ADS 468x60

07 September 2024

ஏன் ஒரு புதியவரை ஆதரிக்கக்கூடாது?

அனைவருக்கும் வணக்கம்!, இன்று பலர் கேள்விகள் கேட்கின்றார்கள் ஏன் நாம் அனுரவை ஆதரிக்க வேண்டும் என்று? நான் கேட்கின்றேன் ஏன் அவரை ஆதரிக்கக்கூடாதென?

இன்று மக்கள் அனைவரும் ஒரு நேர்மறையான மாற்றத்தினை எதிர்பார்கின்றனர். தேசிய மக்கள் சக்தியே இன்று மாற்றத்தின் ஒரே ஒரு முகவராக மாறியுள்ளனர். கசப்பான பாரம்பரியச் அரசியல் சாக்கடைக்குள் மக்கள் மீண்டும் அகப்பட விரும்பவில்லை. 

தாங்க முடியாத நாட்டின் கடன் அதிகரிப்பு, மோசமான வரிச்சுமை, தவறான திட்டமிடப்பட்ட இறக்குமதித் தடைகள், மற்றும் நாட்டின் ரூபாயின் மதிப்பிறக்கம், பற்றாக்குறையான வெளிநாட்டுக் கையிருப்பு, அசமந்தமான வினைத்திறனற்ற ஆட்சி, தலைவிரித்தாடும் குடும்ப மற்றும் அரசியல் ஊழல். குண்மூடித்தனமான சுரண்டல் போன்ற கலாசாரத்தில் ஊறிய ஒரு பின்னணி உள்ள எவரையும் மக்கள் விரும்பவில்லை என்பதனை பலர் ஊடகங்களில் நேரடியாகச் சாடி வருகின்றனர்.

இந்த நிலமைகாரணமாகவே முன்னய அரசாங்கத்துடன் மக்கள் ஆத்திரமடைந்தனர். இன்று மக்கள் தமது தவறை உணர்ந்து அதனை சரிசெய்யும் சரித்திரச் செய்தியினை சொல்ல நாட்குறித்து காத்து நிற்கின்றனர்.

அதுபோல தொழில் வல்லுநர்கள் மற்றும் வர்தகர்கள் அதிக வரிகளைப் பற்றி புகார் செய்கின்றனர், மேலும் அனைத்து மக்களும் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் எதிர்பார்க்கும் அமைப்பு மறுசீரமைப்பு இன்னும் இன்றுள்ள அரசியலில் உணரப்படவில்லை. மேலும் பொருளாதார மீட்சி என்பது பொறுப்புக்கூறல் இல்லாத, ஊழல் நிறைந்த அமைப்பின் கீழ் ஏற்பட்ட சிறிதளவு மாற்றம் மட்டுமே என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்தப் பின்னணியில்தான் அனுரவை ஆதரிக்க பலர் அலை அலையாக இலங்கைத் தேசத்தில் அணிதிரண்டுள்ளமை நான் சொல்லி தெரியவேண்டியதல்ல.

நாம் அனைவரும் எதிர்வரும் 21 ஆம் தேதி ஒரு ஜனாதிபதியினை தெரிவு செய்ததன் பிறகு அவர் நல்லவராக கெட்டவரா என்பதில் நாம் எதுவித கருத்தும் சொல்ல முடியாது. ஆனால் அவரை தெரிவு செய்தமைக்கான முழு பொறுப்பும் இந்த நாட்டு மக்களே பொறுப்பேற்க வேண்டும்.

ஏற்கனவே நாம் பல தலைவர்களை தேர்வு செய்து அந்த பொறுப்பை நமது தலையில் கட்டி கட்டி இன்று நடுத்தெருவில் வந்து நிற்கின்றோம். அவ்வாறு மக்களை உதாசீனம் செய்து மக்களை பின் தள்ளிய எவரையும் தேர்வு செய்யாமல் இம்முறை இந்த மக்களுக்காக குரல் கொடுக்கின்ற, மக்களின் தோழனாக இருக்கின்ற, மக்களுக்காக பாடுபட பல திட்டங்களை எடுத்து வருகின்ற ஒருவரை ஏன் நாம் தெரிவு செய்யக்கூடாது என்பது எனது கேள்வி.

எஸ்.சீலன் 


0 comments:

Post a Comment