ADS 468x60

02 November 2026

கடும் மழையும், வீசிய பலத்த காற்றும், திடீரென எழுந்த வெள்ளமும் இனி வரப்போகும் காலநிலையின் முன்னோட்டம்

கடந்த வாரம் பெய்த கடும் மழையும், வீசிய பலத்த காற்றும், திடீரென எழுந்த வெள்ளமும் தற்செயலான நிகழ்வு அல்ல. அவை இனி வரப்போகும் காலநிலையின் முன்னோட்டம். செயற்பாட்டிலுள்ள எல் நீனோ (El Niño – பசிபிக் கடலின் மேற்பரப்பு அசாதாரணமாக வெப்பமடையும் நிகழ்வு) சூழலில், இத்தகைய தீவிர வானிலை மாற்றங்கள் குறுகிய இடைவெளிகளில் மீண்டும் மீண்டும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உண்மையுடன் வாழப் பழகுவதே இன்றைய காலத்தின் தேவை.