ADS 468x60

அழகு தேற்றாத்தீவு..

வணக்கம். "நேர்மையான வழியில் கிடைக்கிற தோல்வி , அயோக்கியமான முறையில் வரும் வெற்றியை விட சிறந்ததாகும்."

06 January 2018

அடையாளங்கள் நம்கையை விட்டுப்போகாமல் கட்டிக்காப்பது நமது கையில்தான் உள்ளது.

நமது பாரம்பரியத்தினை போற்றும் விதமாகவும் நினைவூட்டும் விதமாகவும் சர்வதேச வேஷ்டி தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. எமது தமிழர்கள் சாதி மதம் கடந்து அவர்களது அடையாளமாக ஆண்கள் அணிய விரும்புவது வேஷ்டியைத்தான். ஆண்களின் கம்பீரத்துக்கு அடையாளமாகவும் நமது கலாசாரத்துக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்வது இந்த வேஷ்டிதான். நமது  தட்ப்ப வெட்ப நிலைக்கு 100 சதவிகிதம் பொருத்தமானதும் வேஷ்டிதான்.

தமிழர்களின் பாரம்பரிய அடையாளச் சின்னமாகத் திகழும் உணர்வுமிக்க ஆடையான இந்த வெண்ணியற ஆடை வேஷ்டியை உடுத்துக்கொண்டு செல்லும்போது இனம்தெரியாத ஆழுமைத் தோற்றமும் கம்பீரமும் தானாகவே வந்துவிடுகின்றது. வேஷ்டி உடுத்துபவர்களின் மனசி நேர்மையாகவும், தூய்மையானதாகவும் இருக்கும் என்பதுதான் எமது மூதாதையர்களின் நம்பிக்கை. அது இப்போது இருக்கிறதா இல்லையா என என்னிடம் கேட்காதீர்கள்.

04 January 2018

மட்டக்களப்புக்கு வாங்க- சும்மா மனசு மகிழ்ந்து போங்க!!


வாவி வளைந்து ஓட
வரும் மீன்கள் விளையாடி
கூவி குரவைபோட்டு
கூடி நல்ல பாட்டிசைக்கும்
மட்டக்களப்புக்கு வாங்க- சும்மா
மனசு மகிழ்ந்து போங்க

03 January 2018

ஓன்றுபட்டால் வென்றிடலாம் தோழா!

ஓன்றுபட்டால் வென்றிடலாம் தோழா- நீயும்
உணா்வில்லாமல் ஒதுங்குகின்ற ஆளா
ஏங்கித் தவிக்கும் எம் இனத்தை
எழுச்சி பெற எழுந்து வந்து
வாக்களிப்பை கையிலெடு தோழா ஓகோ

02 January 2018

மீண்டும் எதற்கு வந்தீங்க! எம்மை ஆண்டு என்னத்த தந்தீங்க!

பாரு மகனே பாரு- இங்கு
பாழாப் போகுது ஊரு
வேறு ஒருவர் ஆழக் கொடுத்து
வேதனை தந்தது யாரு!
வேதனை தந்தது யாரு!

பேசிப் பேசி காலங்கழித்து
வீதியில் எறிந்த யாரு- எமை
பேதையாக்கி பாதையெல்லாம்
போதை வளர்த்த யாரு
மீண்டும் எதற்கு வந்தீங்க- எம்மை
ஆண்டு என்னத்த தந்தீங்க
கட்சி பார்த்து களைத்த எமக்கு என்றும்
காரியம் செய்திடும் ஆள்வேண்டும்

31 December 2017

எல்லைக் கிராமங்களில் சிறுவர்களின் கவலைக்கிடமான போஷாக்கு மட்டம்.

சிறுவர்களின் உள, உடலியல் ரீதியான வளர்ச்சியில் முன்பள்ளிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தனி மனித ஆளுமையிலும் சமூக மாற்றத்துக்கான மனப்பாங்கினை வளர்ப்பதிலும் முன்பள்ளிக் கல்வி என்பது பெறும் முக்கியத்துவமும் தேசிய -சர்வதேசிய ரீதியில் உணரப்பட்டவையாகவும் காணப்படுகின்றது. நாட்டின் பிற சமுக சிறார்களுக்கான முன்பள்ளி ஏற்பாடுகள் திட்டமிட்ட முறையில் நடைபெற்று வரும் நிலையில் மட்டக்களப்பின் முன்பள்ளி நிலை மிக மோசமான கட்டத்திலேயே இருப்பது கவலைக்குரியது. இவை முன்பு மொன்டிசோரி, நர்சரி, பாலர் பாடசாலை என்றெல்லாம் வழங்கப்பட்டு தற்போது முன்பள்ளிகளாக தொடர்கின்றது.

26 December 2017

மறக்கவில்லை உன் வஞ்சக்குணத்தை!!

கடல் நான் அறிந்த மட்டில்
நீதான் உலகின் முக்கால்
அறியாதவற்கு நீயே சிக்கல்
உன்னில் பயனித்தே நாடுகளைக் கண்டான்
உன்னை நம்பியே உணவுகளை உண்டான்
பவளமும், முத்தும் பரிசளித்தாய்
பசுபிக்கடலில் தீவுகள் தந்தாய்

25 December 2017

"உங்களை ஆதரிப்பதில் வேலை இல்லை" இவை இல்லாவிடின்!


எம்முடைய ஊரில் பல படித்த அறிஞர்களும், அரசியல் நுட்பம் தெரிந்தவர்களும், மிகவும் நேர்மையானவர்களும், சமூக சேவகர்களும், எதிர்கால அபிவிருத்தி (நிலைத்திருக்கும்) பற்றித் திட்டமுள்ளவர்களும், நிருவாக ஆளுமை, தலைமைத்துவம், ஊழலை விரும்பாதவர்கள் என எல்லா திறமையுமுள்ளவர்கள் பல கட்சிகளில் தேர்தலில் களமிறங்கியுள்ளதாக முகப்புத்தகம் மூலமும், முகம் தெரிந்தவர்கள் மூலமும் அறியக் கிடைத்தது மகிழ்ச்சி!

02 December 2017

மண்ணின் கனவுகளைச் சுமந்துவரும் 'ஊர்க்குருவியின் உலா'

நடைபெற்று முடிந்த புத்தக வௌியீட்டு நிகழ்வினை மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தினர், அதன் செயலாளா் ஓய்வு பெற்ற அதிபர், சமாதான நீதவான் வே.தவராசா அவர்கள் தலைமையில், இனிதே நடாத்தி முடித்து வைத்தனா்.
தமிழ் சங்கத்தினரின் தட்டிக்கொடுப்பினையும், பாராட்டினையும் முழு உதவியினையும் நான் மனதில் இருத்தி நன்றி கூற விரும்புகின்றேன்.
தொடர்ந்து மழை பொழிந்து கொண்டிருந்தது, ஆனால் எமது நிகழ்வில் மாத்திரம் காலையில் இருந்து மாலை வரை வெறும் இதமான கோடையாக வெயில் எறித்தது. வர்ணபகவானின் ஆசிதான் எம்மை அன்று வடிவாக நடாத்த உதவியது. நன்றி இயற்கையே! மனிதர்களை விட உன் உணர்வு பெரியதுவோ!

27 November 2017

எனது ஊர்க்குருவியின் உலா கவிதை நூல் மற்றும் கவிதைகளடங்கிய இறு வட்டு வெளியீடு.

எனது 'ஊர்க்குருவியின் உலா' எனும் கவிதை நூல் வெளியீடானது 2ம் திகதி டிசம்பர் மாதம் 2017 சனிக்கிழமை அன்று மட்டக்களப்பு மகஜனக் கல்லூரி கலையரங்கில், மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத் தலைவர் சட்டத்தரணி மு.கணேசராசா அவர்களின் தலைமையில் இடம்பெற உள்ளது. 

இந்த நூலின் முதற்பிரதிகள் 25.11.2017 அன்று கௌரவ எதிர்கட்சித்தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சட்டத்தரணி கௌரவ இரா. சம்மந்தன் அவர்களிடம் வழங்கிவைக்கப்பட்டது. அத்துடன் அடுத்த பிரதி தமிழ் அரசிக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ மாவை சேனாதிராசா அவர்களிடமும், அடுத்த பிரதி ஜனாதிபதி சட்டத்தரணியும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ சுமேந்திரன் அவர்களிடமும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.