நம் நாட்டில் நல்ல மனிதர்கள் அரசியலுக்கு வந்த காலம் ஒன்று உண்டு. பொது சேவையில் தங்களை அர்ப்பணிப்பது மட்டுமே அவர்களின் நோக்கமாக இருந்தது. இப்படிப்பட்ட சில அரசியல்வாதிகள் மக்களுக்காகத் தங்கள் சொத்துக்களையும், செல்வங்களையும் தியாகம் செய்த அரிதான சந்தர்ப்பங்கள் நம் வரலாற்றில் உண்டு.
ஆனால் கடந்த காலங்களில் எமது நாட்டில் அரசியலை ஒரு தொழிலாகக் கொண்ட ஒரு கூட்டம் இந்த நாட்டைக் கொள்ளையடித்தது. மக்கள் வறுமையில் வாடும்போது, அரசியல்வாதிகள் எல்லா வகையிலும் கொழுத்தவர்களாக மாறினர். லஞ்சம், ஊழல், கமிஷன் போன்றவற்றுக்கு அடிபணிந்த அரசியல்வாதிகள் பல்வேறு திட்டங்களில் மட்டுமின்றி, பாதைகள் அமைக்கும் வேலையில்கூட சுரண்டலையும், கமிசனையும் பயன்படுத்தி வந்தனர். இந்த கேவலமான அரசியலை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. மக்களையும் நாட்டையும் நேசிக்கும் உண்மையான மக்களே இந்த அரசியலுக்கு சொந்தக்காரர்களாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட மக்கள் நேசிப்பும் தேசப்பற்றும் கொண்ட அரசியல்வாதிகளால் மட்டுமே வீழ்ந்த நாட்டை மீட்க முடியும்.
களுத்துறை மாவட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினராகவும், முன்னாள் பிரதி அமைச்சராகவும் இருந்த திரு பாலித தேவரப்பெரும அவர்கள், மேற்கூறிய அரசியல் எமது நாட்டில் வேரூன்றியிருந்த கால கட்டத்தில்; மரணமடைந்தார். பல அரசியல் வாதிகளின் மரணத்திற்குப் பின் அவர்களின் செயற்பாடுகள் குறித்து எமது நாட்டு மக்கள் அவ்வளவாகப் பாராட்டுவதில்லை என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஆனால் பாலித தேவரப்பெரும என்ற அரசியல்வாதியின் மரணத்தின் பின்னர் எமது நாட்டு அரசியலில் புதிய விவாதம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
முகநூலில் வெளியான ஒரு பதிவில் கூட அவரைப் பற்றி யாரும் தவறாகப் பேசியதை நாங்கள் பார்க்கவில்லை. பலர் அவருடைய நற்பண்புகளைப் பார்க்கிறார்கள். ஒரு அரசியல்வாதிக்குக் கிடைக்காத பிரபல்யம் இவருக்கு உண்டு. பாலித தேவரப்பெரும இன்று எம்முடன் இல்லாவிட்டாலும் அவர் விதைத்த பயிர்களின் நல்ல பலனை அவர் அறுவடை செய்வார் என நம்புகின்றோம்.
அட்டலுகம பிரதேசம் கொரோனாவின் போது பூட்டப்பட்டது. அப்போது அப்பகுதி மக்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனை நிவர்த்தி செய்ய அப்பகுதி மக்களுக்கு உணவு வழங்கினார். இந்த விஷயங்கள் மட்டும் போதும் அவரின் மனிதாபிமான அரசியலை புரிந்து கொள்ள. அவர் மத்துகம உள்ளூராட்சி சபையின் தலைவராக பதவியேற்றதும் மிகவும் முன்னுதாரணமாக செயற்பட்டார். அதிகாரிகள் நாற்காலிகளை சூடாக்கிக் கொண்டிருந்த போது, அசிங்கமான மண்வெட்டியை கையில் எடுத்துக்கொண்டு வேலையில் இறங்கினார் தேவரப்பெரும. அதிகாரிகளை விட அரசியல்வாதி முந்த வேண்டும் என்பதை பலமுறை நிரூபித்துள்ளார்.
தேவரப்பெருமயின் வாழ்வில் மிகவும் சாதகமான அம்சம் இந்த வாழ்க்கையைப் பற்றிய புரிதல். பல அரசியல்வாதிகள் மக்கள் சொத்துக்களை நாசுக்காக கொள்ளையடித்த போது, மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை இவர் செய்தார். அவர் இறப்பதற்கு முன் தனது கடைசி பயணத்திற்கு தயாராக இருந்தவர். அதற்கான அனைத்தையும் தயார் செய்து, உடலை அடக்கம் செய்ய கல்லறையை ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்தார். எவ்வளவு செல்வம் சேர்த்தாலும் நாம் ஒரு நாள் இறந்துவிடுவோம் என்பதை திடமனம் படைத்தவர்களால் மட்டுமே நினைவில் கொள்ள முடியும். மறுபுறம், பெரும்பாலான மக்கள் அவர்கள் எப்போதாவது இறந்துவிடுவார்கள் என்று புரிந்து கொண்டால் தவறு செய்ய மாட்டார்கள். நமது நாட்டின் அரசியல் கலாசாரம் மாற வேண்டும் என்று மூன்றாவது முறையாக நமக்குக் கற்பித்த பாடம் இது. குறிப்பாக நம் நாட்டில் சாகக் கூடாது என்று நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு இவரின் குணாதிசயத்தில் இருந்து கற்றுக் கொள்ளக்கூடிய பாடங்கள் ஏராளம்.
0 comments:
Post a Comment