ADS 468x60

11 November 2023

நாட்டின் எழுத்தறிவு ஏன் வீழ்ச்சியடைந்துள்ளது


கல்வியே நமது தேசிய வளர்ச்சியின் அடிப்படை இருந்தாலும் 'கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்' என்பதற்கிணங்க கைவினைப்பொருளை நன்கு கற்றுக்கொண்டால், அது எதிர்காலத்தை மட்டுமல்ல, முழு வாழ்க்கையையும் காப்பாற்றும். இன்று இருக்கும் நிலைமையில் எமது கல்வியில் முழு நம்பிக்கை வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நமது நாட்டில் கல்வியறிவு எவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளது என்பதற்கு உதாரணம் இந்நாட்டின் கல்வியானது டியூஷன் மாபியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதொன்றே போதும்.

2022ஆம் ஆண்டுக்கான பொதுப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் பதினைந்து நாட்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதேவேளை, 2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான திகதி 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4ஆம் திகதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் துறையில் பல நடவடிக்கைகளில் 'நேர சூசி' மிகவும் முக்கியமானது. ஆனால் தேர்வுகள் ஒத்திவைப்பு, போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள், அவசரகால சூழ்நிலைகள் போன்ற பல்வேறு காரணங்களால் எதிர்பாராத காலவிரயம் தொடர்ந்தவண்ணமேயுள்ளது. இருப்பினும், இதுபோன்ற சூழ்நிலைகளை முடிந்தவரை குறைக்க வேண்டியது அவசியம். அதனால்தான் தாமதம் என்பது கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக பயன்படுத்தக் கூடாத வார்த்தையாகும்.

கல்வித்துறையில் உள்ள குறைபாடுகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். அதுவரை நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டம் செய்தோ அல்லது இசுறுபாய முன் கூச்சலிட்டோ மாத்திரம் இவ்வாறான குறைகளை தீர்க்க முடியாது. புhடசாலைகளில்; ஆசிரியர் வெற்றிடங்கள்; தொடர்பான ஆசிரியர்-மாணவர் கோரிக்கைகளுக்கு தற்காலிக தீர்வுகள் பயன்படுத்தப்படுவதுதான் இன்று காணப்படுகிறது. இவற்றுக்கு இன்னும் நிரந்தரத் தீர்மானம் கிடையாது. ;. 

2020 ஆம் ஆண்டில் இந்த நாட்டில் உள்ள 10,146 பாடசாலைகளில் 20 பாடசாலைகள் கடந்த சில வருடங்களில் மூடப்பட்டுள்ளன. பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கையும் தற்போது குறைந்துள்ளது. இதற்கு ஒரு தொடர் நடவடிக்கை இருக்க வேண்டாமா? பொதுக்கூட்டங்களில் கதைப்பதால் மட்டும் இந்த நாட்டில் கல்வியை மாற்ற முடியாது. வெறும் குழுக்களை நியமித்தல் எல்லாம் வேலை செய்யாது. அதுபோல அரசியல் அதிகாரத்தால் மட்டும் நாட்டின் கல்வியை மாற்ற முடியாது.

நாட்டின் பொருளாதார நெருக்கடியை விட கல்வி நெருக்கடி மிக மோசமானதாக இருக்கலாம். தீவிரமாக இருக்கலாம். நோய் தீவிரமடைவதற்கு முன் வைத்தியம் செய்ய வேண்டும். அது எங்கே இங்கு நடைபெறுகின்றது. வென்டிலேட்டருடன் இணைக்கப்பட்டதன் மூலம் கல்வியின் இதயத்தை மீட்டெடுக்க முடியாது இதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். நாட்டின் எழுத்தறிவு ஏன் வீழ்ச்சியடைந்துள்ளது என்பதை நாம் கண்டறிய வேண்டும். அதற்கு இன்று பாரிய அறிவுப் புரட்சியே தேவை. இது செயற்கை நுண்ணறிவுடன் மட்டுப்படுத்தப்பட முடியாது. ஆனால் இன்னு படித்த சமுகம் சுயநலமுள்ள சமுகமாக, பொறுப்பற்ற சமுகமாக வலம்வருவது எமது நம்பிக்கையில் மண்ணைத் தூவியுள்ளதென்றே கூறவேண்டும்

0 comments:

Post a Comment