மலர்ந்திருக்கும் 2026 புதிய வருடம் கடந்து வந்த ஆண்டிலிருந்து நாம் முயற்சி பெறுவதற்கான, மீண்டெழுவதற்கான, வெற்றிகளைச் சுவைப்பதற்கான ஒரு ஆண்டாக
அமையும் என்ற உறுதியான நம்பிக்கையில் இன்று உங்கள் அனைவரோடும் எனது புத்தாண்டு
வாழ்த்துக்களைப் பகிர வந்துள்ளேன்.
பொருளாதார
ரீதியாகவும், வேறு பல சவால்களாலும் பல பின்னடைவுகளைக்
கொண்டு தந்த 2025 ஆம் ஆண்டினை, நாம் உண்மையில் துயரத்துடன் அல்லாமல், அதன் அனுபவங்களிலிருந்து பாடம்
கற்றுக்கொண்டு, அதை ஒரு பலமான அடித்தளமாக மாற்றிய
மனநிறைவுடன் மகிழ்ச்சியுடன் வழி அனுப்பி வைக்க வேண்டும். அதேபோன்று, அவ்வாறான ஒரு சவாலான ஆண்டிலிருந்து புதிய
ஆண்டு எங்களுக்கு வருகின்ற பொழுது, மனதார ஒரு துயரமான ஆண்டிலிருந்து ஒரு மகிழ்ச்சியான ஆண்டில் காலடி எடுத்து
வைக்கின்றோம் என்கின்ற நேர்மறை எண்ணம் உங்களில் ஒவ்வொருவருக்கும் ஆழமாக வேரூன்ற
வேண்டும்.
எல்லா
சவால்களையும் மீறி, அவற்றை எதிர்த்து நின்று கடந்து வந்து, இன்னமும் தளராமல் மீண்டெழுகின்ற சக்தியோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் நாம்.
இந்தப் புதிய ஆண்டில், அந்தச் சக்தியை இன்னும் பலமடங்கு
கூட்டிக்கொண்டு, விழுந்த இடத்தில் இருந்து சிறகடித்துப் பறக்கும் குஞ்சுகள் போன்று, இந்த 2026 ஆம் ஆண்டில் பரந்த வானத்தில் மகிழ்ச்சியோடும், வெற்றியோடும் பறந்து வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும்.
உங்கள்
ஒவ்வொருவரின் வீடுகளிலும், வாழ்விலும் சந்தோஷம் பொங்கட்டும்!
புதிய
முயற்சிகளும், நேர்மறை எண்ணங்களும், மீண்டெழும் சக்தியும் நிறைந்த ஒரு வெற்றி ஆண்டாக 2026 அமைய உளமார வாழ்த்துகிறேன்!
அனைவருக்கும்
எனது இதயம் கனிந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
உங்கள் S.T.Seelan


0 comments:
Post a Comment