ADS 468x60

29 December 2019

பொறுப்புக் கூறவேண்டிய அரசியல்வாதிகளும் பொறுமையிழக்கும் மட்டு மக்களும்.

எதிர்வரும் 2020 பொதுத் தேர்தலுக்காக எமது நாடு தயாராகிக்கொண்டிருக்கின்றது. அதே நேரம் இந்த நாட்டினை கொண்டு நடாத்த பதிய ஜனாதிபதி தெரிவாகி விட்டார். அவர் ஏற்கனவே செயலில் இறங்கி சேவை செய்ய ஆரம்பித்து விட்டார்.

எமது மக்களுக்கு சேவை செய்ய என ஒரு ஜனாதிபதியை தெரிவு செய்ய கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய்க்களை செலவு செய்து உள்ளோம். அத்தனை ரூபாக்களும் நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் உழைப்பாளரின் வரிப்பணத்தில் செலவிடப்பட்டுள்ளது.

அடுத்த தேர்தலுக்காக கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய் தேவைப்படுகின்றது. அந்தப் பணமும் வியர்வை சிந்தி, இரத்தத்தினை சாறாக்கி இராப்பகலாக செய்த வேலையில் கிடைத்த வேதனப் பணம் என்பதை அதைகொடுத்த மக்களே மறந்துவிடுவதுதான் வேதனைக்குரியது. 

22 December 2019

காலநிலைக்கு முகம்கொடுக்கும் அபிவிருத்தி இல்லாமையே அழிவுக்குக் காரணம்.

இந்நாட்களில் பெய்துவரும் அடைமழையானது மக்களுக்கும், பயணிகளுக்கு மிகவும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் விடயமாக மாறிவிட்டது. மாலை நேரங்களில் திடீரென பெய்யும் இம்மழையினால் வீதிகளில் வெள்ளம் ஏற்படுவதோடு நீண்ட நேர போக்குவரத்து இடையூறையும் ஏற்படுத்துகின்றது. இவ்வாறு தடைப்பட்ட வீதிகளானது பயணிகளுக்கு தங்களுடைய வீடுகளுக்கான வழியை கண்டுபிடிப்பதே சாத்தியமற்றதாக மாற்றுகிறது. இலங்கையின் மழைவீழ்ச்சி ஒழுங்கானது மாற்றமடைவதோடு காலநிலையால் பாதிப்படையும் நாடுகளில் ஒன்றாக இலங்கையும் கருதப்பட்டு வருகின்றமயால் இன்று நாம் காலநிலை நெகிழ்திறனுடன் கூடிய உள்கட்டமைப்பு அமைப்பு பற்றிய தீர்வுகளை எடுக்க வேண்டும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

21 December 2019

ஒற்றுமை வளர்க்கும் கி.ப.க நண்பர்களின் ஒன்றுகூடல்

ஒரு குழந்தை கனவானாகவோ, சீமாட்டியாகவோ இருக்கும்படி செய்வது கல்வியல்ல; நல்ல மனிதனாக இருக்கச் செய்வதே கல்வி! 
-ஹெர்பர்ட் ஸ்பென்ஸர்

எனும் நல்வாக்கியத்துடன், இன்றய நாளில் நாம் பல விடயங்களுக்காக ஒன்றுகூடவேண்டியிருக்கிறது. 

நமது வாழ்க்கை வட்டத்தில் ஒன்று சேர்ந்து பல்கலைக்கழகத்தில் கற்று இன்று ஒன்றரை தசாப்தம் கடந்து பல அனுபவம், கல்வி, திறன் மேம்பாடுடையவர்களாக ஒன்றுகூடியிருக்கின்றோம். இந்த ஒன்றுகூடல் எம்மை பனியிலும், வெயிலிலும், காட்டிலும், மேட்டிலும் கஷ்ட்டப்பட்டு உழைத்த வரிப்பணத்தில் நாம் இன்று இலவசமாகப் பயின்றவர்கள்.  இன்று நாம் ஊதியத்துக்காக மக்கள் பணியென செய்யும் வேலை தவிர, எமது சமுகத்துக்கு பிரதியுபகாரம் இன்றி எதை நாம் செய்துள்ளோம்? எனச் சிந்திக்க வேண்டிய உன்னத தருணத்தில் சிந்திக்கத் தூண்டியுள்ளது.

05 December 2019

பொருளாதார முன்னகர்வில் புதிய அரசிக்கு இருக்கவேண்டிய கருசனை என்ன?

புதிய ஜனாதிபதியும் அமைச்சரவையும் அவர்களுக்கு முன் பல சவால்களை எதிர்கொள்கின்றனர் , ஏனெனில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்கள் வரையில் அவர்கள் ஒரு சிறப்பான நிர்வாகக் கட்டமைப்பை கட்டியெழுப்ப வேண்டிய தேவை காணப்படுகின்றது . அவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்று, இலங்கை மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வேலைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதாகும்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு ILO (ச.தொ.அ) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, வளர்ச்சியடையாத மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் மொத்த வேலைவாய்ப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு சிறிய பொருளாதார அலகுகளால் வழங்கப்படுகிறது, அதாவது கொள்கை வகுப்பாளர்கள் இந்த அலகுகளை பொருளாதாரத்தின் மையப் பகுதியாகவும், சமூக மேம்பாட்டு உத்திகளாகவும் கருத வேண்டும்.