ADS 468x60

23 April 2023

இன்று மக்கள் மத்தியில் இருக்கும் அதிருப்தி

சுதந்திரத்திற்குப் பிறகு நமது நாடு எதிர்கொண்ட மிக மோசமான பொருளாதார நெருக்கடியை அண்மைக்காலமாக நம் நாட்டு மக்கள் சந்திக்க நேர்ந்தது. எரிவாயு வரிசைகள், எரிபொருள் வரிசைகள் அதன் விளைவுகளாகும், மேலும், இதனால் மணிக்கணக்கில் நம் நாட்டு மக்கள் இருளில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பொருட்களின் விலை உயர்வால், மக்களின் கொள்வனவு செய்யும் திறன் குறைந்துள்ளது. இவற்றின் உடனடி விளைவாக ஊட்டச்சத்து குறைபாடு அல்லது ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் பிறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஒரு நாடாக பார்க்கும்பொழுது இது மிகவும் மோசமான நிலையாகும்.

எமது நாடு இதுவரை உலக நாடுகளிடம் வாங்கிய கடனுக்கான தவணையை மாத்திரமாவது கட்ட முடியாத அளவுக்கு நமது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் தான் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து மீள் கடன் பெறுதல், அதுபோல கடன் மறுசீரமைப்பு போன்ற விடயங்களுக்கு நாம் செல்ல வேண்டியுள்ளது.

21 April 2023

இனிய நோன்புப்பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

அனைத்து சகோதரர்களுக்கும் இனிய நோன்புப்பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

நோன்பிருந்தால் உள நோய்கள் எல்லாம்;

உருண்டோடிடும் பாரினிலே- நலம்

நாடிடும்; வாழ்வினில் தேடிடும் நன்மை

வந்து கூடிடுமே!


பொல்லாதவைகள் எல்லாம் போகும்

பொறுமையாய் இருந்தால்

அல்லா ஒருத்தன் அனைத்தும் தருவான்

அன்பு செலுத்தி விட்டால்


ஈகை எளிதாக இருக்கும் பொருள் கொண்டு 

ஈன்று கொடுத்துவிட்டால்

வாகை உனதாக வாழ்வில் முன்னேறி

வாழ வைத்திடுவார் அல்லா!

வழிகள் காட்டிடுவார்!

11 April 2023

வசந்தகால பொருளாதார மாற்றம் மகிழ்சியைக் கொண்டுவருமா?

இது வசந்த காலம். இரண்டு ஆண்டுகளாக, கோவிட் தொற்றுநோயால் வசந்த காலம் உலர்ந்து பயங்கரமான பருவமாக மாறியது. ஆதற்கு அடுத்த ஆண்டு வசந்தம் போராட்டத்தின் முகத்தில் கரைந்தது. அந்த வகையில் 03 வருடங்களின் பின்னர் எமது நாட்டிற்கு வசந்த காலம் வருகின்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வரும் இளவேனில் காலத்தை பொது மக்கள் ஏற்றுக்கொள்ள முடியுமா?

எமது நாட்டில் வசந்த காலத்தின் உச்சம் தமிழ்ப் புத்தாண்டு விடியலுடன் குறிக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் ஈஸ்டர் மற்று
ம் ரமலான் மத பண்டிகைகளும் அனுசரிக்கப்படுகின்றன. இந்த கலாச்சார மற்றும் மத விழாக்கள் அனைத்தையும் இதயத்தில் மகிழ்ச்சியுடன் கொண்டாட, மக்கள் தங்கள் கைகளில் இருந்து பணத்தை செலவிட வேண்டும். அத்தியாவசியப் பொருள்களை மலிவு விலையில் தட்டுப்பாடு இல்லாமல் வாங்க வேண்டும். இந்த அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யாமல் மக்கள் வசந்த காலத்தின் அரவணைப்பை அனுபவிக்கவோ அல்லது பண்டிகைக் காலத்தை அனுபவிக்கவோ முடியுமா?

02 April 2023

கூடினால் புரியும் வியாபாரிகளுக்கு குறைந்தால் புரிவதில்லை.

அண்மையில் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாயப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி உக்கிரமடைந்த போது, இலங்கையில் கொஹிலா எனும் காட்டுக்கிழங்கு நுகர்வு 40% வீதம் அதிகரித்துள்ளது. செப்டம்பர் 2012 முதல் 2022 இறுதி வரை, இந்த நாட்டில் உணவுப் பணவீக்கம் 95% வீதம் வரை உயர்ந்திருந்தது. இது இலங்கை அனுபவித்த மிக மோசமான பொருளாதார நெருக்கடியாகும். 

இக்காலத்தில் இந்நாட்டு மக்கள் கையில் கிடைக்கும் எந்தக் காய்கறியையும் உண்டனர்;. அந்த நேரத்தில், பீன்ஸ், கேரட், பீற்றுட், லீக்ஸ் போன்ற காய்கறிகளின் நுகர்வு சுமார் 30மூ குறைந்திருந்தது. அப்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடும் கோபத்தில் இருந்தனர். ஒருவேளை கோஹிலாவின் நுகர்வு அந்த கோபத்தை அடக்க முடிந்ததா? கோஹிலா நார்ச்சத்து நிறைந்த காய்கறி, இது வயிற்றுக்கு மிகவும் நல்லது மற்றும் மூல நோய்க்கு மிகவும் நல்லது. அந்த நிலை ஓரளவு மாறி இன்று இந்த நாட்டில் உணவு நெருக்கடி ஓரளவுக்கு குறைந்துள்ளது.

முகமூடி அணிந்த நீதி: இலங்கையின் சிறுபான்மையினர் கதை

இலங்கை ஒரு பன்முகத்தன்மை மிக்க நாடு, இங்கு பல்வேறு இனங்கள், மதங்கள் மற்றும் பண்பாடுகள் வாழுகின்றன. ஆனால், இந்த பன்முகத்தன்மையின் மத்தியில், சிறுபான்மையினர் மீதான பாகுபாடு மற்றும் வன்முறை என்பது ஒரு நீண்டகால பிரச்சனையாக இருந்து வருகிறது.

இந்த பிரச்சனையின் அடிப்படைக் காரணம், இலங்கையில் ஒரு ஒருங்கிணைந்த தேசிய அடையாளம் இல்லாதது ஆகும். இந்த காரணத்தால், சிறுபான்மையினர் பெரும்பாலும் பெரும்பான்மையினரின் ஆதிக்கத்திற்கும் பாகுபாட்டிற்கும் ஆளாகிறார்கள்.

01 April 2023

இலங்கை 2023இல் மகிழ்சியாக உள்ள நாடுகளின் பட்டியலில் 112 வது இடம்.

நாம் அனைவரும் மகிழ்சியாக வாழ ஆசைப்படுவதில்லையா? மகிழ்ச்சி என்றால் என்ன? உலகில் பல்வேறு பொருட்களின் அளவை அளவிடுவதற்கான குறியீடுகள் உள்ளன. சில குறிகாட்டிகள் ஒரு நாட்டின் உணவுப் பாதுகாப்பை அளவிடுகின்றன. மற்றொரு நாட்டில் ஊட்டச்சத்து குறைபாட்டை அளவிட குறிகாட்டிகள் உள்ளன. உணவு கழிவுகள் தொடர்பான குறிகாட்டிகளும் உள்ளன. பணவீக்கம் மற்றும் வறுமை போன்ற பொருளாதார போக்குகளை அளவிடுவதற்கான குறிகாட்டிகளும் உள்ளன.