ADS 468x60

20 February 2023

'கல்விக்கொரு விளக்கு' புதிய பாதைக்கு ஒளிகொடுத்த மாணிக்கம் மகேந்திரன்

'கல்விக்கொரு விளக்கு' எனும் தொனிப்பொருளில் தேத்தாத்தீவு சிவகலை வித்தியாலயத்தில் தெரிவுசெய்யப்பட்ட 50 மாணவர்களுக்கான கற்றல் ஆற்றலை மற்றும் ஆர்வத்தினை மேம்படுத்துவதனை நோக்கமாகக்கொண்டு கல்வி ஊக்குவிப்பு கற்றல் உபகரணங்கள்; வழங்கும் திட்டம் 18.02.2023 அன்று பாடசாலை அதிபர் திருமதி சுதாகர் சகுந்தலாதேவியின் தலைமையில் இனிதே ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த திட்டம் கனடாவில் வசிக்கும் தேத்தாத்தீவைப் பிறப்பிடமாகக்கொண்ட சமுக ஆர்வலர், தமிழ் பற்றாளர், சதா இந்த மண்ணை மனதார நேசிக்கும் மாணிக்கம் மகேந்திரன் அவர்களிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த உதவித்திட்டம் ஆரம்பித்து வழங்கி வைக்கப்பட்டது. 

இந்த நிகழ்வில்; கிராமத்தினையும் இந்த பிரதேசத்தினையும் நேசிக்கும் தொண்டுள்ளம் கொண்ட கலாநிதி திருமதி சுரேஸ் ஜெயப்பிரபா, கலாநிதி கணேஸ் சுரேஸ், திருமதி அமலநாதன் உட்பட பல ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள், ஆலய தலைவர்கள், நலன்விரும்பிகள், பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு இந்தத்திட்டத்தினை சிறப்பித்ததுடன் அதனை நன்றியுணர்வோடு பாராட்டினர்.

18 February 2023

மின்சாரக் கள்வர்களை முதலில் பிடியுங்கோ! இந்த சூத்திரம் சாதாரண மக்களின் தலையில் விழுந்த இடி.

விஞ்ஞான முறைப்படி ஒளி முதலில் வருகிறது. அதன் பிறகுதான் ஒலி வருகிறது. இது ஒரு மின்னல் போன்றது. இவை இரண்டும் ஒன்றாக நடந்தாலும் தனித்தனியாக பார்க்கிறோம், கேட்கிறோம். ஆனால் இந்த ஆக்கம் ஒளி அல்லது ஒலி பற்றியது அல்ல. ஒட்டுமொத்த மக்களும் எதிர்கொள்ளும் மின்தடை பற்றியது.

இன்று நம் அனைவரும் அறிந்தளவு மின் கட்டணம் 66 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கான பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளது. 

புதிய கட்டண திருத்தத்தின்படி யுனிற் 0-30க்கு இடையில் 8 ரூபாவாக இருந்த மின்சார அலகின் விலை 30 ரூபாவாகவும், 31-60 ரூபாவிற்கு இடையில் 10 ரூபாயிலிருந்து 37 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது. 61 முதல் 90 யூனிட் வரை, ஒரு யூனிட் பதினாறில் இருந்து 42 ரூபாயாக அதிகரித்தது. 120க்கு மேல் பயன்படுத்துவோருக்கு யூனிட் கட்டணத்தில் மாற்றம் இல்லை. 

17 February 2023

நாடு எவ்வளவு சுத்தமாக இருந்தாலும் மக்களின் எண்ணங்கள் சுத்தமாக இல்லை

நாம் இன்று பல பற்றி எரியும் பிரச்சினைகளைப் பேசுகின்றோம். இந்த நாட்டில் உள்ள முக்கிய பிரச்சனைதான் என்ன? மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதா? மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு உள்ளதா? மின்கட்டணம் அதிகளவில் ஏறுகிறதா? தனிநபர் வரியை எக்கச்சக்கமாக உயர்த்தியுள்ளதா? இல்லை. இந்த நாட்டில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் பிற்போடப்பட்ட விடயம் மிக முக்கியமான பிரச்சினையாக இப்போ இருக்கின்றது. 

வாக்களிப்பு நடத்தப்பட்டால் மக்களுக்கான ஏனைய வசதிகள் வழங்கப்பட முடியாது முக்கியமாக பசிக்கின்ற வயிறறுக்கு உணவு இருக்காது. ஆனால் ஜனநாயகம் பாதுகாக்கப்படலாம். வாக்குகள் இல்லாவிட்டாலும் ஜனநாயகம் பாதிக்கப்படாது. ஏனெனில் உள்ளூராட்சி மன்ற வாக்கெடுப்பு மூலம் அரசாங்கத்தின் அதிகாரத்தை மாற்ற முடியாது என்பதே இதற்குக் காரணம். ஆனால் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்த 10 பில்லியன் ரூபா செலவாகிறது மேலும் அந்த செலவினத்தால் பொருளாதாரத்திற்கு ஏற்படும் சேதம் மிகவும் கடுமையானதாக இருக்கும் என்கின்றனர்.