ADS 468x60

06 November 2022

அரசு மக்கள் மீது பாரத்தினை போடுதல் பொருளாதார நெருக்கடிக்குப் பயன்தராது

அரசின் திட்டங்கள் சிலவற்றால் பொருட்களின் விலைகள் படிப்படியாகக் குறைந்தாலும், பொதுமக்களின், குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வயிற்றில் அடிப்பது ஒருவர் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இன்னும் நீடிககின்றது. பிள்ளைகளுக்காக பால் மாவினைப் பெற்றுக் கொள்வதற்காகப் செல்லும் பெற்றோர் வெறுங்கையுடன் வீடு திரும்புவது முதல், மண்ணெண்ணெய் விலையும் தாறுமாறாக உயர்ந்துவிட்டதால், எரிபொருள் வரிசையில் நீண்டநேரம் காத்திருந்து ஏற்பட்ட மரணங்கள், எரிவாயுவுக்காக நீண்ட வரிசையில் நிற்பது போன்றவற்றைப் பார்த்தோம். 

இந்த நிலையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு இன்னும் மீண்டு வருகிறது, இருந்தாலும் மேலும் உணவுப் பணவீக்கம் 70-75 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் இன்றும் அன்றாடம் வாழ்கைக்காகப் ஒரு நாளைக்கு ஒரு உணவுடன் போராடிக் கொண்டிருக்கின்றன.

அதுபோல் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அண்மையில் ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது, நாட்டில் போசாக்குக் குறைபாடு 12 வீதமாக இருந்து இன்று 14 வீதமாக அதிகரித்துள்ளது.

இந்தப் பின்னணியில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாமல் பல தற்கொலை சம்பவங்களும் நடந்துள்ளன. இந்த உயிர் இழப்புக்கு யாரைக் குறை கூறுவது, வரிசையில் நின்று இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எவ்வளவு இழப்பீடு வழங்கினால், அன்புக்குரியவரின் இழப்பை ஈடுகட்ட போதுமான இழப்பீடு கிடைக்கும்? என்பதை நாம் நினைத்துப் பார்க்கவேண்டும்.

இதைத் தொடர்ந்து அத்தியாவசிய மருந்துப் பொருட்களில் தட்டுப்பாடு ஏற்பட்டது, அதே நேரத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை குறித்து முரண்பாடான அறிக்கைகளை வெளியிட்டு நோயாளிகளை தவறாக வழிநடத்தி மேலும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கினர்.

கடந்த சில வாரங்களாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பொதுவாக வெளியிடப்பட்ட மற்றும் பகிரப்பட்ட உள்ளடக்கத்தைப் பார்க்கும்போது, சில பொருட்களின் விலை குறைவதை நாம் அவதானிக்க முடியும், ஆனால் இதுவே போதுமானதாக உள்ளதா மற்றும் அது போதுமான அளவு நுகர்வோருக்கு நிறைவேற்றப்பட்டதா? 

உதாரணமாக, கோதுமை மாவின் விலை வெகுவாகக் குறைந்துள்ள போதிலும், பல குடும்பங்கள் தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் பேக்கரிப் பொருட்களில் மட்டுமே உயிர்வாழ்வதால், விலையில் ஏற்பட்டுள்ள அதிகத் தொகையைக் கருத்தில் கொண்டு பல குடும்பங்கள் அதனைப் பெறாமல் இருக்கின்றனர்;, அதுபோல் அதன் பலன் முற்றிலும் தகுதியானவர்களுக்கு மாற்றப்படவில்லை. 

பஸ் கட்டணங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளின் விலைகள் குறையாததால் எரிபொருள் விலை குறைப்பின் பிரயோசனம் பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை என்பது குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மட்டுமன்றி நடுத்தர வருமானம் பெறும் பயணிகளுக்கும் அதிக சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. . மேலும், பால் மாவின் விலையில் தொடர்ச்சியான அதிகரிப்பு காரணமாக பல குடும்பங்கள் பால் மா பாவனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியுள்ளது.

கடந்த ஒக்டோபர் 19ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த பத்திரிக்கையின் பிரகாரம் சந்தையில் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்த போதிலும், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் இன்னும் கிராமப் புறங்களில் குறைக்கப்படவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே நாம் இன்னும் கடினமான காலங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவே, பொருளாதார நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பல நிவாரணத் திட்டங்கள் வழங்கப்பட வேண்டும்.

 அதிகாரிகளும், அதிகாரத்தில் இருப்பவர்களும் மிக முக்கியமாக, தவறான நிர்வாகமும், குறுகிய நோக்கம் கொண்ட கொள்கைகளுமே தற்போதைய நெருக்கடிக்குக் காரணம் என்பதை ஒப்புக்கொண்டு, நெருக்கடிக்குத் தீர்வு காண்பதில், பொதுமக்களின் சிரமங்களைத் தீர்க்க நீண்ட காலத் தீர்வுகளை உறுதி செய்ய வேண்டும். மேலும், நிவாரணத் திட்டங்களும் குறுகிய காலத்திற்கும், படிப்படியாக மறக்கப்படாமலும், பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்கும் வரை வழங்கப்பட வேண்டும்.


0 comments:

Post a Comment