ADS 468x60

19 May 2023

குழந்தைகளை மொபைல் போனுக்கு அடிமையாக்கினால்! நடப்பது என்ன?

இன்று உலகம் ஒரு கிராமமாகிவிட்டது. தொழில்நுட்பம் இல்லாமல் இது நடந்தது என்று சொல்ல முடியுமா? இல்லை. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் இருந்து பிறந்த இணையம்த்தினால் இன்று சமுகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது. இன்று சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் கிட்டத்தட்ட அனைவரும் இந்த இணையத்தைக் கையாள்கின்றனர். குறிப்பாக இன்றைய இளைஞர்கள் தொழில்நுட்ப உலகத்திலேயே வாழ்கின்றனர்.

இணையம் மூலம் உருவாக்கப்பட்ட சமூக வலைதள வசதிகள் தற்போது குழந்தைகளின் கல்விக்கு வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, குழந்தைகளை 'சமூக ஊடகங்களில்' இருந்து விடுவிப்பது அல்லது கட்டுப்பாடுகளை விதிப்பது நடைமுறையில் சாத்தியமற்றது. ஆனால் சமீப நாட்களாக தொடர்ந்து பதிவாகி வரும் குழந்தைகள் தொடர்பான 'சம்பவங்கள்' நேரடியாக 'சமூக ஊடகங்களின்' தாக்கத்தினை பிரதிபலிக்கத் தவறவில்லை.

குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவது குறித்து பரவலாக விவாதிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று பல புத்திஜீவிகளும் கூறிவருகின்றனர்;. இதனால் இவற்றில் இருந்து மீழ உண்மையில், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை தற்போது உள்ளது. 

'கொரோனா' தொற்றுநோய் காலத்தில், கணிசமான எண்ணிக்கையிலான (பாடசாலை) குழந்தைகள் ஒன்லைன் கல்விக்கு அனுப்பப்பட்டனர், மேலும் அவர்களில் சிலர் மொபைல் போன்கள் அல்லது கணினிகளுக்கு அடிமையாக இருப்பதாக புகார் தெரிவித்தனர். பாடசாலைக் குழந்தைகள் 'வீடியோ கேம்' களில் தீவிரமாக ஈடுபடுவதாகத் தெரிகிறது. இங்குள்ள பிரச்சனை என்னவென்றால், பல பெற்றோர்கள் 'எலக்ட்ரோனிக் ஸ்கிரீன்'களின் பயன்பாட்டைப் பெரிதாக இன்னும் புரிந்து கொள்ளவில்லை. குழந்தைகளைப் தொடர்ந்து கண்காணிக்க பெற்றோர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது நிபுணர்களின் கருத்து. 

குழந்தைகளுக்கு தொழில்நுட்பக் கருவிகள் கொடுக்கப்பட்டால், பெற்றோர்களும் அதைப் பற்றிய அறிவைப் பெறுவது அவசியம் என்பதை வலியுறத்தவேண்டியுள்ளது.

இன்றைய சமுதாயத்தில் பெரும்பான்மையான பெற்றோர்கள் தத்தமது உழைப்புக்கான போட்டியில் உள்ளனர். இத்தகைய பின்னணியில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் நல்ல உறவினைப்; பேண முடியாதுள்ளது. இதன் விளைவு, மனித உறவை இழந்து குழந்தைகள் 'தொழில்நுட்பத்தால்' விரக்தியடைகின்றனர். பதின்வயதினர் 100 பேரில் 13-14 பேர் மனச்சோர்வடைந்துள்ளனர் என அறிக்கை கூறுகின்றது. அதிலும் குழந்தைகளின் 'எலகட்ரோனிக் ஸ்கிரீன்' பயன்பாடும் இதில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

குறிப்பாக 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எலெக்ட்ரானிக் திரையைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மற்ற குழந்தைகள் கல்வியின் நலனுக்காக ஒரு மணிநேரத்திற்கு மேல் சாதாரணமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள். நம்மில் அதிகம்பேர் குழந்தையை ஒரே இடத்தில் நீண்ட நேரம் வைத்திருக்க, எளிதில் உணவு, பானங்கள் வழங்க 'எலக்ட்ரோனிக் ஸ்கிரீன்' மீது கவனம் செலுத்த மொபைல் போன்களை கொடுத்து சில பெற்றோர்கள பிள்ளைகளைப் பழக்கியுள்ளனர்;. இதனை செய்யக்கூடாத தவறு என்றே சொல்ல வேண்டும்.

குழந்தைகள் கணினி அல்லது மொபைல் ஃபோனைப் பயன்படுத்தினால் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அதை பெற்றோர்கள் புத்திசாலித்தனமாக செய்ய வேண்டும். வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் என அனைத்து 'சமூக ஊடகங்களையும்' குழந்தைகள் கையாள்வது போல் தெரிகிறது. ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் பயன்படுத்தும் போது, குழந்தைகள் தேவையில்லாத விஷயங்களுக்கு திரும்புவதற்கான வாய்ப்புகள் அதிகம். பெற்றோர்கள் இதையெல்லாம் அறிந்தால் எளிதாக இருக்கும்.

ஆதற்காக குழந்தைகளை தொழில்நுட்பத்திலிருந்து விலக்க முயற்சிப்பது சரியான பாதையில்லை. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால், பெற்றோர்கள் குழந்தைக்கு முன்னுதாரணமாக செயல்படுவதுடன், குழந்தை மின்னணு திரைக்கு அடிமையாகாமல் தடுக்க வேண்டும்.


0 comments:

Post a Comment