ADS 468x60

13 September 2024

அனுரவும் ஐ எம் எவ்வும்

 அன்புள்ள நண்பர்களே, இன்று நாம் சந்திக்கும் மிக முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி பேச விரும்புகிறேன் – நமது நாடு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஆகு) தொடர்பு மற்றும் இதைப்  பற்றி தேசிய மக்கள் சக்தி எவ்வாறான நிலைப்பாட்டினைக்கொண்டுள்ளது என்பதனைப் பார்க்க இருக்கின்றோம்.

இலங்கை இன்னும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ளது யாரும் மறுக்க முடியாது. இதனைத் தீர்பதற்கு, அரசு ஐ.எம்.எப் உடன் ஒப்பந்தங்களில் ஈடுபட்டு, பாரிய பொருளாதார கட்டுப்பாடுகள், வரிவிதிப்பு மீதான அதிகரிப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளில் செலவு  கள் என்பனவற்றினை  குறைத்து நடவடிக்கை எடுத்தது. இந்த நடவடிக்கைகள் குறித்த காலத்தில்  பொருளாதாரத்தை நிலைப்படுத்த உதவியிருக்கலாம், ஆனால் இது பொதுமக்கள், குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தை அதிகமாக பாதித்துள்ளது.

தே.ம.சக்தி; சர்வதேச அமைப்புகளுடன், குறிப்பாக ஐ.எம்.எப் உடன் பணியாற்றுவதின் அவசியத்தை புரிந்து கொண்டுள்ளது. அதே நேரத்தில், இந்த ஒப்பந்தங்கள் நமது மக்களின் நலனுக்குப் பாதிப்பை ஏற்படுத்த கூடாது என்பதையும் அவர்கள் புரிந்துகொண்டுள்ளனர். ஐ.எம்.எப்  உடன் செய்யப்படும் ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்து, பொதுமக்கள் மீது சுமையைக் குறைப்பதே தே.ம.சக்தியின் நோக்கமாக உள்ளது.

தே.ம.சக்தியின் முக்கிய நோக்கங்களில் ஒன்றானது சுகாதாரம், கல்வி, மற்றும் சமுக நலப்பணிகள் போன்ற அத்தியாவசிய சேவைகளை பாதுகாப்பதாக இருக்கி;ன்றது. தே.ம.சக்தியின் அணுகுமுறை, பொதுமக்கள் மீது அநியாயமான சுமையை ஏற்படுத்தாமல், பெரிய வசதிபடைத்தவர்களும், நிறுவனங்களும் சமமான விதத்தில் வரி செலுத்த வேண்டும் என்பதற்காக கவனம் செலுத்தியுள்ளது.

மேலும், தே.ம.சக்தியின் முக்கியமான நோக்கம் உள்நாட்டு பொருளாதாரத்தை சீரமைத்து, வெளிநாட்டு கடன்களைப் பொறுத்து நம்முடைய அனாவசிய செலவினைக் குறைப்பது. நமது நீண்டகால நோக்கம், நமது பொருளாதாரம் பலவீனமாக இல்லாமல், சுயாதீனமாக ஒரு வலிமையான பொருளாதாரத்தை உருவாக்குவதே.

ஆகவே, தே.ம.சக்தியின்; ஐ எம் எவ் தொடர்பான அணுகுமுறை சர்வதேச ஒத்துழைப்பை மறுக்கும் ஒன்றல்ல, ஆனால் அந்த ஒத்துழைப்பு இலங்கையின் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதையே பிரதானமாகக் கொண்டது. அவர்களது சுயாட்சியை அல்லது நம் மக்களின் வாழ்க்கை தரத்தை பாதிக்காமல், சர்வதேச ஒப்பந்தங்கள் மக்களுக்கு நன்மை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நிலைப்பாடு. 


நன்றி!


0 comments:

Post a Comment