ADS 468x60

15 November 2022

நேற்றய வட்ஜெட் யாரைத் திருப்திப்படுத்தியுள்ளது?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின்படி, 2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை ரூ. 2,404 பில்லியன்.

அடுத்த ஆண்டுக்கான மொத்த செலவு ரூ. 5,819 பில்லியன் (19.2%) மற்றும் மொத்த வருவாய் மற்றும் மானியங்கள் ரூ. 3,415 பில்லியன் (11.3%).

அரசு தனது வருவாயை பெருக்குவது போல், பொருளாதாரத்தின் முழுச் சுமையையும் பொதுத்துறையே சுமக்க வேண்டும் என்பது நவீன உலகத்துக்கு ஒத்துப்போகாத தோல்வி அம்சமாகும்.

22 மில்லியன் மக்களைக் கொண்ட நாடு இந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியில் மூழ்கியது, கோவிட்-19 தொற்றுநோயால் சுற்றுலா வருவாயை இழந்தது மற்றும் பல ஆண்டுகளாக பொருளாதார தவறான நிர்வாகம் கடுமையான டொலர் பற்றாக்குறைக்கு வழிவகுத்தது.

இந்த நிலையில் நேற்று எழுபத்தி ஏழாவது வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பட்ஜெட் விவாதம் இன்னும் தொடங்கவில்லை என்றாலும், ஒரு முக்கிய காரணி குறித்து பொருளாதார நிபுணர்கள் மத்தியில் விவாதம் நடந்து வருகிறது. சவாலான விடயங்கள்; மற்றும் நேர்மறையான அம்சங்களை அந்த உரையாடலில் இருந்து நாம் பிரித்தெடுக்க முடியும். எல்லோரும் பேசும் முக்கிய சவால்களில் ஒன்று நிலையான பொருளாதாரத்தை பராமரிக்க பொருளாதார கொள்கைகளை தயாரிப்பதற்கான முயற்சியாகும். அடுத்த சவால், சாதாரண மக்களின் வாழ்க்கை நிலையை, அதாவது மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்கும் முயற்சி. இவை இரண்டும் மிகவும் சிக்கலான செயல்முறைகளாக பார்க்கப்படுகின்றது. 

இன்று மக்கள் இருக்கும் நிலையில் அவர்கள் பார்வையில் பட்ஜெட் முன்மொழிவில் இருந்து அவர்களுக்கான நிவாரணப் பொதி எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் மக்கள் அகப்பட்டு வாடியுள்ள நிலையில் அவர்களின் எதிர்பார்ப்பு நியாயமானது என்றே கூற வேண்டும். 

மறுபுறம், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் சக்திவாய்ந்த நாடுகளை திருப்திப்படுத்தும் பட்ஜெட் ஒன்றும் முன்வைக்கப்பட வேண்டும். இந்த தருணத்தில் சர்வதேச பொருளாதார ஆதரவை எதிர்பார்க்கிறோம் என்பதே முக்கிய காரணம். அந்த ஆதரவின்றி நாடு மீள முடியாது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற வகையில் இந்த சவாலை எவ்வாறு சமாளிப்பார் என்பதிலேயே நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என்பதை சந்தேகமின்றி கூற வேண்டும்.

நிதியமைச்சரின் கூற்றுப்படி, புதிய உலகத்துடன் இணக்கமான புதிய பொருளாதாரக் கொள்கைகள் இல்லாமல் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது. பொருளாதார வாதமாக, இது மிகவும் சரியானது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் நமது பாரம்பரிய பொருளாதாரக் கட்டமைப்பே என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். நாம் அதிகமாக கடன் வாங்குவதும் வட்டி செலுத்துவதும் பொருளாதாரத்தில் தாங்க முடியாத சுமையாகும். ஓவ்வொரு ஆண்டும் பொதுச் செலவு அதிகரிப்பானது பொருளாதாரத்தில் மற்றொரு சுமையாகவே உள்ளது. எதிர்மறையான விடயங்கள்;, அரசாங்கத்தின் வருவாய் குறைவது மற்றும் பொருளாதாரத்தின் முழு சுமையும் பொதுத்துறைக்கு மாற்றப்படுவது ஆகியன மக்களை எழுந்து நிற்கமுடியாமல் ஆக்கியுள்ளது. எனவே அரசு தனது வருவாயை பெருக்குவது போல், பொருளாதாரத்தின் முழுச் சுமையையும் பொதுத்துறையே சுமக்க வேண்டும் என்பது நவீன உலகத்துக்கு ஒத்துப்போகாத தோல்வி அம்சமாகும்.

இந்த ஆண்டு, பட்ஜெட் கொள்கைகள் மூலம் தனியார் துறை அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டின் தேசிய பொருளாதாரத்தின் உந்து சக்தியாக தனியார் துறை செயல்படுகின்றது. இதன் மூலம் இளைஞர்கள் அதிக வருமானம் பெறுவார்கள் என நம்பப்படுகிறது. சீனா ஒரு சோசலிச நாடாக கருதப்பட்டாலும், தனியார் துறைக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, பொருளாதாரம் விரைவான வளர்ச்சியை எட்டியுள்ளது. சீன அரசாங்கம் பொருளாதாரத்தின் திட்டமிடுபவர் மற்றும் கட்டுப்பாட்டாளராக மாறியுள்ளது. இது வெற்றிகரமான முறை என்பதை சீனா நிரூபித்துள்ளது. இன்று, உலகின் பொருளாதார வல்லரசான அமெரிக்காவிற்கு சவால் விடும் இடத்தில் சீனா உள்ளது. கோவிட் உலக தொற்றுநோய்களின் போது கூட சீனப் பொருளாதாரம் வீழ்ச்சியடையவில்லை என்பது நடக்கு முன்னே உள்ள பாடமாகும்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவை இலங்கையின் நிதி ஸ்திரத்தன்மை தொடர்பான பதின்மூன்று முக்கிய காரணிகளை ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளன. நாம் நிபந்தனைகளை கருத்தில் கொண்டோமோ இல்லையோ, அதற்கேற்ப செயல்பட வேண்டும். எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும், சர்வதேச ஆதரவின்றி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது. 

பொருளாதார மறுசீரமைப்பு என்ற சொல் இங்கு மிகவும் முக்கியமானது. இது பல அம்சங்களைக் கொண்டுள்ளது. கடன் மறுசீரமைப்பு மற்றும் நஷ;டத்தில் இயங்கும் பொது நிறுவனங்களின் மறுசீரமைப்பு அவற்றில் முக்கியமானது. வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பது ஒரு சிக்கலான செயல்முறையாகும். ஆனால் நாம் அதை செய்ய வேண்டும். நஷ;டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்களின் விடயத்திலும் இதே முடிவை எடுக்க வேண்டும்.

மக்களின் பார்வையில், பட்ஜெட்டின் முதன்மைக் கவனம் சமூகப் பாதுகாப்பில் இருப்பதாகத் தெரிகிறது. அதற்கான அதிகபட்ச ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். நாட்டில் உள்ள மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 68 இலட்சம் எனவும், அதில் 40 இலட்சம் குடும்பங்கள் ஏதாவது ஒருவகையில் நிவாரணம் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக வரவு செலவுத் திட்ட ஆவணங்கள் தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்தியிருந்தன, ஆனால் இம்முறை அது மாறியுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடியில் மக்களை வாழ வைப்பதும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதும் அரசாங்கத்திற்கு பெரும் சவாலாக உள்ளது. இரண்டு கேள்விகளுக்கும் யதார்த்தமான தீர்வுகள் தேவை.

வெளிநாட்டுக் கடனைப் பெற்று வட்டியுடன் செலுத்துவதென்பது நாம் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் ஒரு பாரதூரமான பொருளாதாரப் பிரச்சினையாகும். ஆனால் அது படிப்படியாக தீர்க்கப்பட வேண்டும். பெற்ற கடனை முதலீட்டுக்கு பயன்படுத்தவும், கடன் மற்றும் வட்டியை செலுத்தவும் முறையான திட்டம் இருக்க வேண்டும். அதேபோல், கடன் மற்றும் உதவியால் மட்டும் ஒரு நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


0 comments:

Post a Comment