற்றியாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசமே இந்தத் திட்டமிடுதல்தான்.

வெறும் சோளம்குலை விளைவிப்பவன் குறைந்த முதலீட்டை அடைகிறான். அதே சோளத்தை பொப்கோணாக மாற்ற தெரிந்தவன் பணக்காரன் ஆகிறான்.

பத்து ரூபாய் ரொட்டியையும், ஜந்து ரூபாய் சம்பலையும் தனித்தனியாக விற்பவன் குறைந்த பலனை அடைகிறான். அதனோடு சில வெங்காயம் தக்காளி சேர்த்து பீட்சா , வேர்கர் ஆக விற்பவன் முதலாளி ஆகிறான்.

வெறும் அரிசியை விற்பவன் குறைந்த செல்வத்தை பெறுகிறான், அதே அரிசியை அரிசிமாவாக்கி, தோசை மாவாக்கி, தோசையாக விற்பவன் முதலாளி ஆகிறான்.

இந்த பிரபஞ்சத்தில் எல்லோருக்கும் சமமான வாழிடம்தான் படைக்கப்பட்டிருக்கிறது. அதை நீங்கள் எவ்வளவு தைரியமாகவும் திறமையாகவும் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்துதான் தங்களின் எண்ணங்களின் வெற்றி நிர்ணயம் செய்யப்படுகிறது.

மந்திரத்தால் மட்டும் மாம்பழம் பழுக்காது கடின உழைப்பும் தேவை.

நீங்கள் கடைசி வரை வெறும் முறிச்ச சோளம் விற்பவராகவே இருக்கப் போகிறீர்களா?

கடைசிவரை ரொட்டியும் சம்பலையும் தனித்தனியாகவே விற்க போகிறீர்களா? முடிவு உங்கள் கைகளிலே!

100 ரூபாய்க்கு தோசை மாவை வாங்கி, ஒரு தோசை 100 ரூபாய்க்கு விற்க தெரிந்தவனே முதலாளி ஆகிறான் என்பதை ஒருபோதும் மறக்காதீர்கள்.

இப்போது புரிந்திருக்கும் தெளிவான சிந்தனை என்றால் என்ன? சரியான திட்டமிடுதல் என்றால் என்ன? சரியான இலக்குகளை எண்ணங்களால் நிரப்புவது என்றால் என்ன? என்று.

இந்த சூட்சுமத்தைப் நீங்கள் புரிந்து கொண்டால்? வெற்றிகள் உங்களைத் தேடி வரும். அப்படி வெற்றிகள் உங்களைத் தேடி வர வேண்டுமானால் நல்ல சிந்தனைகளை விதைத்துக் கொள்ளுங்கள்.

வெற்றி உனதே...

 

0 comments:

Post a Comment