ADS 468x60

28 May 2023

நோய்களின் வளர்பிடமாகும் இலங்கை: எதனால் நடக்கிறது

 விவசாய கலாச்சாரம் கொண்ட நாடுகளில், மழைக்காலத்தை அதிர்ஷ்டமான காலமாக மக்கள் பொதுவாக கருதுகின்றார்கள். பொதுவாக வறண்ட காலத்திற்குப் பிறகு மழைக்காலம் வரும். வறட்சிக்கு பின், மழைபொழிந்து மழைநீர் தேங்;கி விவசாயத்திற்கு பயன்படுத்தப்பத்தி வருகின்றோம். அந்த செழிப்பான விவசாயத்தின் மூலம் விளையும் பயிர்களின் விளைச்சல் மக்களுடைய பசியைத் தீர்த்து வைக்கின்றது.

ஆகவே மக்களின் பசியை ஒழிப்பது ஒன்றுதான் மனித வாழ்க்கையை பலப்படுத்துகிறது. அதனடிப்படையில் வலிமையான மனித வாழ்க்கை ஒரு நாட்டின் பொருளாதாரத்தை இயக்குகிறது. ஒழுங்காக நிர்வகிக்கப்படும் பொருளாதாரம் கொண்ட நாடு வளமான நாடாக மிளிர்கின்றது. 

ஒரு விவசாய கலாச்சாரத்தின் பொருளாதார மற்றும் சமூக விளக்கம் தான் மேலே குறிப்பிட்டபடி உருவாகிறது. அந்தவகையில் இலங்கையும் ஒரு விவசாய நாடாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அப்படியானால், மேலே குறிப்பிட்டபடி மழையின் பலன்கள் நம்மை நல்ல முறையில் வந்துசேர வேண்டும். 

ஆனால், நமது கர்ம சக்திகள் இந்த நாட்டில் மழை பெய்த பிறகு, அது ஒரு செழிப்புக் காலம் அல்ல, தொற்றுநோய் என்ற அளவுக்கு மோசமாகிவிட்டது. 

இன்று பருவமழையை பொறுத்தமட்டில் வங்காள விரிகுடாவை பொருத்தவரை மழை பெய்கிறது தான். வங்காள விரிகுடாவில் உருவாகி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடிக்கடி மழை பெய்து வருகிறது. 

ஆனால் மழை பெய்யும் போது இருக்கும் அந்த நன்மைகள் மழை முடிந்ததும் இருக்காது. இன்றைய மழைகாலத்தில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இந்த நாட்டில் மூன்று மடங்கு சுகாதார ஆபத்து உள்ளது. இந்த மழையின் பின்னர் டெங்கு தொற்று மிக மோசமாக தலை தூக்கியுள்ளதுடன் அண்மைய மாதத்தில் மாத்திரம் 25 டெங்கு நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர். 

டெங்கு மட்டுமின்றி எலிக்காய்ச்சல், கால்நடைத் தொல்லை போன்றவையும் அதிகம் உருவாகியுள்ளது. 100 வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு தனித்துவமான சில பாரம்பரிய நோய்கள் இருந்தன. மிகவும் ஆபத்தான நோய் மலேரியா. 

மலேரியா என்பது இந்நாட்டு விவசாய மக்களுடன் இணைந்து வாழ்ந்த ஒரு தொற்றுநோய். இது காலையில் ஏற்படாது. பகலில் கூட வளராது. காலை முதல் இரவு வரை உழைத்த விவசாயி, தண்ணீர் குடிக்க வீட்டிற்கு வந்தவுடன், மலேரியா காய்ச்சல் வந்து நோயாளிக்கு நடுக்கம் ஏற்படுகிறது. 

அடுத்து, அவரது உடல் முழுவதும் மிகவும் வெப்பமாகிறது. அதுமுதல் காய்சல்; ஏறி விழுந்து கண்விழிக்கும் வரை அவனைத் துன்புறுத்துகிறது. காலையில் அவர் வயலுக்குத் திரும்ப வேண்டும். இருப்பினும் ஒவ்வொரு இரவு நேரத்திலும், முந்தைய இரவின் நிலைமை மீண்டும் நிகழ்கிறது. 

நமது மக்கள் வளமைபோல, இஞ்சி, கொத்தமல்லி, வெட்டிவேர், கசாயம்; போன்ற மருந்துகளால் எளிய நிவாரணம் கிடைக்கும் வகையில் அவர்கள் மருந்துக்களை எடுத்துக்கொண்டாலும், நோய் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்கள் ஆகும் போது, மலேரியா காய்ச்சலின் ஒவ்வொரு இரவும், நோயாளியின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் சிதைந்துவிடும். 

மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஒரு காலைப்பொழுதில், நோயாளி இறந்தார். அல்லது பகலில் வயலின் நடுவில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனச் செய்திகள் வந்தன. ஆனால் அந்த விவசாயிகளின் நிரந்தர எதிரியான மலேரியா இன்று இல்லை, ஆனால் அதற்கு மாறாக பரவும்  எலிக்காய்ச்சல் மிகவும் ஆபத்தானது. இதுவும் எப்போதும் மரணத்திற்கு வழிவகுக்கும் ஒரு நோய்.

எமது நாட்டில் கடந்த மே மாதம் 30ஆம் திகதி வரையில் 38,639 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களில் 8630 பேர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். கம்பஹா இலங்கையின் மேற்கு மாகாணத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் ஆகும். மக்கள் தொகை அடர்த்தி காரணமாக, கம்பஹா மாவட்டத்தில் தொற்றுநோய்கள் மற்றும் வதந்திகள் இரண்டும் அதிகமாக உள்ளன. 

மக்கள் தொகை அடர்த்தி சில இடங்களில் கடுமையான உடல்நலப் பிரச்சனையாக உள்ளது. மக்கள் தொகை அடர்த்தி அதிகரிக்க, மாசு அதிகரிக்கிறது. தொற்று அதிகரிக்கிறது. சுத்தமான தண்ணீர் இல்லாத பகுதிகளில் டெங்கு நுளம்புகளால்; டெங்கு பரவுகிறது. இந்த விஷயத்தில் மக்கள் கைகளில் உள்ள தவறு மிகப் பெரியது என்றே கூறவேண்டும். மக்கள் எப்போதும் தங்கள் சுற்றத்தினை தூய்மையாகப் பேணுவதில் ஆர்வமாக இருக்க வேண்டும், 

ஆனால் இலங்கையில் உள்ள பல குடும்பங்கள் சுகாதாரத் திணைக்களம், பிராந்திய செயலகம், இராணுவம் அல்லது பொலிசார் ஒன்றிணைந்து டெங்குவை பரிசோதிக்கும் போதுதான் தங்கள் சுற்றத்தின் தூய்மை பற்றி சிந்திக்கிறார்கள். 

குடியிருப்பு வாசிகள் அதிகாலையில் எழுந்து தண்ணீர் நிரம்பிய தேங்காய் சிரட்டைகள்;, தகர பேணிகள், விளாம்பழ ஓடுகள் போன்றவற்றை மறுபுறம் உள்ள தோட்டத்தில் போட்டு தங்கள் வீட்டுச் சுற்றத்தினைப்போலவே ஆபத்தானதாக மாற்றுகிறார்கள். 

டெங்கு ஒழிப்புப்; பிரிவினர் தோட்டத்தை சுத்தம் செய்து விட்டு வெளியேறியவுடன், பழைய அசுத்தமான பழக்கம் மீண்டும் வந்துவிடுகின்றது. தண்ணீர் நிரம்பிய தேங்காய் சிரட்டைகள்; வானத்தைப் பார்க்கின்றன, அவற்றின் இளைய சகோதரர்களான விளாம்பழ ஓடுகளும் அதே வழியில் தண்ணீர் நிரம்பியுள்ளன. இந்த டெங்கு நுளம்புகள் தாங்கள் பிறந்த மண்ணில் உள்ள மக்களுக்கு மட்டுமல்ல, நோயினைப்; பரப்புகின்றன்

அவர்கள் பக்கத்து குடிமனைகளில்; உள்ளவர்களுக்கும் நோய் பரப்புகின்றனர். சில சமயங்களில் மேல்மாகாணத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைகளுக்கு டெங்கு நோயாளர்களே பிரதான வருமான ஆதாரமாக உள்ளனர். மாகாணத்தில் உள்ள அரச வைத்தியசாலைகள் டெங்கு நோயாளர்களால் நிரம்பியதையடுத்து, தனியார் வைத்தியசாலைகளுக்கு பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. 

இன்றைக்கு இந்நாட்டில் மிகக் குறைந்த விலையில் நாற்றமடிக்கும் தனியார் மருத்துவமனையில் ஒரு அறை கூட நாளொன்றுக்கு பத்தாயிரம் ரூபாயை நெருங்குகிறது. இதன் காரணமாக, தனியார் மருத்துவமனைகள் ஒரு நோயாளியிடம் தங்கும் அறைக்கட்டணம், மருந்துக் கட்டணம், ஸ்கேன் கட்டணம், ரத்தப் பரிசோதனைக் கட்டணம் போன்றவற்றில் குறைந்தபட்சம் இரண்டு முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை வசூலிக்கின்றன. 

நோயாளிக்கு உடல்நலக் காப்பீடு இருந்தால், அவர் நேரடியாக தனியார் மருத்துவமனைக்குச் செல்கிறார். பணமில்லாத கீழ் நடுத்தர வர்க்கத்தினராக இருந்தால், அவர் அரசு மருத்துவமனைக்குச் செல்கிறார். அரசு மருத்துவமனைகள் நிரம்பினால், நோயாளி நின்ற நிலையில் இருக்க வேண்டும், பரசிட்டமோலை மட்டும் மருந்தாக உட்கொண்டு, முடிந்த அளவு திரவங்களை அருந்த வேண்டும். இது நிகழும்போது, சில நோயாளிகளின் பிளேட்லெட் எண்ணிக்கை அதிகரித்து, அவர்கள் மரணத்திலிருந்து காப்பாற்றப்படுகிறார்கள். ஆனால், அந்த நோயாளி தனியார் மருத்துவமனைக்குப் போக வேண்டும் என்றால், மருத்துவமனைக் கட்டணத்தைப் பார்க்கும்போது, உயிருடன் இருப்பதை விட, இறந்துவிடுவதே மேல் என்பது நினைவுக்கு வரும்.

எனவே நாட்டில் உள்ள அனைவருக்கும் சுகாதாரக் காப்புறுதி கொண்டிருக்க வேண்டிய நாடு இலங்கை. ஆனால், மருத்துவக் காப்பீடு இருந்தாலும், சில அரசு மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் கூட இல்லை. நமது நாடு சுகாதாரத் துறையை விரைவில் சீரமைக்க வேண்டும். இல்லையெனில் டெங்கு நுளம்புகள் மற்றும் எலிக்காய்ச்சல் வைரஸ் போன்றவற்றில் பாதிக்கப்படும் மக்களைக் காப்பாற்ற முடியாது.

0 comments:

Post a Comment