தந்தனத் தந்தனத் தந்தனத் தந்த்னத்
ததானத் தானினா
தந்தனத் தந்தனத் தந்தனத் தந்தனத்
தானத் தானினா
தந்தனத் தந்தனத் தந்தனத் தந்த்னத் ததானத் தானினா
வாடக்காத்து கலகலக்குது வானம் இப்போ வெழுவெளுக்குது
கூட வந்து உதவட்டுமா அத்தானே
வயல் விளைந்து கதிரு குனிந்து நிக்குது அத்தானே
போடி புள்ள புயல் இருக்காம்
பொறுமையாக காத்திருப்போம்
தையும் பிறந்து மலரட்டுமே
கண்ணம்மா
கையும்காலும் இருக்கப்
பயம் என்னம்மா
சாணி போட்டு மெழுக வேணும்
சாமான் சக்கட்டு வாங்க வேணும்
தலைக்கு மேல வேலை இருக்கு
அத்தானே
தலப் பொங்கலயும் மறந்ததென்ன
அத்தானே
ஆத்த கடந்து போக வேண்டும்
அருவி வெட்ட ஆள் பிடிக்கணும்
மூளையெல்லாம் அதில இருக்கு
கண்ணம்மா
உண்ட வேலையை நீ இப்ப பாரு
பொன்னம்மா
புதுசா உடுப்பு வாங்க வேணும்
பொங்கல் பானை பார்க்க வேணும்
அதிசயமா உங்க கதை அத்தானே
இப்ப அருவி வெட்டப் போகணுமா
அத்தானே
டவுனுப் பக்கம் நாளைக்கு
நான் சாக்கு கயிறு வாங்க வேண்டும்
உடுப்பும் வாங்க
திட்டமிருக்கு கண்ணம்மா
உனக்கு சாறி சட்டை எடுத்து
தாரேன் என்னம்மா
சீனி சக்கர சோப்பு சீப்பு
பாணியோட ஏலம் கறுவாய்
தானியங்கள் வாங்க வேணும்
அத்தானே
அந்த உணவு விளைய மழைய வருணன்
பெய்தானே
நன்றி நாங்க சொல்ல வேணும்
நாடு இருக்கும் நிலையில் இப்போ
நாமும் உண்டு வாழ வழி
செய்தானே
அந்த உணவு விளைய மழைய வருணன்
பெய்தானே


0 comments:
Post a Comment