ADS 468x60

02 November 2023

ஜனவரி மாதம் முதல் பெறுமதி சேர்க்கப்பட்ட வரியை 18 வீதமாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம்

பெறுமதி அல்லது மதிப்பு கூட்டப்பட்ட அல்லது சேர்க்கப்பட்ட வரி 2002 இல் இலங்கை மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பிறகு, இது 19 முறை திருத்தப்பட்டுள்ளது. பொருட்கள் மற்றும் சேவை வரிக்கு பதிலாக, பொருட்கள் மற்றும் சேவைகளின் நுகர்வுக்கு விதிக்கப்படும் வரி என்று கூறுவதில் தவறில்லை. இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் இலங்கையின் எல்லைக்குள் வழங்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் இந்த வரியின் எல்லைக்குள் அடங்கும். பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலியின் ஒவ்வொரு கட்டத்திலும் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி இறுதியில் நுகர்வோரால் சுமக்கப்படுகிறது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பெறுமதி சேர்க்கப்பட்ட வரியை 18 வீதமாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதால் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி குறித்த விவாதம் இப்போது எழுந்துள்ளது.

சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர், அரசாங்கம் பொறுப்பற்ற முறையில் இத்தகைய வரிகளை விதித்தது. இப்படியே இறுதியாக, தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு வரி விதிக்கும் நாடாக இது வளர்ச்சி நிலையை அடைந்தது. யுத்தம் முடிவடைந்த பின்னரும், யுத்தத்தை வென்றோம் என்ற போர்வையில் அரசாங்கம் தொடர முடிந்தது. ஆனால், மக்களிடம் இருந்து ஏய்க்கப்பட்ட ரூபாய்கள் நாட்டின் சீர்திருத்தத்திற்கு அர்த்தமுள்ள வகையில் பயன்படுத்தப்படும் மேம்பட்ட ஆட்சி நம்மிடம் இல்லை என்பதே பிரச்சனை. இதன் இறுதி முடிவு என்னவென்றால், பொதுமக்களிடம் இருந்து கடைசியாக எடுக்கப்பட்ட சதக்காசு கூட நாட்டில் ஒரு சிறு கும்பலின் சூறையாடலுக்கு பயன்படுத்தப்பட்டது. இறுதியில், இரண்டு முக்கிய அரசியல் குழுக்கள் அதிகாரத்தைப் பெறும் நிலைக்கு நாட்டின் வரி அமைப்பு பயன்படுத்தப்பட்டதே தவிர, நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தினை நாடி அல்ல.

மகிந்த ராஜபக்ச ஆட்சி கவிழ்ந்த போது பெறுமதி சேர்க்கப்பட்ட வரி இன் மதிப்பு 11 வீதமாக இருந்தது. 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் அதனை 15 வீதமாக அதிகரிக்க தீர்மானித்தது. அந்த நேரத்தில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இந்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி, பாராளுமன்றத்தின் அனுமதியின்றி இவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது என உச்ச நீதிமன்றத்திற்கு சென்றார். 

அப்போது அரசு தரப்பில், செலுத்த முடியாத கடன் சுமைக்கு தீர்வு காணும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கில், இது முழுக்க முழுக்க பெறுமதி சேர்க்கப்பட்ட வரி மூலமே மக்களிடம் இருந்து பணம் பறிக்கப்பட்டது என்று மனுதாரர் ஆதாரம் அளித்தார். பின்னர், மற்றும் 2019 இல் ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தால் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி விகிதம் 8 வீதமாகக்; குறைக்கப்பட்டது. பாராளுமன்ற நிதித் தெரிவுக்குழுவும் இந்த தீர்மானத்திற்கு பாராளுமன்ற அங்கீகாரம் இல்லை என்று கூறி அதற்கு அங்கீகாரம் வழங்கவில்லை. பெறுமதி சேர்க்கப்பட்ட வரி குறைப்பு புதிய காபந்து அரசாங்கத்தின் கீழ் நடைமுறைக்கு வந்தது, 

இவ்வகையில், பெறுமதி சேர்க்கப்பட்ட வரிக்கு ஆதரவாகவும் எதிராகவும் நின்ற மக்கள் பிரதிநிதிகளின் கைகள் பெரும்பாலும் அரசியல் விசுவாசத்தைக் கொண்டிருந்தனவே தவிர, மக்களின் நன்மதிப்பைக் கொண்டிருக்கவில்லை. 2019 இல் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி குறைக்கப்பட்ட போது ஊக்கப்படுத்தப்பட்ட பொருளாதாரம் பற்றிய உண்மையான அறிவைக் கொண்ட அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன ஒரு சிறந்த உதாரணம். வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தில் மக்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இந்த முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்பட்டது என கலாநிதி குணவர்தனயன் அப்போது தெரிவித்தார். 

இன்று! பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கின்றபோது, இதே முடிவை இதே பந்துலாக்கள் எடுப்பர்களா!. எனவே புதிய வட் வரி பற்றி நாளை இந்த அறிவாளிகள் என்ன சொல்வார்கள் என்று நாம் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் அந்த கதைகளில்; பொருளாதாரம் பற்றிய கவலை இருக்கப்போவதில்லை, அரசியல் மட்டுமே இருக்கும். இவர்களிடம் இருந்து பொருளியல் என்ற அகராதிக்கு அர்த்தம் இல்லாமல் போனதுதான் நமது துரதிஸ்டம்.


0 comments:

Post a Comment